என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • கொடைக்கானலில் விதிமீறி கட்டப்பட்ட 24 கட்டிடங்களுக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிப்ப குதிகளில் விதியை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு மதுரை ஐ-கோர்ட்டு கிளை பூட்டி சீல் வைக்க கடந்த 2019ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இதனையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் இணைந்து வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட இடங்களில் விதி மீறி கட்டப்பட்ட 54 கட்டிடங்களுங்கு பூட்டி சீல் வைத்தனர்.

    இதனைத் தொடர்ந்து சென்னை நகர்ப்புற வீட்டு வசதி வாரியத்திடம் வீதி மீறி கட்டப்பட்ட கட்டிடத்தின் உரிமை யாளர்கள் கட்டிடங்களை திறக்க கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து சென்னை நகர்ப்புற வீட்டு வசதி வாரியம் வில்பட்டி ஊராட்சி பகுதிகளில் உள்ள 24 கட்டிடங்களுக்கு மட்டும் மறு சீரமைப்புக்காக 3 மாத காலம் அவகாசம் அளித்து கட்டிடங்களை வரைமுறைப்படுத்திக் கொள்ளும் பணிகள் மேற்கொள்ள கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனுமதியளித்தனர், இதனை தொடர்ந்து 24கட்டிடங்கள் திறக்கப்பட்டது.

    இந்நிலையில் 3 மாத காலத்திற்கும் மேலாகியும், தற்போது வரை இந்த கட்டிடங்கள் மாற்றியமைக்கப்படாமல் உள்ளது. மேலும் கட்டிடங்களை வரைமுறை படுத்தியதற்கான சான்றிதழ்களை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திடம் அளிக்கவில்லை. எனவே மீண்டும் பூட்டி சீல் வைக்க வட்டார வளர்ச்சி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

    வில்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் விதி மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு மீண்டும் பூட்டி சீல் வைக்க வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் முதல்கட்டமாக இந்த 24 கட்டிடங்களுக்கு நோட்டீஸ் வழங்கி, மின்சார துண்டிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கோள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட்டார வளர்ச்சி அலுவலர் விஜய சந்திரிகா தகவல் தெரிவித்துள்ளார்.

    • திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மலைப்பாதையில் உறுதி தன்மையற்ற இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
    • சாயும் நிலையில் உள்ள இரும்பு தடுப்புகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பாச்சலூர், கே.சி.பட்டி மலைப்பாதையில் தடுப்பு சுவர்கள் இல்லாமல் இருந்தது. தற்போது இந்த பகுதிகளில் இரும்பு தடுப்புகள் அமைக்கும் பணி சில வாரங்களாக நடந்து வருகிறது. இவை உரிய வழிகாட்டுதல், விதிமுறை ப்படி அமைக்காமல் உறுதியற்ற நிலையில் அமைக்கப்படுகிறது. இது போன்ற தடுப்புகள் விபத்துக்களை தவிர்க்குமா என்ற கேள்விக் குறி எழுந்துள்ளது.

    பெரும்பகுதியான இட ங்களில் உறுதி த்தன்மையற்ற முறையில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட் டுள்ளன. இவற்றின் அருகில் நிற்கும் பயணிகள் சாயும் போது இவை விழும் நிலையில் பலவீனமாக உள்ளது. இரும்பு தடுப்புகள் காட்சி பொருளாகவே உள்ளது. எனவே இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்னெ ச்சரிக்கை நடவடிக்கை எடுத்து விபத்தை தடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திண்டுக்கல்லில் குடியிருப்பு கட்டிடங்கள் போலீசார் மற்றும் பொதுமக்கள் நடமாட்டமின்றி சிதிலமடைந்து வருகிறது.
    • முறையான பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்துள்ள குடியிருப்புகளை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே உள்ள சாணார்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான கிராமங்களை சேர்ந்தவர்கள் தினமும் வந்து செல்லும் முக்கிய மையமாக அமைந்துள்ளது. மேலும் நத்தம், காரைக்குடி, சிவகங்கை ஆகிய பகுதி களுக்கு சாணார்பட்டி வழியாகத்தான் செல்ல வேண்டும். இங்கு உள்ள போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர், சப் -இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள் உட்பட மொத்தம் 36 பேர் பணி புரிந்து வருகிறார்கள்.

