என் மலர்
திண்டுக்கல்
- கிராமப்புறங்களில் இருந்து திண்டுக்கல்லுக்கு வரும் பள்ளி மாணவர்கள் இலவச பஸ்பாஸ் வசதிக்காக அரசு பஸ்களை மட்டுமே நம்பியுள்ளனர்.
- ஒருசில மாணவர்கள் தங்கள் ஊருக்கு செல்ல இந்த பஸ் மட்டுமே உள்ளது. தனியார் பஸ்சில் செல்ல பணம் இல்லை என்று தெரிவிக்கவே அவர்களுக்கு பஸ் டிக்கெட்டுக்கான கட்டணத்தை கொடுத்து அனுப்பி வைத்தார்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, அய்யலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து தினசரி ஏராளமான மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிக்கு திண்டுக்கல், திருச்சி, கரூர் ஆகிய நகரங்களுக்கு சென்று வருகின்றனர்.
குறிப்பாக கிராமப்புறங்களில் இருந்து திண்டுக்கல்லுக்கு வரும் பள்ளி மாணவர்கள் இலவச பஸ்பாஸ் வசதிக்காக அரசு பஸ்களை மட்டுமே நம்பியுள்ளனர்.
ஆனால் பெரும்பாலான வழித்தடங்களில் பள்ளிக்கு செல்லும் சமயத்திலும், திரும்பி வரும் சமயத்திலும் போதிய பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடியே செல்லும் நிலை உள்ளது. கண்டக்டர்கள் மாணவர்களை உள்ளே வரும்படி எச்சரித்தாலும் குறித்த நேரத்தில் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் பெரும்பாலான மாணவர்கள் ஆபத்தான பயணத்தையே மேற்கொள்கின்றனர். இதனால் மாணவர்கள் மற்றும் கண்டக்டர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்படுகிறது.
நேற்று மாலை வடமதுரை அருகே அரசு பஸ்சில் அதிகளவு மாணவர்கள் படிக்கட்டில் நின்றபடியே சென்றுகொண்டிருந்தனர். அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்ட வடமதுரை சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் அந்த பஸ்சை நிறுத்தி மாணவர்களுக்கு அறிவுரை கூறி அடுத்து வரும் பஸ்சில் செல்லுமாறு கூறினார்.
மேலும் ஒருசில மாணவர்கள் தங்கள் ஊருக்கு செல்ல இந்த பஸ் மட்டுமே உள்ளது. தனியார் பஸ்சில் செல்ல பணம் இல்லை என்று தெரிவிக்கவே அவர்களுக்கு பஸ் டிக்கெட்டுக்கான கட்டணத்தை கொடுத்து அனுப்பி வைத்தார்.
இந்த செயல் அப்பகுதியில் இருந்த பொதுமக்களை ஆச்சரியப்படுத்தியது. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள் அதிகம் செல்லும் பகுதியில் கூடுதல் பஸ் வசதியை ஏற்படுத்தி தரவேண்டும். தற்போது மழைக்காலமாக இருப்பதால் மாணவர்கள் படிக்கட்டில் நின்றபடி மழையில் நனைந்தவாறு பயணிக்கும் நிலையும் உள்ளது.
வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பல்வேறுஇடங்களில் ஆய்வு நடத்துவது இல்லை. மாலை நேரங்களில் பல மாணவர்கள் பஸ் கிடைக்காமல் இரவு வீடு திரும்பும் நிலை உள்ளது. எனவே இதுபோன்ற அவலங்களை போக்க போக்குவரத்து கழகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- புகாரை வாங்காமல் அலைக்கழித்ததாகவும், புகார் கொடுக்க சென்ற குப்புசாமி மற்றும் அவரது பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும், மாநில மனித உரிமை அணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
- மாநில மனித உரிமை ஆணையம் சம்பவம் நடந்தபோது கள்ளிமந்தயம் போலீஸ்நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த சரவணன் என்பவருக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதித்தது.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பெருமாள்கோவில் வலசை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி செல்லாத்தாள். மகன் குப்புசாமி. இவர்களிடம் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்த பைனான்சியர்கள் செல்வன், மணி ஆகியோர் வெற்று பத்திரங்களில் கையெழுத்து பெற்றுள்ளனர். இது குறித்து குப்புசாமி கள்ளிமந்தயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
ஆனால் புகாரை வாங்காமல் அலைக்கழித்ததாகவும், புகார் கொடுக்க சென்ற குப்புசாமி மற்றும் அவரது பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும், மாநில மனித உரிமை அணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதனை விசாரித்த ஆணையம் சம்பவம் நடந்தபோது கள்ளிமந்தயம் போலீஸ்நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த சரவணன் என்பவருக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதித்தது. அதனை மனுதாரர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நஷ்டஈடாக வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் இன்ஸ்பெக்டர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
- எந்தநேரம் கறந்தாலும் பால் வருவதால் அப்பகுதி மக்களும் அந்த பசுவை ஆச்சரியத்துடன் வணங்கி வருகின்றனர்.
