என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பைக் மோதலில் வத்தலக்குண்டு வாலிபர் பலி; உறவினர்கள் போராட்டம்!
    X

    வத்தலக்குண்டு போலீஸ் நிலையம் முன்பு மணிவேல் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்திய உறவினர்கள்.

    பைக் மோதலில் வத்தலக்குண்டு வாலிபர் பலி; உறவினர்கள் போராட்டம்!

    • திண்டுக்கல்-மதுரை ரோட்டில் 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதியதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    வத்தலக்குண்டு:

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகில் உள்ள பொன்னம்பட்டி காலனியை சேர்ந்தவர் மணிவேல்(23) இவர் வத்தலக்குண்டு பேரூராட்சி அலுவலகத்தில் தற்காலிக தூய்மை பணியாளராக வேலைபார்த்து வந்தார். இவருக்கும் அன்னகாமு (22) என்பவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண்குழந்தை உள்ளது. தற்போது அன்னகாமு 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். நேற்று இரவு வேலை முடித்து மணிவேல் தனது குடும்பத்தினருக்கு உணவு வாங்கி கொண்டு மோட்டார் சைக்கிளில் மதுரை ரோட்டில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிரில் சிவசக்திநகரை சேர்ந்த மீன்வியாபாரி சேக்உதுமான் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்குநேர் மோதி க்கொண்டதில் மணிவேல் படுகாயமடைந்தார்.

    வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டுவரும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் விபத்தில் சேக்உதுமான் மற்றும் அவரது மனைவி படுகாயமடைந்து தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டுள்ள னர்.

    இதுகுறித்து வத்தல க்குண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    இதனிடையே வத்தல க்குண்டு அரசு ஆஸ்பத்திரி யில் பிரேத பரிசோதனை க்காக வைக்கப்பட்டுள்ள மணிவேல் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விபத்திற்கு காரணமானவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தியதால் சுமார் 30 நிமிடத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்க ப்பட்டது. போலீசார் அவர்களை சமாதானம் செய்து வைத்தனர்.

    Next Story
    ×