    இந்த போலீஸ் நிலையம் அருகே பல ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் குடியிருப்பு கட்டப்பட்டது. இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குடியிருப்பு, சப்-இன்ஸ்பெ க்டர் மற்றும் போலீசாரு க்கான குடியிருப்புகள் உள்ளன. இவற்றில் போலீ சார் குடும்பங்களுடன் வசித்து வந்தனர். இந்நிலை யில் இந்த குடியிருப்புகள் பழுதடைய தொடங்கின. இதனால் இங்கு வசித்த போலீசார் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர்.

    அதன்பின் பல ஆண்டுகளாக இந்த குடியிருப்புகள் பயன்பாடி ன்றி இருப்பதால் அங்கு புதர்கள் அடர்ந்து வளர்ந்து விட்டன. இந்த குடியிருப்பு கட்டிடங்கள் போலீசார் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சிதிலமடைந்து வருகிறது. இதனால் இந்த குடியிருப்பு பகுதிகளில் விஷ சந்துகள் அடையும் இடமாக உள்ளது. இந்த குடியிருப்புகளை சீரமைக்க கருத்துரு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அரசுக்கு அனுப்பப்பட்டு ள்ளது. இந்த நிலையில் முறையான பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்துள்ள இந்த குடியிருப்புகளை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    • பக்தர்கள் தொடர்ச்சியாக தீர்த்தக்காவடி எடுத்து கோவிலுக்கு வருகின்றனர்.
    • பழனி பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். திருவிழா, விசேஷம், விடுமுறை நாட்களில் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். இந்நிலையில் பழனி முருகன் கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான பங்குனி உத்திரம் வருகிற 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

    பங்குனி உத்திர திருவிழா என்பது கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் முருகப்பெருமானை குளிர்விக்கும் பொருட்டு பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்காவடி எடுத்து வந்து அபிஷேகம் செய்து வழிபாடு செய்வார்கள். 10 நாட்கள் திருவிழா நடைபெற்று முடிந்தாலும், அதன்பிறகும் பக்தர்கள் தொடர்ச்சியாக தீர்த்தக்காவடி எடுத்து கோவிலுக்கு வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் பெரும்பாலும் படிப்பாதை வழியே மலைக்கோவிலுக்கு சென்று கோவில் வெளிபிரகாரத்தை சுற்றி வந்து வழிபடுகின்றனர்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே பழனி பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. குறிப்பாக பகல் வேளையில் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் கோடை காலம் தொடங்கி உள்ளதால் வெயிலின் தாக்கத்தில் இருந்து பக்தர்களை காப்பதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி சில நாட்களுக்கு முன்பு வடக்கு, மேற்கு வெளிப்பிரகாரத்தில் நிழற்பந்தல் அமைக்கப்பட்டது. இந்நிலையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து பக்தர்களை காப்பதற்காக வெளிப்பிரகாரத்தில் உள்ள தரை பகுதியில் "கூலிங் பெயிண்ட்" அடிக்கப்பட்டு உள்ளது. அதன்மேல் கயிற்றால் ஆன விரிப்பு விரிக்கப்படுவதால் வெயிலின் தாக்கத்தை இன்னும் தணிக்க முடியும் என கோவில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • திண்டுக்கல் சாணார்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கு கடந்த ஒரு வருடமாக பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி தொகை கிடைக்கவில்லை
    • வேளாண் அதிகாரிகளும் உரிய பதில் அளிக்காததால் விவசாயிகள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகளுக்கு மத்திய அரசின் பிரதம மந்திரி காப்பீட்டு தொகையாக வருடத்துக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. இந்த தொகை ஜனவரி, மே, செப்டம்பர் ஆகிய 3 மாதங்களில் தலா ரூ.2 ஆயிரம் வீதம் விவசாயி களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