- பசுவுக்கு புல்கட்டு, கீரை மற்றும் தீவனங்களை கொடுத்து அதன் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று வருகின்றனர்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள நந்தவனப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள்(50). இவரது மனைவி மயில்(46). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். பெருமாள் விவசாயம் பார்த்து வருவதோடு கால்நடைகளையும் வளர்த்து வருகிறார்.
சிறுவயது முதல் ஒரு கன்றுகுட்டிைய வாங்கி வளர்த்து வந்த அவர் தற்போது தெய்வீக தன்மையுடன் காணப்படுவதை அறிந்தார். கடந்த பல மாதங்களாக எவ்வித கன்றும் ஈன்றாமல் சினை ஊசி போடாமலும் 24 மணிநேரமும் அந்த பசு பால் தந்தவண்ணம் உள்ளது.
எந்தநேரம் கறந்தாலும் பால் வருவதால் அப்பகுதி மக்களும் அந்த பசுவை ஆச்சரியத்துடன் வணங்கி வருகின்றனர். மேலும் தங்கள் குடும்பத்தில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் அந்த பசுவுக்கு புல்கட்டு, கீரை மற்றும் தீவனங்களை கொடுத்து அதன் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று வருகின்றனர்.
தினந்தோறும் பசுவை குளிப்பாட்டி மஞ்சள் பூசி அலங்கரித்து வைத்துள்ளனர். பசு கறக்கும் பாலினையே அங்கு வரும் பொதுமக்களுக்கு காய்ச்சி குடிப்பதற்கு பெருமாள் கொடுத்து வருகிறார். அந்த பாலினை அருந்தும் பொதுமக்களும் அமிர்தம்போல் உள்ளதாக தெரிவிக்கின்றனர். பசுவிடம் வைத்த கோரிக்கை உடனுக்குடன் நிறைவேறி வருவதால் தெய்வீக தன்மை கொண்ட அந்த பசுவை காண பல்வேறு ஊர்களில் இருந்து வந்து வழிபட்டு செல்கின்றனர்.
இதுகுறித்து பெருமாள் தெரிவிக்கையில், கூலிவேலை பார்த்து வந்த தான் பலவித பிரச்சினைகளில் சிக்கி கஷ்டப்பட்டு வந்தேன். இந்த பசு வந்தபிறகு அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துள்ளது. தற்போது ஒரு முதலாளி ஆனதுபோல் நம்பிக்கையோடு உள்ளேன். எங்களை பார்த்து இந்த பசுவை காண தினந்தோறும் பல்வேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அதன்மூலம் அவர்கள் நன்மை அடைந்து வருகின்றனர். இது எங்களுக்கும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
- தோட்டத்து வீட்டில் தங்கி இருந்த தொழிலாளி நேற்று முன்தினம் இரவு படுகாயங்க ளுடன் இறந்து கிடந்தார்.
- போலீசார் விசாரணையில் ஓசிக்கு மதுபானம் தராத ஆத்திரத்தில் நடந்த கொலை சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது. இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா வேலன் கவுண்டன்பட்டியைச் சேர்ந்த முத்து மகன் செல்வம் (வயது 45). இவர் திருமணம் ஆகி மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.
நிலக்கோட்டை அருகே உள்ள சங்கராபுரம் பகுதி யில் கூலிவேலை பார்த்து அதே பகுதியைச் சேர்ந்த முத்தப்பன் (65) என்பவரது தோட்டத்து வீட்டில் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் இரவு செல்வம் படுகாயங்க ளுடன் இறந்து கிடந்தார்.
