என் மலர்
உள்ளூர் செய்திகள்

பள்ளியின் முன்பு உள்ள ஆபத்தான பள்ளம்.
திண்டுக்கல்லில் ஆபத்தான பள்ளத்தால் விபத்தில் சிக்கும் மாணவர்கள்
- சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் பல மாதங்களாக மூடப்படாமல் உள்ளது.
- பள்ளியில் பயிலும் மாணவர்கள் அவ்வப்போது பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல்-பழனி சாலையில் சாலை விரிவாக்க பணி மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது. இதனால் சாலையின் இருபுறமும் பள்ளங்கள் தோண்டப்பட்டு சீரமை ப்பணி நடந்தது. திண்டுக்கல் ராமையன்பட்டி அருகே தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது.
இந்த பள்ளியின் முன்பாக சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் பல மாதங்களாக மூடப்படாமல் உள்ளது. இதனால் பள்ளியில் பயிலும் மாணவர்கள் அவ்வப்போது பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.மேலும் இந்த வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகளும் பள்ளத்தில் விழுந்து படுகாயம் அடைகின்றனர்.
ஆகவே பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன் பள்ளியின் முன்பாக உள்ள இந்த பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