    ஆனால் இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்கு கடந்த 1 வருடமாக இந்த தொகை கிடைக்கவில்லை என புகார் தெரிவிக்கி ன்றனர். இது குறித்து கம்பிளியம்பட்டியில் உள்ள கனரா வங்கி கிளை அலுவலகத்துக்கு சென்று கேட்ட போது, ஆதாருடன் வங்கி கணக்கை இணைக்க வேண்டும் என தெரி வித்துள்ளனர்.

    ஆனால் அதனை இணைத்தபிறகும் மத்திய அரசின் நிவாரண தொகை கிடைக்கவில்லை. இது குறித்து மீண்டும் சென்று கேட்ட போது உங்கள் பகுதியில் வட்டார வேளாண் அதிகாரிகளை தொடர்பு கொண்டு முறை யிடுமாறு கூறியுள்ளனர்.

    வேளாண் அதிகாரிகளும் உரிய பதில் அளிக்காததால் இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர். மத்திய அரசு வழங்கும் விவசாயிகளுக்கான நிவாரண தொகை பல்வேறு குடும்பங்களுக்கு உதவியாக இருந்து வந்தது. ஆனால் சமீப காலமாக பெரும்பாலான விவசாயி களுக்கு இது கிடைக்காமல் இத்திட்டம் கண் துடைப்பு போல இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    • திண்டுக்கல்லில் வளைகாப்பு விழாவில் பங்கேற்ற ஒரு தரப்பினர் கர்ப்பிணியை சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அபிராமிகு ப்பத்தை சேர்ந்தவர் சக்திவேல்(32). இவருக்கும் தேனி மாவட்டம் தேவதா னப்பட்டியை சேர்ந்த நாகவேணிஎன்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    7 மாத கர்ப்பிணியாக இருந்த நாகவேணிக்கு நேற்று சிலுவத்தூர் சாலை யில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவில் பங்கேற்ற ஒரு தரப்பினர் திடீரென நாகவேணியை கர்ப்பிணி என்றும் பார்க்காமல் சரமாரியாக தாக்கினர். இதை தடுக்க வந்த அவரது கணவரையும் தாக்கிவிட்டு தப்பிச்சென்றனர்.

    இதனால் மண்டபத்தில் பரபரப்பான சூழல் உருவானது. படுகாய மடைந்த 2 பேரும் திண்டு க்கல் அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்ப ட்டுள்ளனர். இதுகுறித்து நகர் வடக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளில் தற்போது மிளகு சீசன் தொடங்கியுள்ளது.
    • திண்டுக்கல், மதுரை மற்றும் கேரளா போன்ற வெளிமாநிலங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலைப்பகுதியில் உள்ள பெரும்பாறை, தாண்டிக்குடி, பண்ணைக்காடு, பூலத்தூர், மஞ்சள்பரப்பு, கொங்கப்பட்டி, புல்லா வெளி, குப்பம்மாள்பட்டி, மங்களம் கொம்பு, கே.சி.பட்டி, பெரியூர், பாச்சலூர், ஆடலூர், பன்றிமலை, சோலைக்காடு, போன்ற மலைப்பகுதிகளில் தற்போது மிளகு சீசன் தொடங்கியுள்ளன. தற்போது இங்கு விளையும் மிளகு விளைச்சல் குறைந்துள்ளது.

