என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் குடும்பத்தினருடன் வந்திருந்தனர்.
    • அனுமதி மறுத்ததால் போலீசாரை கண்டித்து பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் செம்பட்டி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியல் போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    செம்பட்டி:

    செம்பட்டி அருகே வீரக்கல் பிரிவு தனியார் தோட்டத்தில் மரபு வழியில் ஆங்கில மருத்துவமின்றி வீட்டிலேயே குழந்தை பெற்றுக்கொண்ட பெண்கள் உட்பட குடும்ப த்தினர் ஒன்று கூடும் ஏற்பாடு செய்யபட்டிருந்தது. இந்நிகழ்ச்சிக்கு சென்னை, மதுரை, கோவை, பொள்ளா ச்சி, உடுமலைப்பேட்டை, பெங்களூர், கேரளா உட்பட வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் குடும்பத்தி னருடன் வந்திருந்தனர்.

    இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட மருத்துவ அலுவலர் பரிந்துரையின்பேரில், வட்டார மருத்துவ அலுவலர் ஆனந்தீஸ்வரி, சின்னாள பட்டி போலீசாரி டம் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில், நிகழ்ச்சிக்கு சின்னாளபட்டி போலீசார் அனுமதி மறுத்தனர். மேலும் பாதுகாப்புக்காக அங்கு போலீசார் குவிக்க ப்பட்டனர்.

    சுமார் 3 மணி நேரம் குழந்தைகளுடன் கடும் வெயிலில் காத்திருந்த பெண்கள் அனுமதி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அனுமதி மறுத்ததால் போலீசாரை கண்டித்து சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் செம்பட்டி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியல் போரா ட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை வலுக்கட்டாயமாக போலீசார் கைது செய்து சின்னாளப்பட்டி தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். இந்த சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து அங்கு வந்திருந்த, பெண்கள் கூறுகையில், வீட்டிலேயே குழந்தை பெற்றவர்கள் ஒன்றிணையும் சங்கம விழா ஏற்கனவே கோயமுத்தூர், வடலூரில் நடத்தியுள்ளோம். அதேபோல இன்று செம்பட்டியில் ஏற்பாடு செய்திருந்தோம். அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மரபு வழியில் வீட்டிலேயே குழந்தை பெற்றுக் கொள்வது சட்ட விரோதம் போல போலீசார் அனுமதி மறுத்து அனை வரையும் விரட்டியடித்தனர். மேலும் பச்சிளம் குழந்தை களுடன் வெயிலில் நிற்க வைத்து அலைக்கழித்தனர். பொறுமை இழந்த நாங்கள் தங்களின் தனிமனித உரிமைக்காக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப ட்டோம் என்றனர்.

    • கடந்த 3 மாதத்தில் மட்டும் 18 கொலைகள் திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் அரங்கேறியுள்ளது.
    • நகைக்காக, முன் விரோதம், குடும்ப பிரச்சினை, கள்ளக்காதல், சொத்து பிரச்சினை ஆகியவற்றால் தொடர் கொலைகள் நடந்து வருகிறது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் நாராயண பிள்ளை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் லத்தீப் (வயது 46). முறுக்கு வியாபாரி. இவரது மனைவி நிஷா. இவர்களுக்கு சாகுல் (வயது 22), தவ்பீக் (15) என 2 மகன்கள் உள்ளனர். சாகுல் பழனி சாலையில் செல்போன் கடை வைத்துள்ளார். தவ்பீக் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இன்று அதிகாலை சாகுல் வெளியே சென்று விட்ட நிலையில் அப்துல் லத்தீப் மற்றும் அவரது இளைய மகன் வீட்டில் இருந்தனர். அந்த நேரத்தில் மர்ம கும்பல் வீட்டில் புகுந்தனர். அங்கு தூங்கிக் கொண்டு இருந்த அப்துல் லத்தீப்பை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

