என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பயன்பாடு இல்லாத போலீஸ் குடியிருப்புகளை சீரமைக்க கோரிக்கை!
    X

    சிதிலமடைந்து காணப்படும் போலீஸ் குடியிருப்புகள்.

    பயன்பாடு இல்லாத போலீஸ் குடியிருப்புகளை சீரமைக்க கோரிக்கை!

    • திண்டுக்கல்லில் குடியிருப்பு கட்டிடங்கள் போலீசார் மற்றும் பொதுமக்கள் நடமாட்டமின்றி சிதிலமடைந்து வருகிறது.
    • முறையான பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்துள்ள குடியிருப்புகளை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே உள்ள சாணார்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான கிராமங்களை சேர்ந்தவர்கள் தினமும் வந்து செல்லும் முக்கிய மையமாக அமைந்துள்ளது. மேலும் நத்தம், காரைக்குடி, சிவகங்கை ஆகிய பகுதி களுக்கு சாணார்பட்டி வழியாகத்தான் செல்ல வேண்டும். இங்கு உள்ள போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர், சப் -இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள் உட்பட மொத்தம் 36 பேர் பணி புரிந்து வருகிறார்கள்.

    இந்த போலீஸ் நிலையம் அருகே பல ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் குடியிருப்பு கட்டப்பட்டது. இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குடியிருப்பு, சப்-இன்ஸ்பெ க்டர் மற்றும் போலீசாரு க்கான குடியிருப்புகள் உள்ளன. இவற்றில் போலீ சார் குடும்பங்களுடன் வசித்து வந்தனர். இந்நிலை யில் இந்த குடியிருப்புகள் பழுதடைய தொடங்கின. இதனால் இங்கு வசித்த போலீசார் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர்.

    அதன்பின் பல ஆண்டுகளாக இந்த குடியிருப்புகள் பயன்பாடி ன்றி இருப்பதால் அங்கு புதர்கள் அடர்ந்து வளர்ந்து விட்டன. இந்த குடியிருப்பு கட்டிடங்கள் போலீசார் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சிதிலமடைந்து வருகிறது. இதனால் இந்த குடியிருப்பு பகுதிகளில் விஷ சந்துகள் அடையும் இடமாக உள்ளது. இந்த குடியிருப்புகளை சீரமைக்க கருத்துரு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அரசுக்கு அனுப்பப்பட்டு ள்ளது. இந்த நிலையில் முறையான பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்துள்ள இந்த குடியிருப்புகளை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    Next Story
    ×