    மார்ச் மாதம் தொடங்கி ஜூலை மாதத்தில் மிளகு சீசன் முடிவடையும். தற்போது கருப்பு மிளகு ரூ.470 முதல் ரூ.500 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. 1 கிலோ பச்சை மிளகு காம்புடன் ரூ.130 முதல் ரூ135 வரை விற்பனை செய்யப்படுகிறது. பச்சை மிளகு பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, கே.சி.பட்டி போன்ற கமிஷன் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

    இப்பகுதியில் விளையும் மிளகு தரம் பிரித்து வியாபாரிகள் வாங்கி பட்டிவீரன்பட்டி, திண்டுக்கல், மதுரை, கேரளா, போன்ற வெளி மாநிலங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    • பழனியில் பதுக்கி வைத்திருந்த 450 கிலோ ரேசன் அரிசியை உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • அரிசி ஆலை உரிமையாளர் நடராஜ் கைது செய்யப்பட்டார்.

    பழனி:

    பழனி அருகே சத்திரப்பட்டியை சேர்ந்தவர் நடராஜ்(47). கே.வேலூரில் ரைஸ்மில் வைத்துள்ளார். இந்த ரைஸ்மில்லில் ரேசன் அரிசியை வாங்கி பட்டைதீட்டி விற்பனை செய்வதாக உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதைதொடர்ந்து உணவுப்பொருள் கடத்தல் பிரிவு போலீசார் இந்த மில்லில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த 450 கிலோ ரேசன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மினிவேனை பறிமுதல் செய்தனர்.

    இதைத்தொடர்ந்து அரிசி ஆலை உரிமையாளர் நடராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுற்றுலா பயணிகளிடையே பெரும் வரவேற்பு உள்ளதால் மேலும் ஒரு சுழல் சுற்றுலா மையம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • புதிய சுழல் சுற்றுலா மையத்திற்கான பூமி பூஜை தற்போது நடைபெற்றுள்ளது.

    கொடைக்கானல்:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே மன்னவனூர் பகுதியில் ஏற்கனவே வனத்துறையின் சார்பில் சூழல் சுற்றுலா மையம் அமைக்கப்பட்டு சாகச விளையாட்டுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    இதற்கு சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பு உள்ளதால் அப்பகுதியில் மேலும் ஒரு சூழல் சுற்றுலா மையம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுற்றுலா அமைச்சர் நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.

    இதனையடுத்து செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆலோசனையின் பேரில் சூழல் சுற்றுலா மையம் அமைக்க ரூ.1.75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ள்ளது. இதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஒன்றிய க்குழுப்பெருந்தலைவர் சுவேதாராணி கணேசன் தலைமை வகித்தார்.துணைத் தலைவர் முத்துமாரி சுரேஷ் பாண்டி முன்னிலை வகித்தார். மன்னவனூர் ஊராட்சி மன்ற தலைவர் முருகன், கோட்டாட்சியர் ராஜா,சுற்றுலா அலுவலர் (பொறுப்பு) சுதா, தி.மு.க. மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கணேசன், தமிழ்நாடு ஹோட்டல் மேலாளர் அன்பரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இங்கு அமைய உள்ள சூழல் சுற்றுலா மையத்தில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக நவீன முறையில் டென்ட் கொட்டகைகள் அமைக்கப்படுகின்றன. உணவு விடுதி, சாகச சுற்றுலா உட்பட பல்வேறு அம்சங்கள் இடம் பெறுவது குறிப்பிடத்தக்கதாகும். இதன் காரணமாக அப்பகுதியில் சுற்றுலா மென்மேலும் வளர்ச்சி பெறும் என பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

    • மலைகளின் இளவரசி யான கொடைக்கானலில் கடந்த 2 நாட்களாக மழை ஓய்ந்திருந்தது.
    • மலைப்பகுதியில் உள்ள அனைத்து நீர்வீழ்ச்சியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி யான கொடைக்கானலில் கடந்த 2 நாட்களாக மழை ஓய்ந்திருந்தது. இந்த நிலையில் பகலில் வெயில் அடித்தபோதும் நேற்று மாலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்து சுமார் 1மணி நேரம் கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.

