என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • பெரியம்மாள் வீட்டிற்கு அருகில் வசிக்கும் பிச்சைமணி மகன் சரவணக்குமார் என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
    • 65 வயது மூதாட்டியை கற்பழித்து கொலை செய்த 19 வயது வாலிபர் கைது செய்யப்பட்டது நத்தம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறை அடுத்துள்ள ரெங்கய சேர்வைகாரன்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி மனைவி பெரியம்மாள்(65). கணவர் இறந்துவிட்டார். இவரது மகனுக்கு திருமணமாகி வெளியூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    பெரியம்மாள் அதேபகுதியில் உள்ள கருவேலங்காட்டில் கடந்த மாதம் கொலை செய்யப்பட்டு இறந்துகிடந்தார். இதுகுறித்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயபாண்டியன், இசக்கிராஜா, ஜெய்கணேஷ் ஆகியோர் தலைமையிலான போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் பெரியம்மாள் வீட்டிற்கு அருகில் வசிக்கும் பிச்சைமணி மகன் சரவணக்குமார்(19) என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    இதுகுறித்து சரவணக்குமார் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, கடந்த மாதம் 11-ந்தேதி திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் உள்ள கோவில் விழாவிற்கு சென்றேன். நன்கு மதுகுடித்துவிட்டு கிடா விருந்தில் கலந்து கொண்ட நான் திரும்ப சொந்த ஊருக்கு வந்தேன். அப்போது அருகில் தூங்கி கொண்டிருந்த பெரியம்மாளை கற்பழிக்க முயன்றேன். அவர் சத்தம் போடவே வலுக்கட்டாயமாக எனது ஆசையை நிறைவேற்றினேன். அதன்பிறகு அவர் வெளியில் என்னை பற்றி கூறிவிடுவார் என்ற அச்சத்தில் கொலை செய்தேன்.

    பின்னர் அவர் அணிந்திருந்த மூக்குத்தியை திருடிவிட்டு எனது வீட்டிற்கு சென்றுவிட்டேன். எப்போதும் போல் வழக்கம்போல் எனது வேலையை செய்து வந்த நிலையில் போலீசார் அடிக்கடி எனது நடவடிக்கையில் சந்தேகப்பட்டு விசாரித்ததில் நடந்த விபரங்களை கூறினேன் என்றார். 65 வயது மூதாட்டியை கற்பழித்து கொலை செய்த 19 வயது வாலிபர் கைது செய்யப்பட்டது நத்தம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த தமிழிசை அரசு ஆஸ்பத்திரியில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் தனியார் ஆஸபத்திரியில் சேர்க்கப்பட்டார்.
    • சின்னாளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய 7 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.

    சின்னாளப்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியைச் சேர்ந்தவர் கோகிலா தங்கசாமி (வயது 70). பிரபல எழுத்தாளர் மற்றும் கல்வியாளராக உள்ளார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழ்துறை இயக்குனராகவும் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறை துணைவேந்தராகவும் பணியாற்றி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றவர். தேனி மாவட்டம் கோகிலாபுரத்தை சொந்த ஊராக கொண்ட இவர் அந்த ஊரின் பெயரை தங்கசாமி என்ற பெயருடன் சேர்த்து கோகிலா தங்கசாமி என்று அழைக்கப்பட்டார்.

    இவரது மகன் தமிழிசை (35). இவர் காதல் திருமணம் செய்து சின்னாளப்பட்டியில் தனது தந்தையுடன் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் புது வீடு கட்டி வருகிறார். அந்த வீட்டு முன்பு இவர் நின்று கொண்டு இருந்தபோது 7 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்து கண் இமைக்கும் நேரத்தில் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை பிடிக்க முயன்ற போது தப்பி ஓடினர். ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த தமிழிசை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் தனியார் ஆஸபத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    இது குறித்து சின்னாளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய 7 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் பல மாதங்களாக மூடப்படாமல் உள்ளது.
    • பள்ளியில் பயிலும் மாணவர்கள் அவ்வப்போது பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல்-பழனி சாலையில் சாலை விரிவாக்க பணி மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது. இதனால் சாலையின் இருபுறமும் பள்ளங்கள் தோண்டப்பட்டு சீரமை ப்பணி நடந்தது. திண்டுக்கல் ராமையன்பட்டி அருகே தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது.

