என் மலர்
திண்டுக்கல்
- பதவி உயர்வு, 2 அல்லது 3 மையங்கள் பொறுப்பு பார்ப்பதை தவிர்த்தல் மற்றும் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என 9 கோரிக்கைகள்.
- அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குழந்தைகளின் நலன் கருதி கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள பள்ளி கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை வழங்குவது போல் அங்கன்வாடி மையங்களுக்கும் ஒரு மாத காலம் விடுமுறை வழங்கிட வேண்டும்.
10 ஆண்டுகள் பணி செய்த அங்கன்வாடி உதவியாளர்களுக்கு எந்த விதமான நிபந்தனையின்றி உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும். அங்கன்வாடி பணியாளர்களுக்கு கூடுதல் பொறுப்பாக 2 அல்லது 3 மையங்கள் பொறுப்பு பார்ப்பதை தவிர்க்க வேண்டும். காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
அங்கன்வாடி மையங்களில் மின் கட்டணம் அரசே கட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். நத்தம் தொகுதி செயலாளர் சண்முகவள்ளி தலைமையில், பொறுப்பாளர்கள் நித்யா, பிரேமா, ஈஸ்வரி உள்ளிட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- செயற்கை நீரூற்றுகள் சோதனை முறையில் கடந்த2 நாட்களாக இயக்கப்பட்டு வருகின்றன.
- சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதனைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து புகைப்படங்கள் மற்றும் செல்பி எடுத்து செல்கின்றனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க பல கோடி செலவில் சாலைகள் அமைத்தல், வடிகால் வாய்க்கால் அமைத்தல், காய்கறி அங்காடி கட்டும் பணி, புதிய நவீன கழிப்பிடங்கள் கட்டுதல் போன்ற பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த மாதம் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெற உள்ள நிலையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகை யில் மேலும் பல திட்டங்கள் செயல்பாட்டுக்கு வர உள்ளன.
நட்சத்திர ஏரியில் சுமார் ரூ. 24 கோடி ரூபாய் செலவில் அபிவிருத்தி பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஏரியை சுற்றி நடைபாதை சீரமை த்தல் புதிய மின்விளக்குகள் அமைத்தல் படகில் சவாரி செய்வதற்காக அதிநவீன நடைமேடை அமைத்தல் 75 புதிய படகுகள் வாங்குதல் போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் ஏரி தண்ணீரை தூய்மைப்படுத்துவதுடன் அதன் மூலமே செயற்கை நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை சீசன் தொடங்குவதற்குள் முடிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் செயற்கை நீரூற்றுகள் சோதனை முறையில் கடந்த2 நாட்களாக இயக்கப்பட்டு வருகின்றன. இவை சுற்றுலா பயணிகளை மிகவும் கவரும் வண்ணம் உள்ளதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதனைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து புகைப்படங்கள் மற்றும் செல்பி எடுத்து செல்கின்றனர்.
இதேபோல் மேலும் பல வசதிகள் ஏற்படுத்திதர பழனி எம்.எல்.ஏ. செந்தில்குமார் முயற்சியின் பேரில் நகர்மன்ற தலைவர் செல்லத்துரை, துணை த்தலைவர் மாயக்கண்ணன், ஆணையாளர் நாராயணன், பொறியாளர் முத்துக்குமார் ஆகியோரது முயற்சியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- கோவை பதிவெண் கொண்ட சரக்கு வாகனத்தை நிறுத்த முயன்றபோது அவர்கள் தப்பி ஓட முயன்றனர்.
- போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
குள்ளனம்பட்டி:
நெல்லை முத்தமிழ் தோட்டத்தை சேர்ந்த சாமுவேல் மகன் கிறிஸ்டோபர்(26). அதேபகுதியை சேர்ந்த ஆரோக்கியராஜ் மகன் வினித்(25). இவர்கள் 2 பேரும் கோவை மலர்காடு என்ற பகுதியில் தங்கி குனியமுத்தூரில் தண்ணீர் கேன் சப்ளை செய்யும் வேலை பார்த்து வந்தனர்.
அதேபகுதியில் சபரிநாதன்(30) என்பவர் தண்ணீர் கேன் சப்ளை செய்யும் வேலை பார்த்து வந்தார். இவர்கள் இருவருக்கும் தொழில் விசயம் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று இரவு அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் சபரிநாதனை கிறிஸ்டோபர் மற்றும் வினித் ஆகியோர் கத்தியால் சரமாரியாக குத்தினர்.
இதில் படுகாயமடைந்த சபரிநாதனை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனைதொடர்ந்து போலீசார் தங்களை கைது செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில் கிறிஸ்டோபர், வினித் ஆகியோர் ஒரு சரக்கு வாகனத்தில் தங்களது சொந்த ஊரான நெல்லைக்கு புறப்பட்டு வந்தனர்.
