என் மலர்
நீங்கள் தேடியது "மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்"
- நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடை பெற்றது.
- முகாமில் வீடு, முதியோர் உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் போன்ற கோரிக்கையாக 41 மனுக்களும், பஸ், ரெயில் பஸ்பாஸ் வசதி கேட்டு மேலும் சில மனுக்களும் அளிக்கப்பட்டது.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் வருவாய் கோட்டாட்சியர் பிரேம்குமார் தலைமையில் நடைபெற்றது. நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி வரவேற்று பேசினார்.
நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள ரெங்கப்பாநாயக்கன்பட்டி, விளாம்பட்டி, அணைப்பட்டி, பிள்ளையார் நத்தம், எத்திலோடு, சிலுக்குவார் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை வேண்டி கலந்து கொண்டனர்.
முகாமிற்கு வந்த மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்த அரசு மருத்துவ எலும்பு நிபுணர் டாக்டர்கள் பரிசோதனை செய்து பின்னர் சான்று வழங்காமல் மாற்றுத்திறனாளிகளை அலைக்கழிப்பு செய்யும் விதமாக உரிய ஆவணங்களோடு திண்டுக்கல் வரும்படி கூறியதாக கூறப்படுகிறது.
இதை அறிந்த மாற்றுத்திறனாளிகளின் சங்க மாநிலத் துணைத் தலைவர் மோகன்ராஜ் தலைமையில் சிலர் டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைதொடர்ந்து அதிகாரிகள் அவர்களை சமாதானம் செய்தனர்.
முகாமில் வீடு, முதியோர் உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் போன்ற கோரிக்கையாக 41 மனுக்களும், பஸ், ரெயில் பஸ்பாஸ் வசதி கேட்டு மேலும் சில மனுக்களும் அளிக்கப்பட்டது. இந்த மனுக்களில் ஒரு சிலருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
முகாமில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஆறுமுகம், ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் மிருனாலினி, மண்டலத் துணை தாசில்தார்கள் சரவணன், மூர்த்தி, அபிராமி, வருவாய் ஆய்வாளர்கள் பிரியங்கா, அறிவழகன், பிரேமலதா, நிலக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