    இந்த பள்ளியின் முன்பாக சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் பல மாதங்களாக மூடப்படாமல் உள்ளது. இதனால் பள்ளியில் பயிலும் மாணவர்கள் அவ்வப்போது பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.மேலும் இந்த வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகளும் பள்ளத்தில் விழுந்து படுகாயம் அடைகின்றனர்.

    ஆகவே பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன் பள்ளியின் முன்பாக உள்ள இந்த பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • உடல் முழுவதும் மூலிகை எண்ணெயை தடவியவாறு வாழை இலையால் மூடி சுமார் 45 நிமிடம் இந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    • இதனால் கோடையில் ஏற்படும் சரும நோய், உடல் உஷ்ணம், செரிமாண க்கோளாறு போன்றவற்றை தீர்த்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். வெப்பத்தை தணிக்க பல்வேறு உணவுகளை உட்கொள்ளும் வேளையில் உடல் உஷ்ணம், உடல் பருமன், செரிமாண க்கோளாறு உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்பட்டும் அவதிப்படுகின்றனர்.

    இதனை தவிர்க்க திண்டுக்கல்லில் தனியார் அமைப்பின் சார்பில் வாழை இலை குளியல் அறிமுகப்படுத்தப்பட்டு மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. உடல் முழுவதும் மூலிகை எண்ணெயை தடவியவாறு வாழை இலையால் மூடி சுமார் 45 நிமிடம் இந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதன் மூலம் கோடையில் ஏற்படும் சரும நோய், உடல் உஷ்ணம், செரிமாண க்கோளாறு போன்றவற்றை தீர்த்து வருவதாக தெரிவிக்கின்றனர். இது மட்டுமின்றி மன அமைதி மற்றும் உடல் புத்துணர்ச்சி அளிப்பதாகவும் தெரிவிக்கின்றனர். வாழை இலை குளியல் மட்டுமின்றி நீராவி குளியல், யோகா பயிற்சிகளும் அளிக்கப்படு கிறது. இதன் மூலம் நீண்ட நாள் நோய்வாய் பட்டவர்கள் கூட குணமடைய முடியும் என்று தெரிவிக்கின்றனர்.

    மூலிகை எண்ணெய் மற்றும் இயற்கை உணவுகள் இம்மையத்தின் சார்பில் தயாரிக்கப்படுகிறது. சிகிச்சை தேவைப்படு பவர்கள் இங்கேயே தங்கி இருந்தும் இந்த மருத்துவ முறையை எடுத்துக்கொள்கின்றனர். விஞ்ஞானம் எவ்வளவு தூரம் வளர்ந்தாலும் நோய் வாய் பட்டால் இன்றைய உலகில் மல்டி ஸ்பெஷா லிட்டி மருத்துவமனையை தேடிச் செல்லும் நிலையே உள்ளது.

    ஆனால் பல லட்சங்களை செலவு செய்தாலும் நம் முன்னோர்கள் பின்பற்றிய இது போன்ற இயற்கை உணவு மற்றும் பாரம்பரிய முறையை பின் பற்றினாலே பக்க விளைவுகளற்ற நோய் குணமாகும் என்று தெரிவிக்கின்றனர்.

    • படுகாயமடை ந்த அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • வடமதுரை போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்

    வடமதுரை:

    திண்டுக்கல்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் கல்லூரி பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்ஸை குளத்தூரை சேர்ந்த அம்பிகா(வயது32) என்ற பெண் டிரைவர் ஓட்டிவந்தார். இதேபோல் ஒரு ஜீப்பில் தனியார் பள்ளி தாளாளர் பெருமாள்(55) தனது குடும்பத்தினருடன் வந்து கொண்டிருந்தார்.