வீட்டுக்குள் முத்தப்பனும் வெட்டுக்காயங்களுடன் மயங்கிய நிலையில் இருந்தார். இது குறித்து நிலக்கோட்டை போலீ சாருக்கு தகவல் தெரிவிக்க ப்பட்டது. போலீசார் செல்வ த்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயமடைந்த முத்தப்பன் நிலக்கோட்டை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீ சார் விசாரணையில் ஓசிக்கு மது தராத ஆத்திரத்தில் செல்வம் கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.
இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், செல்வம் தினமும் வேலைக்கு சென்று விட்டு இரவில் மது குடிப்பது வழக்கம். அப்போது தோட்ட உரிமையாளரான முத்தப்பன் தனக்கும் சிறிது மது தருமாறு கேட்டு வந்துள்ளார். செல்வம் அவ்வப்போது கொடுத்து வந்தாலும் சில சமயங்களில் மது கொடுக்க முடியவில்லை. இதனால் பாட்டிலில் சிறிது மது ஊற்றி அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து முத்தப்ப னுக்கு கொடுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த முத்தப்பன் என்னையே ஏமாற்று கிறாயா? என தகராறு செய்து வந்துள்ளார். அடிக்கடி மதுபானம் தராத சமயங்களில் எல்லாம் இது போன்று அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பவத்தன்றும் தனக்கு மதுபானம் தராமல் செல்வம் மட்டும் குடித்துக் கொண்டி ருப்பதை பார்த்த முத்தப்பன் அரிவாளால் பின் தலையில் தாக்கினார்.
இதனை சற்றும் எதிர்பாராத செல்வம் முத்தப்பனை தாக்கினார். ஆனால் அதற்குள் செல்வம் மயங்கி விழுந்து உயிரிழந்தார். காயமடைந்த முத்தப்பன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து போலீசார் அவரிடம் தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகின்றனர். ஓசிக்கு மதுபானம் தராத ஆத்திரத்தில் நடந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பபை ஏற்படுத்தி யுள்ளது.
- மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது குழந்தையின் உடலில் சூடு வைத்ததற்கான காயங்கள் இருந்தது.
- ரத்தபோக்கு ஏற்பட்டது போன்ற தடயங்களும் இருந்தது. சிகிச்சையில் இருந்தபோது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
வடமதுரை:
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர் பிரகாஷ்(30). இவரது மனைவி கவுரி(25). இவர்கள் மகள் சிவானி(4) . கணவன்-மனைவி இருவரும் திருப்பூரில் தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தனர். அப்போது அதேமில்லில் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகில் உள்ள செங்குளத்துப்பட்டியை சேர்ந்த ராஜேஸ்குமார் மனைவி கீர்த்திகா (32) என்பவர் வேலை பார்த்து வந்தார்.
தங்களுக்கு குழந்தை இல்லாததால் சிவானியை தாங்கள் வளர்த்து கொள்கிறோம். சிறிதுநாள் கழித்து பள்ளியில் சேர்க்கும் சமயத்தில் உங்களுடன் வந்து இருக்கட்டும் என கீர்த்திகா தெரிவித்துள்ளார். பிரகாசும் தாங்கள் வேலைக்கு செல்லும் சமயத்தில் குழந்தையை பராமரிக்க கஷ்டமாக உள்ளது என்பதால் அவர்களிடம் கொடுத்துள்ளார். அவ்வப்போது குழந்தையிடம் செல்போனில் பேசி நலம் விசாரித்து வந்தார்.
இன்று காலை குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றும், உடனடியாக பிரகாஷ் மற்றும் கவுரியை வருமாறும் கீர்த்திகா மற்றும் அவரது கணவர் கூறியுள்ளனர். இதைகேட்டதும் அதிர்ச்சி அடைந்து அவர்கள் வடமதுரை வந்தனர். அப்போது குழந்தையை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்க கொண்டு சென்றுள்ளதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.
