என் மலர்
திண்டுக்கல்
- பழனி அருகே வரதமாநதி மற்றும் குதிரையாறு அணைகள் மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில் அமைந்துள்ளது. தொடர் மழை காரணமாக அணைகளுக்குநீர்வரத்து அதிகரித்தது.
- பாலாறு அணையில் இருந்து இன்றுமுதல் 120 நாட்களுக்கு 1220 கனஅடிநீர் திறக்கப்பட்டுள்ளது.
பழனி:
பழனி அருகே வரதமாநதி மற்றும் குதிரையாறு அணைகள் மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில் அமைந்துள்ளது. தொடர் மழை காரணமாக அணைகளுக்குநீர்வரத்து அதிகரித்தது. இதனால் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்தது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து பழனி பகுதியில் நேற்றுஇரவு முதல் சார ல்மழை பெய்து வருகிறது. வரதமாநதி அணைஅதன் முழுகொள்ளளவான 66 அடியை எட்டி கடந்த சில நாட்களாக உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று முதல் 120 நாட்களுக்கு 720 கனஅடிநீர் வெளியேற்ற ப்படும் என அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.
அதன்படி பொதுப்பணி த்துறையினர் இன்று காலை அைணயிலிருந்து தண்ணீரை பாசனத்திற்கு திறந்துவிட்டனர். இதன் மூலம் 18 பாசன வாய்க்கா ல்கள் நிரப்பப்பட்டு திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் 6000-க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி ெபறும். அணைக்கு 239 கனஅடிநீர் வருகிறது.
மொத்தம் 331 மி.கனஅடி நீர் இருமாவட்ட பாசனத்தி ற்கும் திறப்பதற்கு நடவடி க்கை எடுக்கப்பட்டு ள்ளது.
ஆண்டிபட்டி அருகே உள்ள பாப்பம்பட்டி, குதிரையாறு அணையில் நீர்வரத்து 675 கனஅடியாக உள்ளது. இதன் மொத்த கொள்ளளவு 78 அடியாகும். தற்போது 64 அடி நீர்மட்டம் உள்ளது. இங்கிருந்து 120 நாட்களுக்கு 330 கனஅடிநீர் பாசனத்திற்காக இன்று திறக்கப்பட்டது. மேலும் பாலாறு அணையில் இருந்து இன்றுமுதல் 120 நாட்களுக்கு 1220 கனஅடிநீர் திறக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறையினர் அணைகளை கண்காணித்து வருகின்றனர்.
பருவமழை கைகொடுத்த நிலையில் விவசாயத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்க ப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் உழவுப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
- கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற வாலிபர்களை ஒரு கும்பல் வழிமறித்து தாக்கியது.
- கொடை க்கானல் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
கொடைக்கானல்:
மதுரை நாகமலைப்பு துக்கோட்ைடயை சேர்ந்த விருமாண்டி மகன்கள் அஜித்(24), அஜய்(22) ஆகியோர் நண்பர் சஞ்சய்(21) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றனர். லாஸ்காட் சாலை பகுதியில் சென்றபோது ஒரு கும்பல் அவர்களை வழிமறித்தது.
இதில் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிரச்சினை முற்றிய நிலையில் அந்த கும்பல் வாலிபர்களை கடுமையாக தாக்கினர். இதில் காயமடைந்த 3 பேரும் கொைடக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்க ப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து கொடை க்கானல் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து குண சீலன்(41), எட்வர்ட்ராஜா(41) ஆகியோரை கைது செய்த னர். மேலும் இதுதொடர்பாக 5 பேரை தேடி வருகின்றனர்.
- வேடசந்தூர் அருகே ரெங்கநாதபுரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது.
- காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே ரெங்கநாதபுரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 4-ந் தேதி நடைபெற உள்ளது.
எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சரளப்பட்டி, காசிப்பாளையம், மேட்டுப்பட்டி, வி.ஜி.புதூர், வெள்ளையம்பட்டி, கே.ஜி.பட்டி, எல்லப்பட்டி, கல்வா ர்பட்டி கோலார்பட்டி,
கல்லுப்பட்டி, ராஜா கவுண்டனூர், விருதலை ப்பட்டி, சீத்தபட்டி, பூதிப்பு ரம், நல்ல பொம்மன்பட்டி, தேவிநாயக்கன்பட்டி, கன்னிமார்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- தனது தாய் கண்முன்னே அருண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து சத்திரப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
- ஒட்டன்சத்திரம் தீயணைப்புத் துறையினர் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி நீரில் மூழ்கிய அருண் உடலை மீட்டனர்.