அவர்கள் வந்த வாகனத்தின் அடையாளத்தை வைத்து கோவை போலீசார் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பிக்கு தகவல் தெரிவித்தனர். இதனைதொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின்பேரில் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள மூலசத்திரம் பகுதியில் இன்று காலை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் குமரேசன், குமார், போலீசார் அறிவுத்தம்பி, ராஜபாண்டி ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது கோவை பதிவெண் கொண்ட சரக்கு வாகனத்தை நிறுத்த முயன்றபோது அவர்கள் தப்பி ஓட முயன்றனர். இருந்தபோதும் போலீசார் அவர்களை துரத்திச்சென்று மடக்கியபோது கோவையில் தொழிலாளியை குத்திவிட்டு தப்பிவந்தவர்கள் என உறுதியானது. இதனைதொடர்ந்து குனியமுத்தூர் போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்து கிறிஸ்டோபர் மற்றும் வினித்தை ஒப்படைத்தனர்.
அவர்கள் வந்த சரக்கு வாகனம் மற்றும் அதில் இருந்த கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கிறிஸ்டோபர் மீது நெல்லை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதேபோல் வினித் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளதும் தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 3-ந்தேதி முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.
- 4-ந்தேதி கிரிவீதியில் தேரோட்டம் நடைபெறுகிறது.
தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. சூரர்களை வென்றபின் பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திர நாளன்று தெய்வானையை முருகப்பெருமான் திருமணம் செய்த நாளே பங்குனி உத்திர திருவிழாவாக ஒவ்வொரு முருகன் கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது.
மேலும் கோடை வெயில் தொடங்கும் பங்குனி மாதத்தில் பழனி முருகப்பெருமானை குளிர்விக்கும் பொருட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஈரோடு மாவட்டம் கொடுமுடிக்கு சென்று தீர்த்த காவடி எடுத்து பழனிக்கு வந்து அபிஷேகம் செய்வது பழனி முருகன் கோவிலில் சிறப்பு அம்சமாகும்.
புகழ்பெற்ற இந்த திருவிழா, உபகோவிலான திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில் நாளை (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மேலும் அன்றையதினம் மலைக்கோவிலில் உச்சிக்காலத்தில் காப்புக்கட்டும் நடைபெறுகிறது.
10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் காலை தந்தப்பல்லக்கில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளி வீதிஉலா நடக்கிறது. அதேபோல் இரவில் வெள்ளி காமதேனு, ஆட்டுக்கிடா, யானை மற்றும் தங்கமயில், தங்கக்குதிரை போன்ற வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 3-ந்தேதி முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. தொடர்ந்து அன்று இரவு வெள்ளிரதத்தில் சுவாமி வீதிஉலா நடைபெறுகிறது.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக பங்குனி உத்திர தேரோட்டம், 4-ந்தேதி மாலை கிரிவீதியில் நடைபெறுகிறது. 7-ந்தேதி கொடி இறக்குதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமையில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
- நகர் பகுதியில் உள்ள 35 பயனாளிகளுக்கு தொகுப்பு வீடுகள் கட்டுவதற்கான உத்தரவுகள் வழங்கப்பட்டது.
- பல்வேறு துறையைச் சேர்ந்த அதிகாரிகள், அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கொடைக்கானல்:
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக புதிதாக தொகுப்பு வீடுகள் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பழனி எம்.எல்.ஏ செந்தில்குமார் ஆலோசனையின் பேரில் கொடைக்கானல் நகர் பகுதியில் உள்ள 35 பயனாளிகளுக்கு தொகுப்பு வீடுகள் கட்டுவதற்கான உத்தரவுகள் வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி நகர் மன்ற கூடத்தில் நடைபெற்றது.
இதில் நகர சபை தலைவர் செல்லத்துரை, துணைத் தலைவர் மாயக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு உத்தரவுகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் நகர சபை தலைவர் முகமது இப்ராஹிம், வாரிய தொழில்நுட்ப அதிகாரி டோனி உட்பட பல்வேறு துறையைச் சேர்ந்த அதிகாரிகள், அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- தக்காளியை பதப்படுத்தி இருப்பு வைக்க போதிய வசதி இல்லை. அறிவிப்பு வெளியிடப்பட்டும் நடைமுறைக்கு வரவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
- உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்ட த்தில் கடந்த சில வாரங்க ளாகவே தக்காளி விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. 1 கிலோ ரூ.10க்கும் கீழ் சென்றதால் விவசாயிகளே வாகனங்களில் வைத்து நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர். ஒட்டன்சத்திரம், அம்பி ளிக்கை, இடையகோட்டை, வடகாடு, கேதையறும்பு, விருப்பாச்சி, தங்கச்சி யம்மாபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தக்காளி சாகுபடி செய்ய ப்பட்டு வருகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் தக்காளி ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படு கிறது.