    பாறைப்பட்டி பிரிவு அருகே திடீரென ஜீப் கல்லூரி வாகனத்தின் மீது மோதி விபத்துக்கு ள்ளானது. இதில் பெருமாள், அவரது மருமகள் லாவண்யா, ஒரு வயது பேரன் மற்றும் கல்லூரி வாகனத்தில் வந்த டிரைவர் அம்பிகா, கல்லூரி மாணவி ஒருவர் ஆகியோர் படுகாயமடை ந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்க ளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்தில் கல்லூரி பஸ்ஸில் வந்த மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து அறிந்ததும் வடமதுரை போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது .

    • சிறுதொழில் பிச்சையெடுப்பில் ஈடுபடு த்தப்படும் குழந்தைகளை கண்டறிந்து, அவர்களை மீட்டு மறுவாழ்வு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
    • இளைஞர் நீதிச் சட்டத்தின் கீழ் பதிவு பெற்று செயல்பட்டு வரும் குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களில் 3 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவ முகாம் நடத்திட வேண்டும்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு குழு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் தெரிவித்த தாவது:- திண்டுக்கல் மாவட்டத்தில் நேருயுவ கேந்திரா மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக்களில் சிறப்பாக செயல்படும் உறுப்பினர்களை தேர்வு செய்து, குழந்தைகள் பாதுகாப்பு தன்னார்வ லர்களாக செயல்படுத்திடும் வகையில் அவர்களுக்கு பயிற்சி அளித்திட வேண்டும்.

    சிறுதொழில் பிச்சையெடுப்பில் ஈடுபடு த்தப்படும் குழந்தைகளை கண்டறிந்து, அவர்களை மீட்டு மறுவாழ்வு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இளைஞர் நீதிச் சட்டத்தின் கீழ் பதிவு பெற்று செயல்பட்டு வரும் குழந்தை கள் பராமரிப்பு இல்லங்க ளில் 3 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவ முகாம் நடத்திட வேண்டும்.

    கிராம சுகாதார செவிலியர்கள், அங்க ன்வாடி பணியாள ர்கள், தலைமையாசிரி யர்கள், காவல்துறையை சார்ந்த சிறப்பு சிறார் காவல்பி ரிவைச் சேர்ந்த குழந்தைகள் நல காவல் அலுவலர்களுக்கு, குழந்தைகள் உரிமைகள், பாதுகாப்பு, குழந்தைகள் நலன் தொடர்புடைய சட்டங்கள் குறித்த திறன் வளர்ப்பு பயிற்சி வழங்க வேண்டும். கிராம, வட்டார, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி அளவி லான குழந்தைகள் பாது காப்பு குழு கூட்டங்களை 3 மாதங்களுக்கு ஒருமுறை அல்லது தேவைப்படு ம்போது நடத்திட வேண்டும் என தெரிவித்தார்.

    • தமிழ்நா ட்டில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களு க்கும் விடுமுறை வழங்க வேண்டும்,
    • 10 ஆண்டுகள் பணி செய்த அங்கன்வாடி உதவியாளர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்,

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு ஒன்றிய பகுதியிலுள்ள அங்கன்வாடி பணியாளர்கள், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் சங்கம் சார்பில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவல கத்தை முற்றுகையிட்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் ஜானகி தலைமை தாங்கினார். வத்தலகுண்டு வட்டாரத் தலைவர் நிறைமதி, வட்டாரச் செயலாளர் சக்திராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு மாவட்டச் செயலாளர் பிரபாகரன், ஒன்றிய அமைப்பாளர் வின்சென்ட் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    தற்போது குழந்தை களுக்கு காய்ச்சல் பரவி வரும் சூழலில் 2 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளின் நலன் கருதியும்,குழந்தைகள் நல மைய பணியாளர்களின் நலன் கருதியும் கடும் கோடை வெயிலின் தாக்க த்திலிருந்து பாது காத்துக் கொள்ள பள்ளி,கல்லூரி களுக்கு கோடை விடுமுறை விடுவது போல் தமிழ்நா ட்டில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களு க்கும் விடுமுறை வழங்க வேண்டும்,