சத்திரபட்டி:
மதுரை மாட்டுத்தாவணியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் அருண்(வயது 28). இவர் மாட்டுத்தாவணியில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவருடைய உறவினரான வீரம்மாள் என்பவர் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் விஸ்வநாதன் நகரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார்.
இதற்காக தன் தாயுடன் ஒட்டன்சத்திரம் வந்த அருண் துக்க நிகழ்வில் கலந்து விட்டு உறவினர்களுடன் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள விருப்பாட்சி தலையூற்று அருவியில் அஸ்தியை கரைக்கச் சென்றார். அஸ்தியை கரைத்து விட்டு அருவியில் குளிக்கச் சென்ற போது அருணுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு நீரில் மூழ்கி பலியானார்.
தனது தாய் கண்முன்னே அருண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து சத்திரப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஒட்டன்சத்திரம் தீயணைப்புத் துறையினர் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி நீரில் மூழ்கிய அருண் உடலை மீட்டனர். அதன்பின்பு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து சத்திரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டியின் விலை ரூ.350 முதல் ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்டது.
- தக்காளி வரத்து அதிகரிப்பால் போதிய விலை கிடைக்கவில்லை.
ஒட்டன்சத்திரம்:
தென்தமிழகத்தின் பிரசித்தி பெற்ற காந்தி காய்கறி மார்க்கெட் ஒட்டன்சத்திரத்தில் செயல்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த மார்க்கெட்டில் இருந்து தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களுக்கும் மற்றும் கேரள மாநிலத்துக்கும் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டியின் விலை ரூ.350 முதல் ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்டது.
அப்போது கிலோ ரூ.25 முதல் ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது தக்காளி வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் விலை வீழ்ச்சி அடைந்து 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ.70 முதல் ரூ.150 வரை விற்பனையானது. சில்லரை விற்பனையில் கிலோ ரூ.10 முதல் ரூ.9 வரை விற்பனை செய்யப்பட்டது.
இதுகுறித்து விவசாயிகளிடம் கேட்டபோது, தக்காளி வரத்து அதிகரிப்பால் போதிய விலை கிடைக்கவில்லை. மேலும் ஒரு பெட்டிக்கு 4 கிலோ தக்காளி அழுகி விடுவதால் குப்பையில் கொட்டும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் வியாபாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் நஷ்டம் ஏற்படுகிறது. இந்த விலை வீழ்ச்சி இன்னும் ஒரு மாதத்திற்கு நீடிக்கும் என்றனர்.
- பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு பல்கலைக் கழகத்தில் செய்யப்படவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன், போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.
- விழா நடைபெறும் பல்நோக்கு அரங்கம், ஹெலிகாப்டர் இறங்கு தளமான ஹெலிபேடு, அரங்கிற்கு வரும் மாணவர்களுக்கான வழித்தடம், ரெயில்வே சுரங்கப்பாதைக்கான வழித்தடம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
சின்னாளபட்டி:
திண்டுக்கல்-மதுரை4 வழிச்சாலையில் அமைந்துள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக் கழகத்தில் 36வது பட்டமளிப்பு விழா வருகிற 11ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான், தமிழக அமைச்சர்கள் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.
பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு பல்கலைக் கழகத்தில் செய்யப்படவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன், போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர். விழா நடைபெறும் பல்நோக்கு அரங்கம், ஹெலிகாப்டர் இறங்கு தளமான ஹெலிபேடு, அரங்கிற்கு வரும் மாணவர்களுக்கான வழித்தடம், ரெயில்வே சுரங்கப்பாதைக்கான வழித்தடம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
தற்போது பல்நோக்கு அரங்கத்தில் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய பால்சீலிங் அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. அரங்கத்தில் மேற்கு பகுதியில் விழாவில் பங்கேற்பவர்களுக்கான தனி பந்தல்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பல்கலைக்கழக நிர்வாக அலுவலகம் மற்றும் முக்கிய அலுவலகங்களுக்கு வர்ணம் பூசும் பணியும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
விழாவிற்கு வரும் பேராசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. முக்கிய பிரமுகர்கள் அமரும் இடம் விழா மேடையில் இடம்பெற வேண்டிய பேனர்கள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.
பட்டமளிப்பு விழா நடைபெறும் 11ம் தேதியன்று பல்கலைக் கழக நுழைவாயில் முன்பு முதல் வளாகம் முழுவதும் பாதுகாப்பிற்கு போலீசார் நிறுத்தப்பட உள்ளனர். அன்றைய தினம் பல்கலைக் கழக வளாகத்தில் ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் காந்திகிராம பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழா ஏற்பாடுகள் தீவிரமடைந்து வருகிறது.
