என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி மாணவனை பிரம்பால் தாக்கிய ஆசிரியர்; பழனியில் பரபரப்பு!
    X

    கோப்பு படம்

    பள்ளி மாணவனை பிரம்பால் தாக்கிய ஆசிரியர்; பழனியில் பரபரப்பு!

    • பழனி அருகே நெய்காரப்பட்டி அரசு உதவிபெறும் பள்ளியில் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது.
    • இதில் உடற்கல்வி ஆசிரியர் மாணவனை தனியாக அழைத்து சென்று பிரம்பால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பழனி:

    பழனி அருகே உள்ள நெய்க்காரபட்டியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 44). கூலித் தொழி லாளி. இவருக்கு காளீஸ்வரி என்ற மனைவியும், ஹரிராம் (13) என்ற மகனும் உள்ளனர். ஹரிராம் நெய்க்காரபட்டி யில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார்.

    நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற மாணவன் மாலையில் வீடு திரும்பிய போது கை, கால் மற்றும் உடல்களில் காயம் இருந்தது. இதனை பார்த்த பெற்றோர் அதிர்ச்சியடைந்து விசாரித்தனர். பழனி அரசு ஆஸ்பத்திரியில் ஹரிராமை சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக பள்ளி பஸ்சில் ஹரிராம் ஏறியு ள்ளார். இருக்கையில் அமரும் போது சக மாண வர்களுடன் மோதல் ஏற்பட்டது. இதில் ஹரிராமை சில மாணவர்கள் தாக்கியுள்ளனர். இது குறித்து பள்ளியில் உட ற்கல்வி ஆசிரியராக பணி புரியும் சுரேந்தர் என்பவர் விசாரித்து மாணவனை தனியாக அழைத்து சென்று பிரம்பால் தாக்கியுள்ளார்.

    தான் அடித்ததை வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளார். இதனால் மாணவன் பயந்து போய் பெற்றோரிடம் கூட கூறாமல் இருந்துள்ளான். ஆனால் ஹரிராமுக்கு உடல் நிலை பாதிக்கப்படவே நடந்த விபரங்களை கூறியுள்ளான்.

    இதனைத் தொடர்ந்து பழனி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் சில மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×