அங்கு சென்று பார்த்தபோது குழந்தையின் உடலில் சூடு வைத்ததற்கான காயங்கள் இருந்தது. மேலும் ரத்தபோக்கு ஏற்பட்டது போன்ற தடயங்களும் இருந்தது. சிகிச்சையில் இருந்தபோது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதனையடுத்து குழந்தையை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து வடமதுரை இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் தலைமையிலான போலீசார் ராஜேஸ்குமார் மற்றும் கீர்த்திகாவிடம் தீவிர விசாரரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கொடைக்கானலில் கன மழை சமயங்களில் பேரிடர் மீட்புக்குழு வந்து நிவாரண பணிகளை மேற்கொள்வது வழக்கம்.
- மழை மேலும் நீடிக்கும் என்பதால் மழை கிராம மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
கொடைக்கானல்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கொடைக்கானலில் கடந்த 2 நாட்களாக விட்டு விட்டு கன மழை பெய்து வருகிறது. பகல் நேரங்களிலும் கடும் பனி மூட்டம் நிலவுவதால் வாகனங்கள் செல்ல முடியாமல் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
தினசரி வேலைக்கு செல்பவர்களும், பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் மழையில் நனைந்தபடி சென்று வீடு திரும்புவதால் அவர்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
கொடைக்கானல் மலை கிராமங்களிலும் தொடர் மழையால் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டு விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். நேற்று இரவு இடைவிடாது பெய்த கன மழையால் பூம்பாறை பகுதியைச் சேர்ந்த வடிவேலு, பாலு, பரமன் ஆகியோரது 3 வீடுகள் இடிந்து தரை மட்டமானது. உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அங்கிருந்து வெளியேறினர். அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. இருந்தபோதும் வீட்டில் இருந்த பெரும்பாலான பொருட்கள் மழையில் நனைந்து சேதமானது.
கொடைக்கானலில் கன மழை சமயங்களில் பேரிடர் மீட்புக்குழு வந்து நிவாரண பணிகளை மேற்கொள்வது வழக்கம். ஆனால் தற்போது மழை தீவிரமடைந்துள்ள நிலையில் இது வரை அது போன்று யாரும் வரவில்லை. மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவித நிவாரணமும், மருத்துவ வசதிகளும் கிடைக்கவில்லை என்று வேதனையுடன் தெரிவித்தனர்.
இதே போல அடுக்கம் கிராமத்தில் பழமையான மரம் முறிந்து விழுந்ததில் அங்கிருந்த மின் கம்பங்களும் அறுந்து ஒரு வீட்டின் மீது சாய்ந்தது. இதனையடுத்து அந்த வீட்டின் உரிமையாளர் மற்றும் உறவினர்கள் வீட்டை விட்டு வெளியேறினர். மழை மேலும் நீடிக்கும் என்பதால் மழை கிராம மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
- பழனியில் உள்ள பாலாறு பொருந்த லாறு, வரதமாநதி, குதிரை யாறு அணைகளில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
- பூஞ்சோலை கிராமத்துக்கு செல்லும் தரைப்பாலம் கன மழை காரணமாக அடித்து செல்லப்பட்டது.
பழனி:
கொடைக்கானல் மற்றும் பழனியில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழை காரணமாக முக்கிய அணைகள் வேகமாக நிரம்பியது. பழனியில் உள்ள பாலாறு பொருந்த லாறு, வரதமாநதி, குதிரை யாறு அணைகளில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
மேலும் இந்த 3 அணை களில் இருந்து தற்போது கூடுதல் தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. இதன்மூலம் திண்டுக்கல், திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 6 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
பாலாறு பொருந்தலாறு அணை முழு கொள்ளளவை எட்டியதாலும் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் 1200 கன அடி நீர் வெளியேற்ற ப்படுகிறது. இந்த நீர் சண்முகநதியில் திறந்து விடப்படும். எனவே சண்முகநதி, பாலாறு பொருந்தலாறு கரையோரம் உள்ள மக்கள் எச்சரிக்கை யுடன் இருக்குமாறு அறி வுறுத்தப்பட்டுள்ளது.
பழனி அருகே உள்ள பூஞ்ேசாலை கிராமத்துக்கு செல்ல ஒரு தரைப்பாலம் உள்ளது. இப்பகுதியில் பெய்த கன மழை காரண மாக தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது.