    மேலும் இதை தடுக்க வந்த தவ்பீக்கிற்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. அவர்கள் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடினர். இதை பார்த்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    அப்துல் லத்தீப்பையும், தவ்பீக்கையும் ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் வழியிலேயே அப்துல் லத்தீப் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் திண்டுக்கல் நகர் மேற்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்துல் லத்தீப் முறுக்கு வியாபாரம் செய்து வந்துள்ளார். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலை நேரத்தில் வீடு புகுந்து வியாபாரியை வெட்டி கொலை செய்த சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த 3 மாதத்தில் மட்டும் 18 கொலைகள் திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் அரங்கேறியுள்ளது. நகைக்காக, முன் விரோதம், குடும்ப பிரச்சினை, கள்ளக்காதல், சொத்து பிரச்சினை ஆகியவற்றால் தொடர் கொலைகள் நடந்து வருகிறது. மேலும் சிறுமலையில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவமும் அரங்கேறியுள்ளது.

    பெரும்பாலான கொலைகள் சொந்த பிரச்சினையில் நடந்திருந்தாலும் தொடர் சம்பவங்கள் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    2023ம் ஆண்டு தொடங்கிய 2-வது நாளில் திண்டுக்கல் பஸ் நிலையத்தில் நிலக்கோட்டை வாலிபர் குத்திக் கொலை செய்யப்பட்டார். 13-ந் தேதி வடமதுரையில் வாலிபர் கேரம் விளையாட்டு தகராறில் அடித்து கொலை செய்யப்பட்டார். 20-ந் தேதி தாடிக்கொம்பு உலகம்பட்டியில் முதியவரும், அதே நாளில் மறவபட்டியில் ஐ.டி.ஊழியரும் கொல்லப்பட்டனர்.

    பிப்ரவரி மாதம் 10-ந்தேதி குஜிலியம்பாறையில் வாலிபரை கொன்று கிணற்றில் வீசினர். 13-ந் தேதி எரமநாயக்கன் பட்டியிலும், 17-ந் தேதி ரெட்டியபட்டியிலும் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றன. 24-ந் தேதி பட்டிவீரன்பட்டியில் மகனை தந்தை தலையில் கல்லைப்போட்டு கொன்றார்.

    மார்ச் மாதம் 2-ந் தேதி சொத்து தகராறில் விவசாயிகள் மீது முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கி சூடு நடத்தினார். அதே நாளில் வேடப்பட்டியில் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். 3-ந் தேதி கள்ளக்காதல் பிரச்சினையில் பெண் கொலை செய்யப்பட்டார். அதே நாளில் தொழிலாளியும் கொல்லப்பட்டார். 4-ந் தேதி கூலித் தொழிலாளி முன் விரோதம் காரணமாக கொல்லப்பட்டார். 7-ந் தேதி குஜிலியம்பாறையில் கள்ளக்காதல் பிரச்சினையில் வாலிபரை பெட்ரோல் ஊற்றி கொன்றனர். 14-ந் தேதி சின்னாளப்பட்டியில் தந்தையை மகன்களே வெட்டி கொன்றனர். கடந்த 11-ந் தேதி மூதாட்டியை குடிபோதையில் வாலிபர் கற்பழித்து கொன்றார். இந்த நிலையில் 18-வது சம்பவமாக இன்று வீடு புகுந்து வியாபாரி கொல்லப்பட்டுள்ளார்.

    • சாலையை கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம் அடைந்தார்.
    • அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே வேடசந்தூர் உசிலம்பட்டியை சேர்ந்தவர் குப்பம்மாள் (வயது 90). அதே பகுதியில் சாலையை கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம் அடைந்தார்.

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே குப்பம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து எரியோடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • நேற்று இரவுவரை பரவலாக மழை பெய்ததால் இதமான சீதோசனம் நிலவியுள்ளது.
    • சுற்றுலா பயணிகள் ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிசாலையில் சைக்கிள் ரைடிங், குதிரை சவாரி என மகிழ்ச்சியாக பொழுதைக் கழித்தனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடை க்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதமான சீதோசனமும், கண்ணுக்கு விருந்தளிக்கும் வண்ண மலர்களும், தலை முட்டும் மேகமூட்டமும் காணப்படுவதால் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தந்து இயற்கை எழில்கொஞ்சும் சூழலை அனுபவித்து ரசிக்கின்றனர்.

