என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • பசுமாட்டை மர்ம நபர் திருடி சென்றுவிட்டார்.
    • பசு மாட்டை வைத்திருந்தவரிடம் விசாரித்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த சிலம்பு என்கிற தியாகராஜனிடம் வாங்கியதாக தெரிவித்தார்.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் கே.ஈச்சம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் மாதவன் (வயது46). விவசாயியான இவர் பசு மாடு ஒன்றை வளர்த்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தோட்டத்தில் கட்டி வைத்திருந்த தனது பசுமாட்டை மர்ம நபர் திருடி சென்றுவிட்டார். இந்த நிலையில் தனது பசுமாட்டை உரப்பம் மாட்டு சந்தையில் நின்று கொண்டிருந்தது. உடனே அந்த பசு மாட்டை வைத்திருந்தவரிடம் விசாரித்தபோது, மாட்டை அதே பகுதியைச் சேர்ந்த சிலம்பு என்கிற தியாகராஜனிடம் வாங்கியதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து மாதவன் கம்பைநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாதவனின் பசுமாட்டை திருடி வேறுநபருக்கு விற்ற தியாகராஜனை கைது செய்தனர்.

    • திவ்யா கடந்த 19-ந் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி கிடந்தார்.
    • அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜகுணசேகரன். கூலித்தொழிலாளி.

    இவர் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு அதேபகுதியைச் சேர்ந்த திவ்யா என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகள் உள்ளார்.

    இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதன்காரணமாக மனமுடைந்து காணப்பட்ட திவ்யா கடந்த 19-ந் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். உடனே அங்கிருந்த உறவினர்கள் திவ்யாவை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த திவ்யாவின் தாய் குப்பம்மாள் மகேந்திரமங்கலம் போலீஸ் நிலையத்தில் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திவ்யாவின் கணவர், மாமனார், மாமியார் ஆகிய 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணமாகி 4 வருடங்கள் ஆனநிலையில் இளம்பெண் இறந்த சம்பவம் குறித்து அவரது கணவர் ராஜகுணசேகரனிடம் தருமபுரி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள வங்கிகளில் தனிக்கவனம் செலுத்தி நிலுவையில்லா கணக்கு (ஜீரோ பேலன்ஸ்) உடனடியாக கணக்கு துவக்க வேண்டும்.
    • அனைத்து ரேஷன் கடைகளிலும் தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 43 கிளைகளிலும் இதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

    தருமபுரி,

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 15 முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்க அறிவுறுத்தியுள்ளார்.

    இதற்கான கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பிக்க வங்கி கணக்கு இல்லாத மகளிருக்கு வங்கி கணக்கு தொடங்குவதற்கு கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள வங்கிகளில் தனிக்கவனம் செலுத்தி நிலுவையில்லா கணக்கு (ஜீரோ பேலன்ஸ்) உடனடியாக கணக்கு துவக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல் படுத்தும் பொருட்டும், அரசின் மானியத்திட்டத்தின் பயன் மற்றும் நவீன வங்கிசேவைக்கான ஏடி.எம். மைக்ரோ ஏடி.எம், கியூ ஆர் கோடு, மொபைல் பேங்கிங், ஐஎம்பிஎஸ், யுபிஐ ஆகியவற்றின் பயன் அனைத்துத்தரப்பு மக்களையும் சேரும் வகையிலும் வங்கிகளில் நிலுவையில்லா (ஜீரோ பேலன்ஸ்) சேமிப்பு கணக்கு துவங்க ஏதுவாக தருமபுரி மாவட்ட அனைத்து ரேஷன் கடைகளிலும் தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 43 கிளைகளிலும் இதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

    இத்துடன் இந்த வாய்ப்பை பயன்படுத்தி மகளிர் மற்றும் குடும்பத் தலைவிகள் உடனடியாக நிலுவையில்லா கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளனர்.

