என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mason death"

    • கடைக்குள் கீழே விழுந்து படுகாயமடைந்தவரை ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே உள்ள சிறுநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் மைக்கேல் டோமினிக் (வயது 25). கொத்தனார் வேலை பார்த்து வந்தார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் மொட்டனம்பட்டி ரெயில்வே கேட் அருகே அதி வேகமாக வந்து கொண்டு இருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த ஒரு டீக்கடைக்குள் பைக் புகுந்தது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்த ஓட்டம் பிடித்தனர். கடைக்குள் கீழே விழுந்து படுகாயமடைந்த டோமினிக்கை ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×