    மேலும் சுற்றுலா தலங்களான பிரையண்ட் பூங்கா, ரோஜாதோட்டம், தாவரவியல் பூங்கா, கோக்கர்ஸ் வாக், பில்லர் ராக், பசுமை பள்ளத்தாக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று சுற்றுலா பயணிகள் அதிகளவில் காண ப்பட்டனர். செண்பகனூர், அப்சர்வேட்டரி, நாயுடுபுரம், சின்னபள்ளம், பிரகாசபுரம், பெரும்பள்ளம், குருசடிமெத்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவுவரை பரவலாக மழை பெய்ததால் இன்று இதமான சீதோசனம் நிலவியுள்ளது. வெள்ளி நீர்வீழ்ச்சி, வட்டகானல் அருவி, பாம்பார் அருவி, செண்பகா அருவி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து அதிகமாக காணப்பட்டது.

    சுற்றுலா பயணிகள் ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிசாலையில் சைக்கிள் ரைடிங், குதிரை சவாரி என மகிழ்ச்சியாக பொழுதைக் கழித்தனர். தற்போது கொடை க்கானலில் பெய்துவரும் சார ல்மழையால் குளுமையான சீதோசன நிலை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

    மேலும் இன்று விடுமுறை நாளாக இருப்பதால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

    • திருமண புகைப்படங்களை தனது செல்போனில் ஸ்டேட்டசாக வைத்துள்ளார்.
    • மன உளைச்சலுக்கு ஆளான அவர் வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    செம்பட்டி:

    செம்பட்டி அருகே வீரக்கல்லைச் சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 33). இவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு உறவினரின் மகளான சித்ரா என்பவரை திருமணம் செய்தார். அந்த திருமண புகைப்படங்களை தனது செல்போனில் ஸ்டேட்டசாக வைத்துள்ளார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் பணியாற்றியபோது வந்தவாசியைச் சேர்ந்த பிரியா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஸ்டேட்டசில் இருந்த படங்களைப் பார்த்து பிரியா ராஜசேகரனிடம் கேட்டுள்ளார். மேலும் அவர்கள் காதலித்த போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் பிரியாவுக்கு ராஜசேகரன் தாலி கட்டுவது போன்ற புகைப்படங்களை சித்ரா மற்றும் உறவின ர்களுக்கு அனுப்பி யுள்ளார். இதனால் ராஜசேகரன் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது.

    தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளான ராஜசேகரன் வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் செம்பட்டி போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ராஜசேகரனுக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்றதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • செவ்வாய்க்கிழமை தீர்த்தவாரி நடக்கிறது.
    • 4-ந்தேதி மாலை தேரோட்டம் நடக்கிறது.

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில், பங்குனி உத்திர திருவிழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 6-ம் நாளான நாளை (திங்கட்கிழமை) முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    முன்னதாக அன்று காலை 9.15 மணிக்கு தந்தப்பல்லக்கில் சன்னதிவீதி, கிரிவீதிகளில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. பின்னர் மதியம் 3 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் தொடங்குகிறது.

    அப்போது முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், கலச அபிஷேகம் நடக்கிறது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மாலை 5.45 மணிக்கு மேல் 6.45 மணிக்குள் கன்னியா லக்னத்தில் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    இதைத்தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு மேல் வெள்ளித்தேரில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை எழுந்தருளி வீதிஉலா வருகிறார்.

    பங்குனி உத்திர திருவிழாவின் 7-ம் திருநாளான நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 4.30 மணிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் காலை 6 மணிக்கு தீர்த்தம் வழங்குதல், காலை 9 மணிக்கு தந்தப்பல்லக்கில் திருஆவினன்குடி கோவிலில் எழுந்தருளல் நடைபெறுகிறது.