- ஒட்டன்சத்திரம் நகராட்சியில் பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
- நகர மன்ற உறுப்பினர்கள், துறை சார்ந்த அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஒட்டன்சத்திரம்:
உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் நகராட்சியில் நடைபெற்ற வார்டு கமிட்டி-பகுதி சபா குழு கூட்டத்தில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி கலந்து கொண்டு பேசியதாவது:-
ஒட்டன்சத்திரம் நகராட்சியில் குப்பை பெரும் பிரச்சினையாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஒட்டன்சத்திரம் நகராட்சியை தூய்மை நகராட்சியாக மாற்ற 20 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. பொதுமக்கள் மக்கும் குப்பை, மக்கா குப்பைகளை தரம் பிரித்துக் கொடுத்தால் நகராட்சி பணியாளர்கள் எடுத்துச் செல்ல ஏதுவாக இருக்கும்.
ஒட்டன்சத்திரம் நகராட்சி, ஒன்றியம், நெய்க்காரப்பட்டி, தொப்பம்பட்டி, கீரனூர் பேரூராட்சி ஆகிய பகுதிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ. 1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு திண்டுக்கல்லில் நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசாணை வெளியிட்டார். இதற்கு விரைவில் டெண்டர் விடப்பட உள்ளது. ஒட்டன்சத்திரம் நகராட்சியில் பாதாள சாக்கடை அமைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். மேலும் பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
இக்கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர் தேவிகா, பழனி கோட்டாட்சியர் சிவகுமார், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் முத்துசாமி, நகர் மன்ற தலைவர் திருமலைசாமி, நகர் மன்றதுணைத் தலைவர் வெள்ளைச்சாமி, நகராட்சி பொறியாளர் சக்திவேல், நகராட்சி மேலாளர் உமா காந்தி, நகர ஊர் அமைப்பு ஆய்வர் ரவிச்சந்திரன், துப்புரவு ஆய்வாளர் ரவிசங்கர், நகராட்சி வருவாய் ஆய்வாளர் சேக் அப்துல்லா, நகராட்சி இளநிலை உதவியாளர்கள் ஈஸ்வரன், கண்ணன், நகராட்சி பணி ஆய்வாளர் முகமது ஆசிக் உமர், நகர மன்ற உறுப்பினர்கள், துறை சார்ந்த அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் நகராட்சி தலைமை கணக்கர் சரவணகுமார் நன்றி கூறினார்.
- முதியவர் தன்னை தாக்கி விட்டார் என்ற ஆத்திரத்தில் தனது நண்பர்களுக்கு போன் மூலம் தகவல் கூறியுள்ளார்.
- மதுவால் பல்வேறு குடும்பங்கள் சீரழிந்து வரும் நிலையில் தற்போது மது போதையில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே வீரக்கல் தெற்கு மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் சின்னத்துரை (வயது 60). பழைய இரும்புகளை சேகரிக்கும் வியாபாரி. இவருடைய மனைவி கலையரசி (56). இவர்களுக்கு கனகராஜ் என்ற மகனும், நாகஜோதி என்ற மகளும் உள்ளனர்.
கடந்த 27-ந் தேதி சின்னத்துரையை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். இது குறித்து செம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவுப்படி செம்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்த கொலை வழக்கில் வக்கம்பட்டியைச் சேர்ந்த விஜி என்ற விஜயகுமார் (34), பித்தளைப்பட்டியைச் சேர்ந்த சின்னவர் (34), மைக்கேல்பட்டியைச் சேர்ந்த சதீஸ் (24), பெருமாள்கோவில் பட்டியைச் சேர்ந்த விக்னேஷ் ஆகிய 4 பேருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
கும்மம்பட்டி கிராமத்தில் பதுங்கி இருந்த அவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 பைக், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் முக்கிய குற்றவாளியான தாமரைக்கண்ணன் (30), கோவை கோர்ட்டில் சரணடைந்தார்.
திண்டுக்கல்லில் கைது செய்யப்பட்ட 4 வாலிபர்கள் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
சம்பவத்தன்று பாரில் மது அருந்திக் கொண்டு இருந்தபோது சின்னத்துரைக்கும், தாமரைக்கண்ணனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் சின்னத்துரையை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சின்னத்துரையும், தாமரைக்கண்ணனை தாக்கினார். முதியவர் தன்னை தாக்கி விட்டார் என்ற ஆத்திரத்தில் தனது நண்பர்களான விஜயகுமார், சின்னவர், விக்னேஷ், சதீஸ் ஆகியோருக்கு போன் மூலம் தகவல் கூறியுள்ளார்.
