மனைவி இறந்த சோகத்தில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை

மனைவி இறந்து விட்டதால் மன உளைச்சலில் இருந்தார். ஏற்கனவே 2 முறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

தாடிக்கொம்பு:

திண்டுக்கல் அருகே மேற்கு மீனாட்சி நாயக்கன்பட்டி சோலைராஜா காலனியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 75). இவரது மனைவி இறந்து விட்டதால் மன உளைச்சலில் இருந்தார்.

இதனால் ஏற்கனவே 2 முறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் செட்டிநாயக்கன்பட்டி கணேஷ் நகரில் உள்ள மகன் அய்யப்பன் வீட்டுக்கு சென்று வந்துள்ளார். அவர் தந்தைக்கு ஆறுதல் கூறியுள்ளார். ஆனால் வழியிலேயே மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முருகனின் உடலை பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com