    இதைத்தொடர்ந்து மதியம் 12 மணிக்கு மேல் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருள்கிறார். பின்னர் மாலை 4.45 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து தேரோட்டம் நடைபெறுகிறது.

    இந்தநிலையில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து பழனிக்கு வர தொடங்கியுள்ளனர். மயில் காவடி எடுத்து பக்தர்கள் ஆடி வருகின்றனர்.

    இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் கிரிவீதிகளில் மேள, தாளத்துடன் ஆடிப்பாடி உலா வருகிறார்கள். பின்னர் மலைக்கோவிலுக்கு சென்று தீர்த்த அபிஷேகம் செய்கின்றனர். இந்நிலையில் பழனியில் கடும் வெயில் நிலவுவதால் மதிய நேரத்தில் பக்தர்கள் கூட்டம் குறைவாக உள்ளது. காலை, மாலை வேளைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    • ரோஸ்கார்டன் 1500 வகையான ரோஜா செடிகள் உள்ளன. மொத்தம் 16ஆயிரம் ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.
    • ரூ.1.கோடியே 39 லட்சத்து 90ஆயிரத்து 690 வருவாய் கிடைத்துள்ளதாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கொடைக்கானலில்:

    கொடைக்கானலில் பிரையண்ட் பூங்கா மற்றும் ரோஸ்கார்டனை கடந்த ஓராண்டில் 10 லட்சம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டுள்ளனர். அதன்மூலம் தோட்டக்கலைத்துறைக்கு ரூ.2.92 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

    பொதுவாக கொடைக்கானலுக்கு வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். நகரின் மையப்பகுதியில் தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான பிரையண்ட் பூங்கா அமைந்துள்ளது. இந்த ஆண்டு முழுவதும் மலர்கள் பூத்து குலுங்கும். இதை பார்த்து ரசிக்க வாரவிடுமுறை நாட்களில் 3000 முதல் 5000 சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    சீசன் காலங்களில் கூட்டம் மேலும் அதிகரிக்கும். 2022 ஏப்ரல் 1-ந்தேதி முதல் 2023 மார்ச் 31-ந்தேதி வரை 5 லட்சம் சுற்றுலா பயணிகள் பூங்கா வை பார்வை யிட்டுள்ளனர். பூங்காவுக்காக நுழைவுசீட்டு, ஸ்டில் மற்றும் வீடியோ காமிராக்களுக்கு விதிக்கப்பட்ட கட்டணங்கள் மூலம் ரூ.1.53 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான ரோஸ்கார்டன் 1500 வகையான ரோஜா செடிகள் உள்ளன. மொத்தம் 16ஆயிரம் ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.

    இந்த பூங்காவைகடந்த ஓராண்டில் 4லட்சத்து 55ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் பார்வையிட்டுள்ளனர். இதன்மூலம் ரூ.1.கோடியே 39 லட்சத்து 90ஆயிரத்து 690 வருவாய் கிடைத்துள்ளதாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • ஏணிக்கல் வனப்பகுதியில் சாலைக்கு மேல் திடீரென காட்டுத்தீ பற்றி எரிந்தது. சிறிது நேரத்தில் தீ மள மளவென பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.
    • வனக்காப்பாளர் மற்றும் தீ தடுப்பு காவலர்கள் அங்கு சென்று 7 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    பெரும்பாறை;