    இதையொட்டி தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநரும், மண்டல இணைப்பதிவாளர் (கூடுதல் பொறுப்பு) சந்தானம், நிலுவையில்லா (ஜீரோ பேலன்ஸ்) சேமிப்பு கணக்கு விண்ணப்பத்தை மகளிருக்கு வழங்கினார். இதில் வங்கியின் பொதுமேலாளர் (பொ), உதவி பொது மேலாளர்கள் மற்றும் கிளை மேலாளர் உள்ளனர்.

    • இந்த ஆண்டு ஏப்ரலில் சீசன் தொடங்கி மாம்பழங்கள் விற்பனைக்கு வந்தன.
    • மொத்த விலையில், கிலோ, 30 முதல், 40 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் காரிமங்கலம், கம்பைநல்லூர், தீர்த்தமலை, இருமத்தூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும், கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் நீலம் ரகம் மாம்பழம் அதிகமாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    மேலும் நாமக்கல், ஈரோடு, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், மாம்பழம் அதிகம் விளைகிறது. இங்கு உற்பத்தியாகும் மாம்பழங்கள், பல்வேறு மாநிலங்களுக்கு மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்த ஆண்டு ஏப்ரலில் சீசன் தொடங்கி மாம்பழங்கள் விற்பனைக்கு வந்தன. தற்போது இமாம், அல்போன்சா, பங்கனபள்ளி, பெங்களூரா, ருமானி, மல்கோவா, லட்டு, சக்கர குட்டி, கிளி மூக்கு, செந்தூரா உள்ளிட்ட பல வகை மாம்பழங்கள் சீசன் முடியும் தருவாயில் உள்ளது.

    இந்நிலையில், நீலம் ரகம் மாம்பழங்களின் வரத்து, பல்வேறு மார்க்கெட்டுகளுக்கு அதிகரித்து உள்ளது. தற்போது தருமபுரி மார்க்கெட்டுகளில் நீலம் ரகம் மாம்பழம் குவிய தொடங்கியுள்ளது. இவை மொத்த விலையில், கிலோ, 30 முதல், 40 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

    • காவிரி ஆற்றின் பல்வேறு இடங்களில் குவியல் குவியலாக மக்கிய நிலையில் கிடக்கிறது.
    • காவிரி ஆற்றில் தூக்கி எறியப்படும் துணி வகைகளை குவியல்களை கட்டுப்படுத்த நிரந்தர வழிமுறைகள் ஏதும் ஏற்படுத்தவில்லை.

    ஒகேனக்கல், 

    தமிழகத்தின் முதன்மை சுற்றுலாத் தலமாக விளங்கும் ஒகேனக்கல் பகுதிக்கு வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லுகின்றனர்.

    இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளான முதலைப் பண்ணை, நாகர்கோவில், பெங்களூர் ஜால், மாமரத்துக்கடவு பிரதான அருவி செல்லும் நடைபாதை, பெண்கள் குளிக்கும் அருவி உள்ளிட்ட பகுதிகளில் குளித்துவிட்டு தாங்கள் பயன்படுத்திய ஆடைகளை அப்படியே காவிரி ஆற்றில் கழற்றி விடுகின்றனர்.

    ஆற்றில் அடித்துச் செல்லப்படும் ஆடைகள் பாறை திட்டுக்கள், கரையோரப் பகுதியில் உள்ள மரங்களின் வேர்கள் ஆகியவற்றால் தடுத்து நிறுத்தப்பட்டு காவிரி ஆற்றின் பல்வேறு இடங்களில் குவியல் குவியலாக மக்கிய நிலையில் கிடக்கிறது.

