என் மலர்
நீங்கள் தேடியது "Labour murder case"
- தோட்டத்து வீட்டில் தங்கி இருந்த தொழிலாளி நேற்று முன்தினம் இரவு படுகாயங்க ளுடன் இறந்து கிடந்தார்.
- போலீசார் விசாரணையில் ஓசிக்கு மதுபானம் தராத ஆத்திரத்தில் நடந்த கொலை சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது. இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா வேலன் கவுண்டன்பட்டியைச் சேர்ந்த முத்து மகன் செல்வம் (வயது 45). இவர் திருமணம் ஆகி மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.
நிலக்கோட்டை அருகே உள்ள சங்கராபுரம் பகுதி யில் கூலிவேலை பார்த்து அதே பகுதியைச் சேர்ந்த முத்தப்பன் (65) என்பவரது தோட்டத்து வீட்டில் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் இரவு செல்வம் படுகாயங்க ளுடன் இறந்து கிடந்தார்.
வீட்டுக்குள் முத்தப்பனும் வெட்டுக்காயங்களுடன் மயங்கிய நிலையில் இருந்தார். இது குறித்து நிலக்கோட்டை போலீ சாருக்கு தகவல் தெரிவிக்க ப்பட்டது. போலீசார் செல்வ த்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயமடைந்த முத்தப்பன் நிலக்கோட்டை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீ சார் விசாரணையில் ஓசிக்கு மது தராத ஆத்திரத்தில் செல்வம் கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.
இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், செல்வம் தினமும் வேலைக்கு சென்று விட்டு இரவில் மது குடிப்பது வழக்கம். அப்போது தோட்ட உரிமையாளரான முத்தப்பன் தனக்கும் சிறிது மது தருமாறு கேட்டு வந்துள்ளார். செல்வம் அவ்வப்போது கொடுத்து வந்தாலும் சில சமயங்களில் மது கொடுக்க முடியவில்லை. இதனால் பாட்டிலில் சிறிது மது ஊற்றி அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து முத்தப்ப னுக்கு கொடுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த முத்தப்பன் என்னையே ஏமாற்று கிறாயா? என தகராறு செய்து வந்துள்ளார். அடிக்கடி மதுபானம் தராத சமயங்களில் எல்லாம் இது போன்று அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பவத்தன்றும் தனக்கு மதுபானம் தராமல் செல்வம் மட்டும் குடித்துக் கொண்டி ருப்பதை பார்த்த முத்தப்பன் அரிவாளால் பின் தலையில் தாக்கினார்.
இதனை சற்றும் எதிர்பாராத செல்வம் முத்தப்பனை தாக்கினார். ஆனால் அதற்குள் செல்வம் மயங்கி விழுந்து உயிரிழந்தார். காயமடைந்த முத்தப்பன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து போலீசார் அவரிடம் தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகின்றனர். ஓசிக்கு மதுபானம் தராத ஆத்திரத்தில் நடந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பபை ஏற்படுத்தி யுள்ளது.
- போதையில் ரகளை செய்ததால் தந்தையை கொலை செய்ததாக மகன் மற்றும் தாய் வாக்குமூலம் அளித்தனர்.
- போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வருசநாடு:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஜி.உசிலம்பட்டியை சேர்ந்தவர் முனியாண்டி(55). கூலித்தொழிலாளியான இவருக்கு முருகேஸ்வரி என்ற மனைவியும், காளிதாஸ் என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். மகள்கள் திருமணமாகி குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர்.
காளிதாஸ் சென்னையில் உள்ள தனியார் நிறுவன த்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்க ளுக்கு முன்பு விடுமுறை க்காக சொந்த ஊருக்கு வந்தார். முனியாண்டிக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததால் குடும்பத்தில் பிரச்சிைன ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று வீட்டின்முன்பு தலையில் பலத்த காயங்களுடன் முனியாண்டி இறந்து கிடந்தார். அவரை மர்ம நபர்கள் கொன்றுவிட்டதாக காளிதாஸ் மற்றும் முருகே ஸ்வரி கண்டமனூர் போலீ சில் புகார் அளித்தனர்.
போலீசார் விசாரணை யில் முனியாண்டிக்கு கொலை செய்யும் அளவுக்கு எதிரிகள் இல்லை என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து தாய் மற்றும் மகனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்ட னர். அதில் முனியாண்டியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதனைதொடர்ந்து போலீ சார் அவர்களை கைது செய்தனர்.
முனியாண்டி மது பழக்கத்திற்கு அடிமையான தால் அடிக்கடி வீட்டில் பிரச்சினை செய்து வந்து ள்ளார். நேற்று குடிபோதை யில் வந்த அவர் முருகே ஸ்வரி மற்றும் காளிதாசுடன் தகராறு செய்தார். மேலும் அவர்களை தாக்க முயன்றார்.
இதனால் ஆத்திரமடைந்த காளிதாஸ் அவரை தள்ளிவிட்டார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அதன்பின்னர் முனியாண்டி யின் உடலை வீட்டின்முன்பு போட்டுவிட்டு அவர் இறந்துவிட்டதாக நாடக மாடியுள்ளனர்.
போலீசார் விசாரணை யில் அவர்கள் மாட்டி க்கொண்டனர். தாங்கள் எவ்வாறு கொலை செய்ேதாம் என போலீசில் தாய், மகன் வாக்குமூலம் அளித்துள்ளனர்.