பின்னர் நெல்லை, மதுரை உள்ளிட்ட நகரங்க ளுக்கும் கேரள போன்ற வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. தக்காளி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு கடந்த 1 மாதமாகவே மிகுந்த நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. தற்போது 14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி ரூ.70க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
1 கிலோ ரூ.5 முதல் ரூ.6 வரை மட்டுமே கிடைப்பதால் விவசாயிகள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர். தக்காளியை பதப்படுத்தி இருப்பு வைக்க போதிய வசதி இல்லை என்றும் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டும் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். எனவே தக்காளி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
- கிராம பங்காளிகள் கோவில் முன்பாக தங்களையும் சாமி கும்பிட அனுமதிக்க கோரி கையில் பதாகைகள் ஏந்தியபடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- அங்கு நடந்த கூட்டத்தில் இது சம்பந்தமாக பேசி முடிவெடுக்க பட்டு கோவிலுக்குள் சாமிகும்பிட அனைவரும் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கபட்டது.
நத்தம்:
நத்தம் அருகே வத்திபட்டியில் இருந்து லிங்கவாடி கிராமத்திற்கு செல்லும் சாலையில் பொன்னர் சங்கர் கோவில் உள்ளது. இக்கோவிலில் காசம்பட்டி, வத்திபட்டி, கோமனாம்பட்டி, விளாம்பட்டி மற்றும் சாத்தாம்பாடி ஆகிய 5 கிராமங்களில் உள்ள கோவிலுக்கு பாத்தியப்பட்ட பங்காளிகள் சேர்ந்து திருவிழா கொண்டாடுவர்.
இந்நிலையில் இதில் சில கிராமத்தை சேர்ந்த வர்களுக்கு மட்டும் கோவிலில் சாமி கும்பிட அனுமதி மறுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விளாம்பட்டி, கோமனா ம்பட்டி மற்றும் சாத்தாம்பாடி கிராம பங்காளிகள் கோவில் முன்பாக தங்களையும் சாமி கும்பிட அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கையில் பதாகைகள் ஏந்தியபடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீ சார் மற்றும் வருவாய்த்துறை யினர் தர்ணா போரா ட்டத்தில் ஈடுபட்டவர்களை தாலுகா அலுவலகத்திற்குள் அழைத்து சென்றனர். அங்கு நடந்த கூட்டத்தில் ஏற்கனவே இது சம்பந்தமாக பேசி முடிவெடுக்க பட்டு கோவிலுக்குள் சாமிகும்பிட அனைவரும் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கபட்டது. மேலும் சாமி கும்பிடுவது தொட ர்பாக யாரேனும்இடையூறு செய்தால் போலீஸ் நிலையத்தை அணுகலாம் என போலீசார் தெரி வித்தனர்.
- கடைக்குள் கீழே விழுந்து படுகாயமடைந்தவரை ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே உள்ள சிறுநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் மைக்கேல் டோமினிக் (வயது 25). கொத்தனார் வேலை பார்த்து வந்தார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் மொட்டனம்பட்டி ரெயில்வே கேட் அருகே அதி வேகமாக வந்து கொண்டு இருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த ஒரு டீக்கடைக்குள் பைக் புகுந்தது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்த ஓட்டம் பிடித்தனர். கடைக்குள் கீழே விழுந்து படுகாயமடைந்த டோமினிக்கை ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- இந்த செடிகள் 3 ஆண்டுகளில் பெரிதாக வளர்ந்து சுற்றுலா பயணிகளை கவரும் என்று பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
- தோட்டக்கலை கல்வி பயிலும் மாணவ-மாணவிகளுக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும்.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இதற்காக இங்குள்ள பிரையண்ட் பூங்காவில் பல்வேறு நாடுகளில் உள்ள மலர் நாற்றுகளை நட்டு பராமரிக்கும் பணியில் தோட்டக்கலைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக கொடைக்கானலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்களும் நட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள மலைப்பகுதிகளில் லானட்டா என்ற புதிய வகை குறிஞ்சி மலர்கள் கடந்த ஜனவரி மாதம் பூத்து குலுங்கியது. இதனைத் தொடர்ந்து தோட்டக்கலைத்துறை மற்றும் பூங்கா நிர்வாகம் சார்பில் அந்த மலர் நாற்றுகளை சேகரித்து ஒரு மாத காலம் பதியமிட்டு பராமரித்து வந்தது.