அவர்கள் சின்னத்துரை வீட்டுக்கு சென்று அவரது மனைவி கண் முன்னே சின்னத்துரையை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இவ்வாறு வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளது.
மதுவால் பல்வேறு குடும்பங்கள் சீரழிந்து வரும் நிலையில் தற்போது மது போதையில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ராஜேஷ் குடும்பத்தினர் ராமனை மரத்தில் கட்டி வைத்து பணத்தை கேட்டு துன்புறுத்தி உள்ளனர்.
- கந்து வட்டி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் ராஜேசை கைது செய்தனர்.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்துள்ள சாத்தம்பட்டியை சேர்ந்தவர் ராமன் (வயது42). இவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த அம்பலம் மகன் ராஜேஸ் (35) என்பவரிடம் ரூ. 1 லட்சம் கடன் வாங்கி இருந்தார். இதற்காக மாதந்தோறும் வட்டி மட்டும் கட்டி வந்துள்ளார்.
இதனிடையே சொந்த ஊரில் சரிவர வேலை இல்லாததால் ராமன் திருப்பூருக்கு வேலைக்கு சென்று விட்டார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சாத்தம்பாடிக்கு வந்தார்.
இதை பார்த்த ராஜேஷ் குடும்பத்தினர் ராமனை மரத்தில் கட்டி வைத்து பணத்தை கேட்டு துன்புறுத்தி உள்ளனர். பணம் தராமல் இங்கிருந்து நகர முடியாது என அவரது மனைவியிடம் கூறி உள்ளனர்.
மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை மரத்திலேயே கட்டி வைக்கப்பட்டிருந்ததை அங்கிருந்தவர்கள் படம் எடுத்து சமூக வலை தளங்களில் வெளியிட்டனர். தனது கணவருக்கு நேர்ந்த கொடுமை குறித்து ராமன் மனைவி ஜோதிமணி நத்தம் போலீஸ் நிலையத்தில் புகார்அளித்தார்.
அதன்பேரில் கந்து வட்டி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் ராஜேசை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அவரது பெற்றோர் அம்பலம் மற்றும் சாந்தியை தேடி வருகின்றனர்.
- எரியோடு பகுதியில் கடந்த ஒரு மாதமாக தொடர்ச்சியாக மோட்டார் சைக்கிள்களுக்கு நள்ளிரவில் தீ வைத்து செல்லும் சம்பவம் நடந்து வருகிறது.
- நகரில் சந்தேகத்திற்கிடமாக சுற்றி வந்த ஒரு நபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பகுதியில் கடந்த ஒரு மாதமாக தொடர்ச்சியாக மோட்டார் சைக்கிள்களுக்கு நள்ளிரவில் தீ வைத்து செல்லும் சம்பவம் நடந்து வருகிறது. இதுவரை 7 பேரின் மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
இன்று காலையில் எரியோடு மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வரும் மாலைகோவில்தெருவை சேர்ந்த சேகர்(52), வெள்ளைப்பூண்டு வியாபாரியான துரைச்சாமிநாடார் தெருவை சேர்ந்த கோபால்(50) ஆகியோரின் மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிக்கப்பட்டிருந்தது.
இதுவரை 9 மோட்டார் சைக்கிள்கள் எரிக்கப்பட்டுள்ள நிலையில் இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர் யார் என தெரியாமல் போலீசார் திணறி வந்தனர்.
வேடசந்தூர் டி.எஸ்.பி துர்க்காதேவி அறிவுரையின்பேரில் எரிேயாடு இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா, வேடசந்தூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், வடமதுரை இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் மற்றும் தனிப்படை போலீசார் தீவிர சோதனை நடத்தி நகரின் முக்கிய இடங்களில் சிசிடிவி காமிராக்களை பொருத்தினர்.
சைக்கோ வாலிபர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. அதன்படி நேற்று இரவு முதல் நகரில் சந்தேகத்திற்கிடமாக சுற்றி வந்த ஒரு நபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். எரியோடு பகுதியில் தொடரும் இதுபோன்ற சம்பவங்களால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
- பெற்ற மகளையே சீரழித்து கர்ப்பமாக்கிய தந்தை உள்பட 3 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
- கலெக்டர் உத்தரவின்பேரில் சிறுமியை சீரழித்த தந்தை உள்பட 3 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் பாரதிபுரத்ைத சேர்ந்த 47 வயதான சமையல் தொழிலாளியின் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதனைதொடர்ந்து தனது 12 வயது மகளை அவர் வளர்த்து வந்தார். மனைவி இல்லாத காரணத்தால் தனது ஆசைக்கு மகளை பயன்படுத்தி வந்தார்.