இதனால் பாலத்தின் வழியே பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அணையின் மீது ஏறி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு ள்ளது. அத்தியாவசிய பணிகளுக்கு செல்ல முடியாமலும், பள்ளி கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே உடைந்த தரைப்பாலத்தை சீரமைத்து தர கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.10 கோடி செலவில் பூண்டி கிராமத்தில் கிட்டங்கி பிரம்மாண்டமாக கட்டப்பட்டது.
- தற்போது கட்டி முடிக்கப்பட்டு காட்சி பொருளாகவே இந்த கிட்டங்கி உள்ளது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் மலைப்பூண்டு பயிருக்கு புவிசார் குறியீடு கிடைத்து உலகப்புகழ்பெற்று விளங்குகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த மலைப்பூண்டு பயிரை அறுவடை செய்தபின்னர், புகைப்போட்டு, அதனை பாதுகாக்க கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.10 கோடி செலவில் பூண்டி கிராமத்தில் கிட்டங்கி பிரம்மாண்டமாக கட்டப்பட்டது.
ஆனால் கட்டப்பட்டு பல ஆண்டுகளை கடந்தும், அது இன்றளவும் பயன்படாமல் கிடப்பில் உள்ளது. மேல்மலை விவசாயிகள், தாங்கள் விளைவித்த மலைப்பூண்டு பயிரை, கண்ணும் கருத்துமாக கண்காணித்து, தங்கள் வீடுகளிலேயே அதனை புகைபோட்டு, சந்தைக்கு அனுப்புவது, பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் உள்ளது.
எனவே இந்த கிட்டங்கி அமைக்கும்போதே விவசாயிகளுக்கு பயன்அளிக்காது என்று பெரும்பாலோனார் தெரிவித்தனர். ஆனால் தற்போது கட்டி முடிக்கப்பட்டு காட்சி பொருளாகவே இந்த கிட்டங்கி உள்ளது. எனவே இதனை விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் மாற்றுவழியில் யோசித்து உபயோகப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வழக்கமாக வருடத்திற்கு ஒருமாதமும், மாதத்திற்கு ஒருநாளும் பராமரிப்பு பணிக்காக ரோப்கார் நிறுத்தப்படுகின்றது.
- வடகயிறுகள் சீரமைக்கப்பட்டு இழுவைக்காக புதிய ஆயில் மாற்றப்படுகிறது.
பழனி:
தமிழ்கடவுள் முருகனின் 3-ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அடிவாரத்தில் இருந்து படிப்பாதை, யானைப்பாதை, மின்இழுவை ரெயில், ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு செல்கின்றனர். இதில் பக்தர்கள் ரோப்காரில் செல்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.
3 நிமிடத்தில் மலைக்கோவிலை எட்டிவிடலாம். மேலும் இயற்கை எழில்கொஞ்சும் பழனி மலையை கண்டு ரசித்தவாறு செல்லலாம் என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். வழக்கமாக வருடத்திற்கு ஒருமாதமும், மாதத்திற்கு ஒருநாளும் பராமரிப்பு பணிக்காக ரோப்கார் நிறுத்தப்படுகின்றது. அப்போது வடகயிறுகள் சீரமைக்கப்பட்டு இழுவைக்காக புதிய ஆயில் மாற்றப்படுகிறது.
அதன்படி இன்று மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ரோப்கார் நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்தது. பக்தர்கள் மாற்றுப்பாதையிலும், மின்இழுவை ரெயிலையும் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டனர். இன்று கோவிலுக்கு பக்தர்கள் வருகை குறைவாகவே இருந்தது. தொடர்ந்து மழை பெய்ததால் குறைந்த அளவு பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்றனர்.
மேலும் பஸ்நிலையம், அடிவாரம் பகுதியிலும் பக்தர்கள் வருகை குறைவாகவே காணப்பட்டது.
- பள்ளங்கி, கோம்பை, மூங்கில்காடு ஆகிய பகுதிகளில் விடியவிடிய பெய்த கனமழையால் இங்குள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
- ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கயிறுகட்டி ஆபத்தான முறையில் பொதுமக்கள் கடந்து சென்றனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் நேற்றுமுதல் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. இதனால் அருவிகள் அனைத்திலும் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.