    கொடைக்கானல் கீழ்மலை பெரும்பாறை, தடியன்குடிசை, கொங்கப்பட்டி, மஞ்சள்ப ரப்பு, புல்லாவெளி வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் மலைப்பகுதியில் உள்ள புல்வெளிகள் கருகி வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளன. கோடைக்காலம் தொடங்கி விட்டதால் வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிவது வழக்கமாக இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் அடிக்கடி காட்டுத்தீ பற்றி அதனை வனத்துறையினர் போராடி அணைத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று பெரும்பாறை, சித்தரேவு மலைப்பாதையில் உள்ள ஏணிக்கல் வனப்பகுதியில் சாலைக்கு மேல் திடீரென காட்டுத்தீ பற்றி எரிந்தது. சிறிது நேரத்தில் தீ மள மளவென பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதனால் அப்பகுதியில் முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.இதுகுறித்து தகவல் அறிந்த வத்தலக்குண்டு வனவர் சுரேஸ் தலைமையில் வனக்காப்பாளர் கணேசன் மற்றும் தீ தடுப்பு காவலர்கள் அங்கு சென்று 7 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    இருந்தபோதும் வனப்பகுதியில் இருந்த அரிய வகை மூலிகைகள், மரங்கள் எரிந்து நாசமானது. மேலும் காட்டெருமை, கடமான் உள்ளிட்ட வனவிலங்குகளும் பாதிக்கப்பட்டது. அவை உணவு மற்றும் குடிநீர் தேடி இடம்பெயர்ந்து வருகின்றன.

    • சாக்கடையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
    • இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக இங்கு வந்தார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் கச்சேரி தெருவில் உள்ள சாக்கடையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திண்டுக்கல் நகர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்,அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து நகர் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக இங்கு வந்தார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2013-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் அறிவி க்கப்பட்டு இப்பணிகள் தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக நிலம் கையகப்படுத்தும் பணியை வருவாய்த்துறையினர் மேற்கொண்டனர்.
    • கடந்த 10 ஆண்டுகளாக போராடி வந்த மக்களும், போக்குவரத்து வழக்கமான நடைமுறையில் இருக்கும் என்பதால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாநகராட்சி எல்லையில் இருந்து சிலுவத்தூர் செல்லும் சாலையில் பாலகிருஷ்ணா புரம் பகுதியில் திண்டுக்கல் -பழனி, திண்டுக்கல்-கரூர், திண்டுக்கல்-திருச்சி என அடுத்தடுத்து 3 ரெயில்வே பாதைகள் உள்ளன.

    இதனால் அடுத்தடுத்து ரெயில்வே கேட் மூடப்படுவதால் திண்டுக்கல் புறநகர் பகுதியில் இருந்து கோவிந்தராஜ்நகர், சந்துருநகர், மாசிலாமணி புரம் மற்றும் ராஜக்காபட்டி, சிலுவத்தூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்றுவர மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று ரெயில்வே தண்ட வாள பகுதியில் மேம்பாலம் அமைக்க முடிவு செய்ய ப்பட்டது. கடந்த 2013-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் அறிவி க்கப்பட்டு இப்பணிகள் தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக நிலம் கையகப்படுத்தும் பணியை வருவாய்த்துறையினர் மேற்கொண்டனர்.

    இதில் நகர்புறத்தில் 29 பேரிடமும், ஊராட்சி பகுதியில் 72 பேரிடமும் நிலம் கையகப்படுத்த ப்பட்டது. ஆனால் அரசின் இழப்பீட்டு தொகை போதாது எனக்கூறி நகர்புற நில உரிமையாளர்கள் சிலர் நிலத்தை ஒப்படைக்க மறுத்து கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். ஊராட்சி பகுதிகளில் உள்ளவர்க ளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் நிலத்தை ஒப்ப டைக்க சம்மதம் தெரிவித்த தால் அந்தபகுதியில் மட்டும் பாலம் கட்டுமானப்பணி தொடங்கப்பட்டது.

    மேலும் ரெயில்வே நிர்வாகம் ரெயில் கடக்கும் இடத்திற்கு மேலாக தங்கள் பகுதியில் மட்டும் பாலம் அமைக்கும் பணியை விரை வாக கட்டி முடித்தனர். ரெயில்வே தண்டவாள த்திற்கு கீழே சுரங்கப்பாதை களையும் அமைத்து பணியை முடித்துக்கொண்ட னர். இதனால் அந்த பகுதியில் மட்டும் பாலம் துண்டு துண்டாக காட்சி யளித்தது.