    தற்போது காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்து காணப்படுவதால், சுற்றுலா பயணிகளால் தூக்கி எறியப்பட்ட துணிகள் ஆங்காங்கே காணப்படுவதோடு மட்டுமல்லாமல் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் வகையில் உள்ளதால் அனைத்து தரப்பினரையும் முகம் சுளிக்கச் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

    மேலும் காவிரி கரையோரப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளால் தூக்கி எறியப்படும் துணிகள் போட தொட்டிகள், விழிப்புணர்வு பலகைகள் அமைக்கப்படாததால் காவிரி ஆற்றில் சுகாதார சீர்கேடு நிகழ்வதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    மேலும் தனியார் அமைப்புகள் தன்னார்வலர்கள் மற்றும் மாணவர் அமைப்பினர்கள் ஒன்றிணைந்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கரையோரப் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்களால் தூக்கி எறியப்படும் துணிகளை ஆண்டுக்கு ஒரு முறை அகற்றும் பணியில் ஈடுபட்ட போது பல ஆயிரம் டன் துணி வகைகள் அகற்றப்பட்டது.

    ஆனால் காவிரி ஆற்றில் தூக்கி எறியப்படும் துணி வகைகளை குவியல்களை கட்டுப்படுத்த நிரந்தர வழிமுறைகள் ஏதும் ஏற்படுத்தவில்லை. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளதால், ஆங்காங்கே குவியல் குவியலாக கிடக்கும் துணிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    • தார்சாலை அமைக்கும் பணிகளுக்கு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
    • 2.5 கிலோ மீட்டர் தூரம் புதிய தார்சாலை அமைக்கும் பணி நடக்கிறது.

    பாலக்கோடு,  

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சியில் உள்ள முத்து கவுண்டர்தெருவில் ரூ.1.47 கோடி மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகளுக்கு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    இதில் பாலக்கோட்டில் உள்ள 8 வார்டுகளுக்கு உட்பட்ட முத்துகவுண்டர் தெரு, ரேஷன்கடை தெரு, தீர்த்தகிரி நகர், இடுகாட்டுக்கு செல்லும் பாதை எச்.பி.கேஸ் ஏஜென்சி தெரு, கோட்டை தெரு, கோபால்செட்டி தெரு, கணம் பள்ளி தெரு, மணியகாரன் கொட்டாய் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2.5 கிலோ மீட்டர் தூரம் புதிய தார்சாலை அமைக்கும் பணி நடக்கிறது.

    இந்நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் பழனி, ஒப்பந்ததாரர் செந்தில்ரங்கநாதன், துணை தலைவர் தாஹசினா இதயத்துல்லா, பேரூராட்சி கவுன்சிலர்கள் நாகரத்தினம், சரவணன், ரவி, மோகன், ஜெயந்திமோகன், ரூஹித், கிளை செயலாளர்கள் கணேசன், பெரியசாமி, சக்திவேல், அரவிந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கப்பட்டு, தொழிற் பயிற்சி நிலையத்திற்கு டெஸ்க், பென்ச் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
    • விழாவில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் .பி.வெங்கடேஷ்வரன் கலந்து கொண்டு டெஸ்க், பென்ச்சுகளை வழங்கினார்.

    தருமபுரி, 

    தருமபுரி ஒன்றியம், கடகத்தூரில் அமைந்துள்ள அரசு தொழிற் பயிற்சி நிலைய மாணவ, மாணவிகளின் நலன் கருதி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்ட நிதியில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கப்பட்டு, தொழிற் பயிற்சி நிலையத்திற்கு டெஸ்க், பென்ச் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

    இந்த விழாவில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் கலந்து கொண்டு டெஸ்க், பென்ச்சுகளை வழங்கினார்.

    இந்நிகழ்வில், அரசு தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் சிவக்குமார், மாவட்ட பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் சிவக்குமார், மற்றும் ஒன்றிய செயலாளர், மாவட்ட துணை செயலாளர், மாவட்ட செயற்குழு உறுப்பினர், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ஸ்ரீதர் மட்டன் வாங்குவதற்காக கடைக்கு சென்றார். வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளும் காணவில்லை.
    • உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் .