வில்பட்டி பஞ்சாயத்திற்குட்பட்ட பள்ளங்கி, கோம்பை, மூங்கில்காடு ஆகிய பகுதிகளில் விடியவிடிய பெய்த கனமழையால் இங்குள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூலிவேலை பார்ப்பதற்காக வெளி இடங்களுக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கயிறுகட்டி ஆபத்தான முறையில் கடந்து சென்றனர். மேலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளி இடங்களுக்கு செல்ல முடியாமலும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாமலும் சிரமப்பட்டனர்.
இங்கு கனமழை பெய்யும் சமயத்தில் எல்லாம் இதுபோன்ற நிலை ஏற்படுவதாகவும், ஆபத்தான முறையில் ஆற்றை கடக்கும்போது உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால் இங்கு இரும்பு பாலம் அமைத்து தரவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல பேத்துப்பாறை, செம்பரான்குளம் பகுதியிலும் கனமழை சமயங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.
எனவே இப்பகுதியிலும் நிரந்தர பாலம் அமைத்து தரவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வெள்ளப்பெருக்கு காரணமாக இப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
- கொடைக்கானலில் நேற்று மாலையில் தொடங்கிய மழை இரவு முழுவதும் விட்டுவிட்டு கனமழையாக பெய்தது. இன்று காலையிலும் சாரல்மழை பெய்தவண்ணம் இருந்தது.
- கொடைக்கானலில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படாதது மாணவ-மாணவிகளை மிகுந்த சிரமத்திற்கு ஆளாக்கியது.
கொடைக்கானல்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் கொடைக்கானலில் நேற்று மாலையில் தொடங்கிய மழை இரவு முழுவதும் விட்டுவிட்டு கனமழையாக பெய்தது. இன்று காலையிலும் சாரல்மழை பெய்தவண்ணம் இருந்தது.
தமிழகத்தில் கனமழை காரணமாக பல்வேறு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் கொடைக்கானல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
ஆனால் பள்ளி நிர்வாகம் சார்பில் எந்த அறிவிப்பும் வரவில்லை. இதனால் மாணவ-மாணவிகள் குடைபிடித்தபடியும், நனைந்தபடியும் பள்ளிக்கு சென்றனர். கொடைக்கானலில் எப்போது மழைபெய்யும், எப்போது நிற்கும் என்று தெரியாத நிலையில் பள்ளிகளுக்கு சென்றபிறகும் மழை பெய்தபடி இருந்தது.
இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலரிடம் கேட்க முயன்றபோது அவர் அலைபேசியை எடுக்கவில்லை. கொடைக்கானல் கோட்டாட்சியரிடம் கேட்டபோது காலை 6 மணிமுதல் 7 மணிவரை மழை பெய்தால்மட்டுமே விடுமுறை விடமுடியும். கொடைக்கானலில் அதுபோன்ற சூழல் தற்போது இல்லை.
எனவே விடுமுறை விடுவதற்கான வாய்ப்புகள் அறிவிக்கப்படவில்லை என்றார். வானிலை ஆய்வு மையம் சார்பில் இன்று திண்டுக்கல் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் நேற்று மாலை முதலே கனமழை பெய்தது.
இருந்தபோதும் கொடைக்கானலில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படாதது மாணவ-மாணவிகளை மிகுந்த சிரமத்திற்கு ஆளாக்கியது.
எனவே கொடைக்கானலில் மாணவர்களின் நலன்கருதி மழைக்காலங்களில் உரிய அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் வெளியிட வேண்டும் என பெற்றோர்கள கோரிக்கை விடுத்துள்ளனர்.
- திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் பரவலாக மழை பெய்தது.
- பருவமழையின் தொடக்கமான முதல் நாளிலேயே 176.2 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் பரவலாக மழை பெய்தது. இரவு முழுவதும் மாவட்டத்தின் பல்வேறுஇடங்களில் கொட்டி தீர்த்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
வடகிழக்கு பருவமழையின் தொடக்கமான முதல் நாளிலேயே 176.2 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது. திண்டுக்கல் 18, கொடைக்கானல் 31.5, பழனி 4, சத்திரப்பட்டி 10.2, நத்தம் 9, நிலக்கோட்டை 27, வேடசந்தூர் 15.6, காமாட்சிபுரம் 9.5, பிரையண்ட் பூங்கா 35.8, மி.மீ மழையளவு பதிவானது.