அவை வேர் பிடிக்க தொடங்கியதை தொடர்ந்து அந்த செடிகள் பிரையண்ட் பூங்காவில் உள்ள குறிஞ்சி தோட்டத்தில் நடப்பட்டு வருகிறது. இந்த செடிகள் 3 ஆண்டுகளில் பெரிதாக வளர்ந்து சுற்றுலா பயணிகளை கவரும் என்று பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் தோட்டக்கலை கல்வி பயிலும் மாணவ-மாணவிகளுக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும் என தெரிவிக்க ப்பட்டுள்ளது.
- குப்பைகளை எரிப்பதால் வேலைக்கு செல்பவர்களும், பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் புகை மண்டலத்தால் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
- குப்பைகளை முறைப்படி அள்ளி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாநக ராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகள் கொட்டப்படுவதை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியான துப்புரவு தொழிலாளர்களுக்கு நவீன எந்திரம் வழங்கப்பட்டு அனைத்து வீடுகளுக்கும் சென்று குப்பைகளை சேகரித்து அதனை உரிய முறையில் தரம் பிரித்து வழங்கி மறு சுழற்சி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இருந்தபோதும் குப்பைகள் கொட்ட இடம் இல்லாததாலும், தொழி லாளர்கள் முறைப்படி குப்பைகளை வாங்க வருவதில்லை என்பதாலும் பொதுமக்கள் நினைத்த இடங்களில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க சாலையில் கொட்டப்படும் குப்பை களை துப்புரவு தொழி லாளர்களே தீ வைத்து எரித்து வருகின்றனர்.
காலை நேரங்களில் குப்பைகள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டு எரிக்கப்படுகிறது. தெய்வ சிகாமணிபுரம், ஆரோக்கிய மாதா தெரு, பாரதிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இது போன்ற நிகழ்வு அடிக்கடி நடந்து வருகிறது. காலையில் வேலைக்கு செல்பவர்களும், பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் புகை மண்டலத்தால் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்ற னர்.
குப்பைகளை எரித்தால் காற்று மாசு ஏற்படும் என்பதை வலியுறுத்தி இதற்கு தடை விதிக்கப்பட்டு ள்ளது. இருந்தபோதும் துப்புரவு தொழிலாளர்கள் அடிக்கடி குப்பைகளை எரிப்பது தொடர் கதையாகி வருகிறது. எனவே இதனை தடுத்து நிறுத்தி குப்பைகளை முறைப்படி அள்ளி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பைக் நிலை தடுமாறி சாலையோரம் கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்த ஒருவர் சம்பவ இடத்தி லேயே பலியானார்.
- மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
செம்பட்டி:
மதுரை மாவட்டம் சோழவந்தானை சேர்ந்தவர் கோபால் (வயது48). இவர் தனது மகன் மணிகண்ட பிரபுவுடன் மோட்டார் சைக்கிளில் கன்னிவாடியில் உள்ள உறவினரை பார்க்க சென்றார்.
செம்பட்டி அருகே பழனி சாலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது திடீரென பைக் நிலை தடுமாறி சாலையோரம் கீழே விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த கோபால் சம்பவ இடத்தி லேயே பலியானார்.
காயங்களுடன் மீட்க ப்பட்ட மணிகண்டபிரபு திண்டுக்கல் அரசு ஆஸ்ப த்திரி யில் சேர்க்கப்பட்டு ள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்க ப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து செம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.
- தற்போது மழை பெய்து வருவதால், காபி செடிகள் பூ பூத்து குலுங்குகின்றன.
- இந்த ஆண்டு காபி செடிகள் அதிக அளவில் பூத்திருப்ப தால் கூடுதல் மகசூல் கிடை க்கும்
பெரும்பாறை:
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மழை பகுதிகளான பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, கொங்க ப்பட்டி, தாண்டிக்குடி, பண்ணைக்காடு, மங்கள ம்கொம்பு, பூலத்தூர், குப்பம்மாள்பட்டி, கே.சி.பட்டி, ஆடலூர், பன்றிமலை, சோலைக்காடு, பெரியூர், பாச்சலூர் ஆகிய பகுதிகளில் விவசாயம் முக்கிய தொழி லாக உள்ளது.
இங்கு உள்ள தோட்டங்க ளில் காபி, மிளகு, வாழை போன்ற பயிர்கள் பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். காபியில் அரேபிகா, ரோபோஸ்டா என 2 ரகங்கள் உள்ளன. பெரும்பாறை பகுதியில் தற்போது மழை பெய்து வருவதால், காபி செடிகள் பூ பூத்து குலுங்குகின்றன.
கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு காபி செடிகள் அதிக அளவில் பூத்திருப்ப தால் கூடுதல் மகசூல் கிடை க்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.