    தொடர் மழையால் வெள்ளி நீர் வீழ்ச்சி, பியர்சோலா அருவி, பாம்பார்அருவி உள்ளிட்ட மலைப்பகுதியில் உள்ள அனைத்து நீர்வீழ்ச்சியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குளிர்கால சீசன் முடியும் நிலையில் தொடர்ந்து மழைப்பெய்து வருவதால் பொதுமக்கள் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு பிர ச்சினை ஏற்படாது.

    எனினும் பேரிக்காய், பிளம்ஸ் பழங்கள் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்படும் என்பதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

    • கார் தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மற்றும் கூம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
    • வேடசந்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் தீயை அணைத்தனர்.

    வேடசந்தூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்(46). வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது மாமனாரான பொன்னம்பலம்(78) என்பவரின் கண் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு ஒரு காரில் வந்து கொண்டிருந்தார். இவர்களுடன் மாமியார் கீதா(66) என்பவரும் வந்தார்.

    காரை சாந்தப்பன்(33) என்பவர் ஓட்டிவந்தார். இன்று காலை திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகில் உள்ள ரெங்கநாதபுரம் மின்வாரிய அலுவலகம் அருகே கார் வந்து கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் தலைகுப்புற கவிழ்ந்த கார் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதைபார்த்ததும் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். காரில் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டவர்களை மீட்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர். பொன்னம்பலம் இடுப்பிற்கு கீழே பலத்த தீக்காயமடைந்து அவரது 2 கால்களும் கருகியது. டிரைவர் சாந்தப்பனுக்கும் முழங்காலுக்கு கீழே தீக்காயம் ஏற்பட்டது.

    சந்தோஷ்குமார் மற்றும் கீதா லேசான காயங்களுடன் மீட்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மற்றும் கூம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வேடசந்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் அங்கு வந்து தீயை அணைத்தனர்.

    மேலும் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு காயமடைந்த 4 பேரும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அனுமோலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
    • குழந்தையுடன் மாயமான பிஜேசை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    கம்பம்:

    தமிழக கேரள எல்லைப்பகுதியான கம்பம் மெட்டு அருகே காஞ்சியார் பகுதியைச் சேர்ந்தவர் பிஜேஸ் (வயது 32). விவசாயி. இவரது மனைவி அனுமோல் (27). தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகள் உள்ளார். கடந்த 18-ந் தேதி பள்ளியில் இருந்து வந்தவர் மாயமானதாக அவரது கணவர் போலீசில் புகார் அளித்தார்.

    அதன் பிறகு பிஜேசும் மாயமானார். இந்நிலையில் பாம்பனார் பகுதியில் வசித்து வந்த அனுமோலின் தந்தை ஜான் தனது மகளுக்கு போன் செய்தார். போன் ரிங் ஆகி பின்னர் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டது. இதனால் சந்தேகமடைந்த ஜான் மற்றும் அவரது மனைவி பிலோமினா ஆகியோர் தங்களது மகளை பார்க்க வீட்டுக்கு வந்தனர். வீட்டின் படுக்கை அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதால் வெளியே சென்று பார்த்தபோது கட்டிலுக்கு அடியில் போர்வை சுற்றப்பட்ட நிலையில் அனுமோல் உடல் கிடந்தது.

    இது குறித்து அவர்கள் போலீசாருக்கு புகார் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அனுமோலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், அனுமோல் இறந்து 3 நாட்களுக்கு மேல் ஆகி இருக்கலாம். உடல் அழுகிய நிலையில் இருப்பதால் காயங்கள் கண்டுபிடிக்க முடியவில்லை. கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணத்தால் தனது மனைவியை கொலை செய்து விட்டு பிஜேஸ் தப்பி ஓடி இருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

    அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருப்பதால் அவரை தேடி வருகிறோம்.

    பிரேத பரிசோதனைக்கு பிறகு முழுமையான முடிவுகள் தெரியவரும். கொலை செய்த தனது மனைவியின் உடலை துண்டு துண்டாக வெட்டி கடத்துவதற்காக அவர் மறைத்து வைத்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது என்றனர். தற்போது குழந்தையுடன் மாயமான பிஜேசை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ×