என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • காதலர்கள் தங்கள் குடும்பத்துக்கு தெரியாமல் காதலை வளர்த்து வந்தனர்.
    • போலீசார் காதல் ஜோடியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே தென்னம்பட்டியை சேர்ந்தவர் சிவபிரகாஷ் (வயது20). மில்தொழிலாளி. அய்யலூர் அருகே கருஞ்சின்னனூரை சேர்ந்தவர் பெரியக்காள் (22). இவர் வேடசந்தூர் பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. காதலர்கள் தங்கள் குடும்பத்துக்கு தெரியாமல் காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த நிலையில் அவர்கள் திருமணம் செய்ய முடிவு செய்தபோது பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களை பெற்றோர் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என நினைத்த காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தனர்.

    அதன்படி சம்பவத்தன்று 2 பேரும் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தனர். மகள் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் வடமதுரை போலீசில் புகார் அளித்தனர். விரைவில் தங்கள் மகளை கண்டுபிடித்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். போலீசார் காதல் ஜோடியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • ஹெலிகாப்டர் உள்ளிட்ட நவீன எந்திரங்கள் பயன்படுத்த வேண்டும் என வனஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
    • காட்டுத்தீ கட்டுப்படுத்தப்பட்டு பசுமையான சூழல் ஏற்பட்டுள்ளது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானல் வனப்பகுதியில் ஏராளமான அரியவகை மூலிகை செடிகள், வானுயர்ந்த மரங்கள் உள்ளன. மேலும் யானை, காட்டெருமை, காட்டுபன்றி, முயல், மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. மார்ச் மாத தொடக்கத்தில் பனியின் தாக்கம் குறைந்து வெப்பம் அதிகரித்தது.

    இதனால் வனப்பகுதிகளில் வறண்ட நிலையே காணப்பட்டது. இதன் காரணமாக அடிக்கடி காட்டுத்தீ பற்றி எரிந்தது. இதில் சிக்கி ஏராளமான மரங்கள் மற்றும் மூலிகை செடிகள் எரிந்து நாசமாகின. மேலும் வனவிலங்குகளும் இடம் பெயர்ந்து பாதிப்புக்குள்ளானது.

    வனவிலங்குகள் குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்ததால் விவசாயிகளும் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வந்தனர். எனவே வனத்துறையினர் காட்டுத்தீயை கட்டுப்படுத்த போராடினர். ஒரு இடத்தில் அணைத்தால் மற்றொரு இடத்தில் பற்றி சேதத்தை ஏற்படுத்தியது.

    மேலும் ஹெலிகாப்டர் உள்ளிட்ட நவீன எந்திரங்கள் பயன்படுத்த வேண்டும் என வனஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருந்தபோதும் போதுமான கருவிகள் இல்லாததால் காட்டுத்தீ பற்றும் சமயங்களில் வனத்துறையினர் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொடைக்கானல் மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் காட்டுத்தீ கட்டுப்படுத்தப்பட்டு பசுமையான சூழல் ஏற்பட்டுள்ளது.

    காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய வனத்துறையினர் தற்போது நிம்மதி அடைந்துள்ளனர்.

    • மனைவி இறந்து விட்டதால் மன உளைச்சலில் இருந்தார்.
    • ஏற்கனவே 2 முறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    தாடிக்கொம்பு:

    திண்டுக்கல் அருகே மேற்கு மீனாட்சி நாயக்கன்பட்டி சோலைராஜா காலனியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 75). இவரது மனைவி இறந்து விட்டதால் மன உளைச்சலில் இருந்தார்.

    இதனால் ஏற்கனவே 2 முறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் செட்டிநாயக்கன்பட்டி கணேஷ் நகரில் உள்ள மகன் அய்யப்பன் வீட்டுக்கு சென்று வந்துள்ளார். அவர் தந்தைக்கு ஆறுதல் கூறியுள்ளார். ஆனால் வழியிலேயே மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முருகனின் உடலை பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் தங்குவதற்கு புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தையும் பார்வையிட்டு கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
    • நோயாளிகளுக்கு வாட்டர் ஏ.டி.எம்.மில் கட்டணம் இல்லாமல் குடிநீர் வழங்கவும் அல்லது ஒரு ரூபாய் கட்டணத்தில் வழங்கவும் நகராட்சி ஆணையாளரிடம் அறிவுறுத்தினார்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் மாவட்ட கலெக்டர் விசாகன் பல லட்சம் ரூபாய் மதிப்பில் நடைபெற்று வரும் கட்டிட பணிகளை திடீர் ஆய்வு கொண்டார். வில்பட்டி ஊராட்சி பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை அரைக்கும் அரவை எந்திரத்தை ஆய்வு மேற்கொண்டு தூய்மை பணியாளர்களிடம் பணியின் தன்மை குறித்து கேட்டறிந்தார்,

    இதனைத்தொடர்ந்து குடி நீர் செல்வதற்கு அமைத்து வரும் குடி நீர் குழாய்கள் , புதிதாக கட்டப்பட்டு வரும் நவீன கழிப்பறை கட்டிடங்கள், கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் தங்குவதற்கு புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் அரசு ஆஸ்பத்திரியில் புதிதாக நகராட்சி சார்பில் புதிதாக அமைத்த கட்டண வாட்டர் ஏ.டி.எம் எந்திரத்தினை ஆய்வு மேற்கொண்ட பிறகு நோயாளிகளுக்கு வாட்டர் ஏ.டி.எம்.மில் கட்டணம் இல்லாமல் குடிநீர் வழங்கவும் அல்லது ஒரு ரூபாய் கட்டணத்தில் வழங்கவும் நகராட்சி ஆணையாளரிடம் அறிவுறுத்தினார், இதில் நகராட்சி ஆணையாளர் நாராயணன், கோட்டாட்சியர் ராஜா, வட்டாட்சியர் முத்துராமன், வட்டார வளர்ச்சி ஆணையாளர் ஜெசி ஞானசேகரன், கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயசந்திரிகா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • அதிகமாக தண்ணீர் வரத்து இருக்கும் பகுதியான குண்டாறு வனப்பகுதியில் குட்டிகளுடன் யானைகள் கூட்டமாக வந்தது.
    • வனத்துறையினர் விரைந்து வந்து யானைக் கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் வனப்பகுதிகளிலும் பொதுமக்களின் விளை நிலங்களிலும் யானை கூட்டங்கள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருகிறது. ஒரு சில நேரங்களில் பேரிஜம் வனப்பகுதியிலும், வனப்பகுதியை ஒட்டிய விளை நிலங்கள் அதிகம் அமைந்துள்ள கிராமப் பகுதிகளிலும் யானைகள் உலா வருவது வழக்கமாக உள்ளது.

    இந்நிலையில் காப்புக்காடுகளில் அதிகமாக தண்ணீர் வரத்து இருக்கும் பகுதியான குண்டாறு வனப்பகுதியில் குட்டிகளுடன் யானைகள் கூட்டமாக உலா வந்தது.

    அப்போது வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். யானைகள் உலா வருவதை அறிந்த வனத்துறையினர் யானைக் கூட்டத்தை விரைந்து வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனால் யானைக் கூட்டங்கள் விளைநிலங்களுக்குள் புகாமல் தடுக்கப்பட்டது.

    • விவசாயிகள் கூலி கொடுக்க முடியாததால் தக்காளிகளை பறிக்காமல் செடியிலேயே விட்டு விடும் அவலம் ஏற்பட்டுள்ளது.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, அய்யலூர், எரியோடு, பாளையம், குஜிலியம்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர்.

    அய்யலூரில் தக்காளிக்கென இயங்கும் தனி மார்க்கெட்டில் தக்காளிகளை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். அங்கிருந்து சென்னை, தஞ்சை, திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

    தற்போது விளைச்சல் அதிகரித்ததால் மார்க்கெட்டுக்கு டன் கணக்கில் தக்காளி வரத்து உள்ளது. ஆனால் அங்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். 14 கிலோ கொண்ட பெட்டி ரூ.150 முதல் ரூ.200 வரை மட்டுமே விற்பனையாகிறது. இதனால் விவசாயிகளுக்கு சாகுபடி செய்த செலவிற்கு கூட பணம் கிடைக்க வில்லை. பெரும்பாலான விவசாயிகள் கூலி கொடுக்க முடியாததால் தக்காளிகளை பறிக்காமல் செடியிலேயே விட்டு விடுகின்றனர். ஒருசிலர் தாங்களே பறிப்பு பணியில் ஈடுபட்டு வாகனங்கள் மூலம் கிராமங்களில் விற்பனை செய்து வருகின்றனர். இருந்தபோதும் நிரந்தர விலை இல்லாததால் விவசாயிகளின் பாடு திண்டாட்டமாக உள்ளது.

    • கொடைக்கானல் மலைக்கிராம மக்கள் குடிநீர் வசதி, சாக்கடை வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதியுற்று வருகின்றனர்.
    • எனவே அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பெரும்பாறை:

    கொடைக்கானல் கீழ்மலை பாச்சலூர் ஊராட்சி கடசிக்காடு. இங்கு 47 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 25 அரசு தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அனைத்து தொகுப்பு வீடுகளும் சேதம் அடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. மழைக்கு தண்ணீர் ஒழுகாமல் இருக்க மேற்கூரை தகரம், தார்ப்பாயால் மூடப்பட்டுள்ளது.

    மேலும் பலத்த காற்று வீசும் போது மேற்கூரையில் போடப்பட்டுள்ள தகரம் மற்றும் தார்ப்பாய் கிழிந்து விடுவதால், அதன் மேல் கருங்கற்களை அடுக்கி வைத்துள்ளனர். சில வீடுகளுக்கு மேற்கூரை போடாமல் உள்ளது. இதனை கிராம மக்கள்தங்கள் சொந்த செலவில் சரி செய்து வருகின்றனர். மேலும் குடிநீர் வசதி, சாக்கடை வசதி, தெரு விளக்கு வசதி, கழிப்பறை வசதி போன்ற பல அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதியுற்று வருகின்றனர். இங்கு கட்டப்பட்டுள்ள குடிநீர் தொட்டி மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

    இங்கிருந்து வரும் குடிநீர் மஞ்சள் நிறத்தில் இருப்பதால் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். குடிநீருக்காக அருகே உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் இருந்து தண்ணீர் எடுத்து வருகின்றனர். இக் கிராமத்துக்கு தற்போது புதிய போர்வெல் போட்டு, மேல்நிலை தொட்டி கட்டி குடிதண்ணீர் வழங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.எனவே இந்தப் பணியை விரைவில் முடித்து குடிதண்ணீர் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாச்சலூர் ஊராட்சி மன்ற செயலர் ரகு தெரிவித்தார்.

    • திண்டுக்கல்-மதுரை ரோட்டில் 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதியதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    வத்தலக்குண்டு:

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகில் உள்ள பொன்னம்பட்டி காலனியை சேர்ந்தவர் மணிவேல்(23) இவர் வத்தலக்குண்டு பேரூராட்சி அலுவலகத்தில் தற்காலிக தூய்மை பணியாளராக வேலைபார்த்து வந்தார். இவருக்கும் அன்னகாமு (22) என்பவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண்குழந்தை உள்ளது. தற்போது அன்னகாமு 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். நேற்று இரவு வேலை முடித்து மணிவேல் தனது குடும்பத்தினருக்கு உணவு வாங்கி கொண்டு மோட்டார் சைக்கிளில் மதுரை ரோட்டில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிரில் சிவசக்திநகரை சேர்ந்த மீன்வியாபாரி சேக்உதுமான் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்குநேர் மோதி க்கொண்டதில் மணிவேல் படுகாயமடைந்தார்.

    வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டுவரும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் விபத்தில் சேக்உதுமான் மற்றும் அவரது மனைவி படுகாயமடைந்து தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டுள்ள னர்.

    இதுகுறித்து வத்தல க்குண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    இதனிடையே வத்தல க்குண்டு அரசு ஆஸ்பத்திரி யில் பிரேத பரிசோதனை க்காக வைக்கப்பட்டுள்ள மணிவேல் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விபத்திற்கு காரணமானவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தியதால் சுமார் 30 நிமிடத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்க ப்பட்டது. போலீசார் அவர்களை சமாதானம் செய்து வைத்தனர்.

    • பழனி அருகே நெய்காரப்பட்டி அரசு உதவிபெறும் பள்ளியில் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது.
    • இதில் உடற்கல்வி ஆசிரியர் மாணவனை தனியாக அழைத்து சென்று பிரம்பால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பழனி:

    பழனி அருகே உள்ள நெய்க்காரபட்டியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 44). கூலித் தொழி லாளி. இவருக்கு காளீஸ்வரி என்ற மனைவியும், ஹரிராம் (13) என்ற மகனும் உள்ளனர். ஹரிராம் நெய்க்காரபட்டி யில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார்.

    நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற மாணவன் மாலையில் வீடு திரும்பிய போது கை, கால் மற்றும் உடல்களில் காயம் இருந்தது. இதனை பார்த்த பெற்றோர் அதிர்ச்சியடைந்து விசாரித்தனர். பழனி அரசு ஆஸ்பத்திரியில் ஹரிராமை சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக பள்ளி பஸ்சில் ஹரிராம் ஏறியு ள்ளார். இருக்கையில் அமரும் போது சக மாண வர்களுடன் மோதல் ஏற்பட்டது. இதில் ஹரிராமை சில மாணவர்கள் தாக்கியுள்ளனர். இது குறித்து பள்ளியில் உட ற்கல்வி ஆசிரியராக பணி புரியும் சுரேந்தர் என்பவர் விசாரித்து மாணவனை தனியாக அழைத்து சென்று பிரம்பால் தாக்கியுள்ளார்.

    தான் அடித்ததை வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளார். இதனால் மாணவன் பயந்து போய் பெற்றோரிடம் கூட கூறாமல் இருந்துள்ளான். ஆனால் ஹரிராமுக்கு உடல் நிலை பாதிக்கப்படவே நடந்த விபரங்களை கூறியுள்ளான்.

    இதனைத் தொடர்ந்து பழனி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் சில மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திண்டுக்கல்-பழனி ரோடு பைபாஸ் சாலையில் மின்னல் வேகத்தில் வந்த வாகனம் போக்குவரத்து சிக்னலில் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் - பழனி ரோடு பைபாஸ் சாலையில் நேற்று இரவு கேரள பதிவெண் கொண்ட வாகனம் மின்னல் வேகத்தில் வந்து கொண்டு இருந்தது. அப்போது அங்கிருந்த சிக்னல் கம்பம் மற்றும் அறிவிப்பு பலகை மீது திடீரென மோதி நின்றது. இது குறித்து தகவல் கிடைத்ததும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சேதமடைந்த மின் கம்பத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    போலீசார் வருவதை அறிந்ததும் விபத்தை ஏற்படுத்திய வாகனம் அங்கிருந்து சென்று விட்டது.

    இரவு நேரம் என்பதால் யார் மீதும் கம்பம் விழாமல் தவிர்க்கப்பட்டது. நெடுஞ்சாலைகளில் இரவு நேரங்களில் வரும் வெளியூர் வாகனங்கள் அசுர வேகத்தில் செல்வதால் இது போன்ற விபத்துகள் அடிக்கடி நடந்து வரு கின்றன. கனரக வாகனங்கள் மட்டுமின்றி மோட்டார் சைக்கிள்கள், கார் போன்றவையும் மின்னல் வேகத்தில் சென்று பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன.