    10 ஆண்டுகள் பணி செய்த அங்கன்வாடி உதவியாளர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை முழுமை யாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறு த்தி ஆர்ப்பாட்டம் நடைபெ ற்றது. ஆர்ப்பாட்ட த்தில் சுமார் 200 க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    ராகுல்காந்திக்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், எம்.பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    வேடசந்தூர்:

    வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆத்துமேடு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரது எம்.பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் பிரசன்னா தலைமை தாங்கினார். இளைஞர் காங்கிரஸ் தொகுதி துணைத்தலைவர் ராஜேஷ், பொதுச்செயலாளர்கள் பிரகாஷ், கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சாமிநாதன், முரளி, ரெங்கமலை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். வட்டார தலைவர்கள் சதீஸ், பாலமுருகன், கோபால்சாமி, எரியோடு நகர தலைவர் சண்முகம், நிர்வாகிகள் மூர்த்தி, பாண்டியன், பகவான், கண்ணன், ஜாபர்அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து பல்வேறு இடங்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
    • அவர்களை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு பகுதியில் கஞ்சா விற்பனை செய்ய ப்படுவதாக தென்மண்டல ஐ.ஜி அஷ்ராகார்க்கிற்கு வந்த தகவலின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அழகுபாண்டி தலைமை யிலான போலீசார் தீவிர வாகனசோதனையில் ஈடுபட்டனர். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேரை பிடித்து விசாரித்தனர்.

    அவர்கள் முன்னுக்குபின் முரணான தகவல் அளித்தனர். அவர்கள் வைத்திருந்த பொருட்களை சோதனை செய்ததில் 22 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனை கடத்தி வந்த மல்லையா புரத்தை சேர்ந்த கார்த்திக்(35), சித்தையன்கோட்டையை சேர்ந்த விஜயராகவன்(26), வத்தலக்குண்டு காந்திநகரை சேர்ந்த பாரதிதாசன் மனைவி பாண்டி ச்செல்வி(35), சுந்தர்ராஜ்(49), உசிலம்பட்டியை சேர்ந்த அழகர்சாமி மனைவி சித்ரா(31) என்பதும் தெரிய வந்தது.

    இவர்கள் பாண்டி ச்செல்வி வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து பல்வேறு இடங்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் நிலக்கோட்டை டி.எஸ்.பி முருகன், இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் பாண்டிச்செல்வி வீட்டிற்கு சென்று ரூ.3 லட்சம் ரொக்கப்பணம், 5 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.

    • 5 அடி நீளமுள்ள கொம்பேறி மூக்கன் பாம்பை உயிருடன் மீட்டு ஒட்டன்சத்திரம் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படை க்கப்பட்டது.
    • குடியிருப்பு பகுதிக்குள் பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் பழனி சாலையில் உள்ள சொசைட்டி காலனியில் வசித்து வரும் உம்மன் மகன் தாமஸ் என்பவருடைய வீட்டில் இன்று காலை பாம்பு புகுந்து விட்டதாக வீட்டின் உரிமையாளர் ஒட்டன்சத்திரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடு த்துசம்பவ இடத்திற்கு நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று அவருடைய வீட்டில் பதுங்கி இருந்த சுமார் ஐந்து அடி நீளமுள்ள கொம்பேறி மூக்கன் பாம்பை உயிருடன் மீட்டனர். பின்னர் மீட்க ப்பட்ட பாம்பு ஒட்டன்சத்திரம் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படை க்கப்பட்டது.