மேலும் தான் வேலைக்கு செல்லும்போது அதேபகுதியை சேர்ந்த நெசவு தொழிலாளியான கண்ணன் என்பவரது வீட்டில் விட்டுச்சென்றார். கண்ணனுக்கு திருமணமாகி அவரது மனைவியும் பிரிந்து சென்றுவிட்டார். அவரது மகள் மூளைவளர்ச்சி இல்லாமல் இறந்துவிட்டார். இந்த சூழ்நிலையில் பாதுகாப்புக்காக வந்த சிறுமியிடம் கண்ணனும் பாலியல் தொந்தரவு செய்தார்.
இதுகுறித்து தனது தந்தையிடம் அந்த சிறுமி கூறியுள்ளார். அதற்கு கண்ணன் தனக்கு நெருக்கமான நண்பர். மேலும் குடும்பத்திற்கு ஏராளமான உதவிகள் செய்து வருகிறார். எனவே இதுகுறித்து யாரிடமும் கூறவேண்டாம் என மகளை மிரட்டியுள்ளார்.
சிறுமியும் தனது தந்தைக்கு பயந்து இதனை யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார். இச்சூழ்நிலையில் சிறுமியுடன் கண்ணன் நெருக்கமாக இருந்ததை அதேபகுதியை சேர்ந்த அரிசிக்கடை உரிமையாளர் முகமதுரபீக் என்பவர் பார்த்துள்ளார். இதனைதொடர்ந்து அவரும் சிறுமியை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார்.
இதனால் 12 வயது சிறுமி 3 மாத கர்ப்பிணியானார். இதுகுறித்த எந்த ஞானமும் தனக்கு இல்லாததால் தனக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை யாரிடம் சொல்வது என தனிமையில் அழுது வந்துள்ளார். இதனை அறியாமலேயே தந்தையும் அவரது நண்பர்களும் தொடர்ந்து சிறுமியை பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளனர். இதனால் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தார்.
அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சிறுமியை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அப்போது சிறுமி 3 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சமூகநலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தினர். அபபோது தனக்கு நேர்ந்த கொடுமைகளை சிறுமி சொல்லி கதறி அழுதார். இதனைதொடர்ந்து திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசார் சிறுமியை சீரழித்த தந்தை உள்பட 3 பேர் மீதும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
இவர்களை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு எஸ்.பி பாஸ்கரன் பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்தரவின்பேரில் சிறுமியை சீரழித்த தந்தை உள்பட 3 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
- நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடை பெற்றது.
- முகாமில் வீடு, முதியோர் உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் போன்ற கோரிக்கையாக 41 மனுக்களும், பஸ், ரெயில் பஸ்பாஸ் வசதி கேட்டு மேலும் சில மனுக்களும் அளிக்கப்பட்டது.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் வருவாய் கோட்டாட்சியர் பிரேம்குமார் தலைமையில் நடைபெற்றது. நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி வரவேற்று பேசினார்.
நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள ரெங்கப்பாநாயக்கன்பட்டி, விளாம்பட்டி, அணைப்பட்டி, பிள்ளையார் நத்தம், எத்திலோடு, சிலுக்குவார் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை வேண்டி கலந்து கொண்டனர்.
முகாமிற்கு வந்த மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்த அரசு மருத்துவ எலும்பு நிபுணர் டாக்டர்கள் பரிசோதனை செய்து பின்னர் சான்று வழங்காமல் மாற்றுத்திறனாளிகளை அலைக்கழிப்பு செய்யும் விதமாக உரிய ஆவணங்களோடு திண்டுக்கல் வரும்படி கூறியதாக கூறப்படுகிறது.
இதை அறிந்த மாற்றுத்திறனாளிகளின் சங்க மாநிலத் துணைத் தலைவர் மோகன்ராஜ் தலைமையில் சிலர் டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைதொடர்ந்து அதிகாரிகள் அவர்களை சமாதானம் செய்தனர்.
முகாமில் வீடு, முதியோர் உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் போன்ற கோரிக்கையாக 41 மனுக்களும், பஸ், ரெயில் பஸ்பாஸ் வசதி கேட்டு மேலும் சில மனுக்களும் அளிக்கப்பட்டது. இந்த மனுக்களில் ஒரு சிலருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
முகாமில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஆறுமுகம், ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் மிருனாலினி, மண்டலத் துணை தாசில்தார்கள் சரவணன், மூர்த்தி, அபிராமி, வருவாய் ஆய்வாளர்கள் பிரியங்கா, அறிவழகன், பிரேமலதா, நிலக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