    எனவே இது போன்ற நபர்களை கண்டறிந்து போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர், வடமதுரையை சுற்றி ஏராளமான மலைகிராமங்கள் உள்ளன.
    • அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள உணவு பூங்கா விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர், வடமதுரையை சுற்றி ஏராளமான மலைகிராமங்கள் உள்ளன. இங்கு பயிரிடப்படும் காய்கறிகள் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் சில நேரங்களில் விலை கிடைக்காமல் விவசாயி களுக்கு நஷ்டம் ஏற்படுத்து கிறது.

    மேலும் விலை அதிகரித்த போதும் போதுமான லாபம் அவர்களுக்கு கிடைக்க வில்லை. எனவே அரசு சார்பில் உணவு பூங்கா அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி கடந்த 2018-ம் ஆண்டு 10 மெகா உணவு பூங்கா அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. அதில் ஒன்று அய்யலூர் அருகே தங்கம்மாபட்டியில் அமைக்க முடிவு செய்யப்ப ட்டது.

    அதன்படி ரூ.82 கோடி மதிப்பில் மாம்பழ கூழ், நிலக்கடலை, புளி, தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட வேளாண் பொருட்களை உணவு பொருட்களாக மதிப்பு கூட்டி விற்பனை செய்யும் உணவுப்பூங்கா அமைக்கும் பணி கடந்த 2020-ம் ஆண்டு தொடங்க ப்பட்டது. இதற்காக 10 ஏக்கரில் நிலம் கைய கப்படுத்தப்பட்டு குளிர்சா தன கட்டமைப்பு, வணிகம் செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு ள்ளது.

    இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், சுற்றுவட்டார பகுதிகளில் வெங்காயம், தக்காளி, மிளகாய் உள்ளிட்ட காய்கறிகள் அதிகளவில் பயிரிட்டு வருகிறோம். மழை காலங்களில் உற்பத்தி குறைவாக இருக்கும்போது நல்ல விலை கிடைக்கும். ஆனால் சில நேரங்களில் அதிக வரத்து இருந்தால் விலை கிடைக்காமல் உணவுப்பொருட்கள் அழி யும் நிலை ஏற்பட்டு வரு கிறது.

    எனவே குளிர்சாதன கிட்டங்கி அமைத்தால் இப்பகுதி விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும். அய்யலூர் பகுதியில் தக்காளி அதிகளவில் பயிரிடப்படுகிறது. விலை வீழ்ச்சி காரணமாக கடந்த சில நாட்களாக சாலை யோரம் தக்காளிகளை கொட்டி செல்லும் அவலநிலை ஏற்பட்டு வருகிறது. எனவே உணவு பூங்கா விரைந்து செயல்பாட்டிற்கு வந்தால் தக்காளி பதப்படுத்தப்படும்.

    மேலும் ஜூஸ் கம்பெனிகள் உருவாகும் வாய்ப்புள்ளது. இதன்மூலம் விவசாயிகளுக்கு நிரந்தர விலை கிடைக்கும். இந்த உணவு பூங்காவை விரைவில் திறக்க வேண்டும். இதன்மூலம் அய்யலூர், எரியோடு, வடமதுரை, குஜிலியம்பாறை, பாளையம் பகுதி விவசாயிகள் வாழ்க்கைத்தரம் உயரும் என்றனர்.

    நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலாவதியான பொருட்கள் விற்கும் கடைகளுக்கு அபராதம் விதிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நத்தம்:

    நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் பிஸ்கட்டுகள், இனிப்புகள், மிக்சர் உள்ளிட்ட உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலான பாக்கெட்டுகளில் உற்பத்தி தேதி, காலாவதியான தேதி ஆகியவை குறிப்பிடப்படவில்லை.

    இப்பகுதியில் அதிகாரிகள் முறையாக ஆய்வு பணியில் ஈடுபடவில்லை என குற்றம்சாட்டுகின்றனர். இதனால் உணவு பொருட்கள் தரமானதாக உள்ளதாக தெரியவில்லை. எனவே அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து காலாவதியான பொருட்கள் விற்கும் கடைகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×