என் மலர்
நீங்கள் தேடியது "புதிய சுழல் சுற்றுலா மையம்"
- சுற்றுலா பயணிகளிடையே பெரும் வரவேற்பு உள்ளதால் மேலும் ஒரு சுழல் சுற்றுலா மையம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
- புதிய சுழல் சுற்றுலா மையத்திற்கான பூமி பூஜை தற்போது நடைபெற்றுள்ளது.
கொடைக்கானல்:
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே மன்னவனூர் பகுதியில் ஏற்கனவே வனத்துறையின் சார்பில் சூழல் சுற்றுலா மையம் அமைக்கப்பட்டு சாகச விளையாட்டுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதற்கு சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பு உள்ளதால் அப்பகுதியில் மேலும் ஒரு சூழல் சுற்றுலா மையம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுற்றுலா அமைச்சர் நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.
இதனையடுத்து செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆலோசனையின் பேரில் சூழல் சுற்றுலா மையம் அமைக்க ரூ.1.75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ள்ளது. இதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஒன்றிய க்குழுப்பெருந்தலைவர் சுவேதாராணி கணேசன் தலைமை வகித்தார்.துணைத் தலைவர் முத்துமாரி சுரேஷ் பாண்டி முன்னிலை வகித்தார். மன்னவனூர் ஊராட்சி மன்ற தலைவர் முருகன், கோட்டாட்சியர் ராஜா,சுற்றுலா அலுவலர் (பொறுப்பு) சுதா, தி.மு.க. மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கணேசன், தமிழ்நாடு ஹோட்டல் மேலாளர் அன்பரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இங்கு அமைய உள்ள சூழல் சுற்றுலா மையத்தில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக நவீன முறையில் டென்ட் கொட்டகைகள் அமைக்கப்படுகின்றன. உணவு விடுதி, சாகச சுற்றுலா உட்பட பல்வேறு அம்சங்கள் இடம் பெறுவது குறிப்பிடத்தக்கதாகும். இதன் காரணமாக அப்பகுதியில் சுற்றுலா மென்மேலும் வளர்ச்சி பெறும் என பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.