    நிலம் கையகப்படுத்தும் பிரச்சினையால் பாலம் கட்டுமானப்பணி பல ஆண்டுகளாக நீடித்தது. திண்டுக்கல் புறநகரை சேர்ந்த பாலகிருஷ்ணாபுரம், மாசிலாமணிபுரம் உள்ளி ட்ட பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த சாலையில் செல்பவர்கள் சிலுவத்தூர் உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்தவர்கள் சுமார் 8 கி.மீ சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடந்து வந்த மேம்பால பணிகள் பல்வேறு போராட்டங்க ளுக்கு பிறகு மீண்டும் விரைவுபடுத்தப்பட்டது.

    நிலம் கொடுத்தவர்களின் இழப்பீடு பிரச்சினை தீர்த்து வைக்கப்பட்டது. இதனைதொடர்ந்து பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன. தற்போது 95 சதவீத பணிகள் நிறைவுபெற்றுள்ளன. பாலத்தில் மின்விளக்குகள் பொருத்துதல், தார்ச்சாலை அமைத்தல், வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்த பாலத்தை வருகிற 4-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கடந்த 10 ஆண்டுகளாக போராடி வந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த சாலையில் போக்குவரத்து வழக்கமான நடைமுறையில் இருக்கும் என்பதால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • மக்கும் குப்பை, மக்காத குப்பை - தரம் பிரித்து வழங்குவோம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி நகரின் முக்கிய வீதி வழியாக பேரணியாக சென்றனர்.
    • அரசு கலைக்கல்லூரி மற்றும் மருத்துவகல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரத்தில் மதுரை நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் ஆலோசனையின் பேரில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் உலக குப்பையில்லாத தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை நகர செயலாளர் வெள்ளைச்சாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பேரணிக்கு நகர்மன்ற தலைவர் திருமலைசாமி முன்னிலை வகித்தார். "எனது குப்பை எனது பொறுப்பு" "மக்கும் குப்பை, மக்காத குப்பை" தரம் பிரித்து வழங்குவோம்" என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி நகரின் முக்கிய வீதி வழியாக பேரணியாக சென்றனர்.

    இதில் ஆணையாளர் (பொ) சக்திவேல், உள்ளிட்ட தூய்மை இந்தியா திட்டப்பணியாளர் அரசு கலைக்கல்லூரி மற்றும் மருத்துவகல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • பழனி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது.
    • தங்கரத புறப்பாட்டில் ரூ.2 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது.

    பழனி முருகன் கோவிலில் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் கட்டளை தரிசனம், முடிக்காணிக்கை, தங்கரத புறப்பாடு, தங்கத்தொட்டில் உள்ளிட்டவற்றில் பணம் செலுத்தி கலந்துகொள்கின்றனர். இதில் தங்கரத புறப்பாடு மிகவும் சிறப்பு பெற்றது. பழனி மலைக்கோவிலில் தினமும் இரவு 7 மணிக்கு நடைபெறும் தங்கரத புறப்பாட்டில் ரூ.2 ஆயிரம் செலுத்தி பக்தர்கள் கலந்துகொண்டு வழிபடுகின்றனர்.

    இந்தநிலையில் பழனியில் நடைபெறும் தைப்பூசம், பங்குனி உத்திரம், நவராத்திரி, சூரசம்ஹாரம், திருக்கார்த்திகை உள்ளிட்ட திருவிழாக்களின்போது தங்கரத புறப்பாடு நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி தற்போது பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது.

    இதையொட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 6-ந்தேதி வரை என 5 நாட்கள் பழனி முருகன் கோவிலில் தங்கரத புறப்பாடு நிறுத்தப்படுகிறது. அதேவேளையில் நாளை ஒருநாள் மட்டும் கோவில் சார்பில் தங்கரத புறப்பாடு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×