    வனத்துறை அதிகாரிகள் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில் பாம்பை பத்திரமாக வனப்பகுதிக்குள் விட்டனர்.குடியிருப்பு பகுதிக்குள் பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது

    • 7 அடி நீளம் உள்ள கருஞ்சாரைப் பாம்பினை வனத்துறை ஊழியர்களிடம் ஒப்படைத்தனர்.
    • பாம்பு பிடிப்பதை பார்ப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் நகரில் உள்ள கல்லுக்குழி பகுதிக்கு செல்லும் வழியில் ஜெயச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டிற்குள் பாம்பு புகுந்து விட்டதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    இதனை அடுத்து அங்கு விரைந்த அவர்கள் வீட்டிற்குள் பதுங்கி இருந்த சுமார் 7 அடி நீளம் உள்ள கருஞ்சாரைப் பாம்பினை 1 மணி நேரம் போராடி பிடித்தனர். பின்னர் அந்தப் பாம்பை வனத்துறை ஊழி யர்களிடம் ஒப்படைத்தனர்.

    அவர்கள் அதை அப்சர்வேட்டரி பகுதியில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் கொண்டு சென்று விட்டனர். பாம்பு பிடிப்பதை பார்ப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் அப்பகுதியில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    • இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா பழனி கோவிலின் உபகோவிலான திருஆவினன்குடி கோவிலில் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • கோவில் யானை கஸ்தூரி முன்செல்ல கொடி படத்திற்கு மங்கள வாத்தியங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும். பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திர நாளன்று தெய்வானையை முருகப்பெருமான் திருமணம் செய்த நாளே ஒவ்வொரு முருகன் கோவில்களிலும் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

    கோடை வெயில் தொடங்கும் பங்குனி மாதத்தில் பழனி முருகப்பெருமானை குளிர்விக்கும் விதமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து ஈரோடு, கொடுமுடிக்கு சென்று அங்கிருந்து தீர்த்தம் எடுத்து பழனி முருகன் கோவிலில் அபிஷேகம் செய்து வழிபடுவார்கள்.

    இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா பழனி கோவிலின் உபகோவிலான திருஆவினன்குடி கோவிலில் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானை சிறப்பு அலங்காரத்தில் மண்டபத்தில் எழுந்தருளினர். வேல், மயில், சேவல் உருவம் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிற கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோவில் உட்பிரகாரமாக வலம் வந்தது.

    கோவில் யானை கஸ்தூரி முன்செல்ல கொடி படத்திற்கு மங்கள வாத்தியங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன்பிறகு காலை 10.45 மணிக்கு மிதுன லக்னத்தில் வேதமந்திரங்கள் முழங்க தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க முருகப்பெருமானை வழிபட்டனர். அதனை தொடர்ந்து வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமாரசாமிக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனைதொடர்ந்து மலைக்கோவிலில் உச்சிகால பூஜையில் காப்புகட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    10 நாட்கள் நடைபெறும் பங்குனிஉத்திர திருவிழாவில் தினந்தோறும் சாமி வெவ்வேறு வாகனங்களில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன்படி நாளை வெள்ளிகாமதேனு, நாளை மறுநாள் வெள்ளிஆட்டுகிடா, 3-ம் நாள் தங்கமயில், 4-ம் நாள் தங்ககுதிரை போன்ற வாகனங்களில் முருகப்பெருமான் வீதிஉலா வருகிறார். 6-ம் நாள் திருவிழாவாக ஏப்ரல் 3-ந்தேதி மாலை 5.30 மணிக்குமேல் 7.30 மணிக்குள் திருக்கல்யாணமும், அதனை தொடர்ந்து 8.30 மணிக்குமேல் வெள்ளி தேரோட்டமும் நடைபெறுகிறது.

    ஏப்ரல் 4-ந்தேதி முக்கிய நிகழ்வான பங்குனி உத்திர தேரோட்டம் மாலை 4.45 மணிக்கு நடைபெறும். ஏப்ரல் 7-ந்தேதி இரவு கொடியிறக்கத்துடன் பங்குனி உத்திர திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு தற்போதே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனி நோக்கி பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கோவில் நிர்வாகம் சார்பில் செய்து தரப்பட்டுள்ளது.

    ×