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்டம் ஏரியூர் ஒரப்பாச்சியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் அதே பகுதியில் சிப்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பிரியா (வயது27). இவர்களுக்கு தக்ஷனாஸ்ரீ (11) என்ற மகளும், தமிழரசன் (7) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் இதனால் பதறிப்போன ஸ்ரீதர் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடிபார்த்தார். எங்கு தேடியும் அவர்கள் கிடைக்காததால், மாயமானது தெரியவந்தது.

    இதுகுறித்து ஸ்ரீதர் ஏரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான 2 குழந்தைகளையும், பிரியாவையும் தீவிரமாக தேடிவருகின்றனர்.

    அதேபோல் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள நெக்குந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யராஜ். இவரது மனைவி சந்தியா (27). இவர்களுக்கு கடந்த 7 வருடங்களுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு மோகித்குமார் (8) என்ற மகனும், இனியா (6) என்ற மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று சத்யராஜ் வேலை காராணமாக வீட்டைவிட்டு வெளியே சென்றார். மாலை வீடு திரும்பிவந்து பார்த்தபோது, தனது மனைவி மற்றும் 2 குழந்தைகள் காணவில்லை. இதுகுறித்து சத்யராஜ் பென்னாகரம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் குடும்ப தகராறு காரணமாக வீட்டைவிட்டு வெளியே சென்றதாக தெரிகிறது. 2 குழந்தைகளுடன் மாயமான சந்தியாவை போலீசார் தேடி வருகின்றனர்.

    • கே.பி.முனுசாமி தலைமை யில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • மேற்கு மாவட்ட செயலாளருமான பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ண கிரி புதிய பேருந்து நிலையம் அருகே நேற்று விலைவாசி உயர்வை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. துணை பொதுச்செ யலாளரும், சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி தலைமை யில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார், முன்னாள் அமைச்சரும், மேற்கு மாவட்ட செயலாளருமான பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சதீஷ்குமார், மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன், ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் தமிழ்செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சிவி ராஜேந்திரன், மனோரஞ்சிதம் நாகராஜ், முனி வெங்கட்டப்பன், கிருஷ்ணகிரி ஒன்றிய குழு தலைவர் அம்சராஜன், ஒன்றிய செயலாளர்கள் சோக்காடி ராஜன், கிருஷ்ணன், கன்னியப்பன், ஒன்றிய குழு தலைவர் பையூர் ரவி, சைலேஷ் கிருஷ்ணன், நகர செயலாளர்கள் கேசவன், விமல், மாவட்ட மாணவரணி மோகன், அம்மா பேரவை தங்கமுத்து, அ.தி.மு.க. நிர்வாகி ஜெகதீஷ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பெருமாள், அ.தி.மு.க. நிர்வாகிகள் ,உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஒப்பந்த ஊழியர்களை அனைத்து பகுதியில் உள்ள சேவைகளுக்கும் பயன்படுத்த வேண்டும்.
    • ஒப்பந்த ஊழியர்களுக்கு அரசின் விதிமுறைகளை பின்பற்றி ஊதியத்தை முறைப்படுத்த வேண்டும்.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்டம், தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கம் சார்பில் நேற்று பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கோபாலன் தலைமை வகித்தார். பிஎஸ்என்எல் எம்பிளாய் யூனியன் மாவட்ட செயலாளர் கிருஷ்ணன், ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஸ்ரீதரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    ஒப்பந்த ஊழியர்களை அனைத்து பகுதியில் உள்ள சேவைகளுக்கும் பயன்படுத்த வேண்டும். ஒப்பந்த ஊழியர்களை ஆள் குறைப்பு செய்யக்கூடாது. ஒப்பந்த ஊழியர்களுக்கு அரசின் விதிமுறைகளை பின்பற்றி ஊதியத்தை முறைப்படுத்த வேண்டும்.

    7-வது ஊதிய குழுவின் வழிமுறையை பின்பற்றி ஊதியத்தை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் உமாராணி, பழனி, பாஸ்கரன், மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மக்கள் தொடர்பு அலுவலகம், பள்ளிகல்வித் துறைசார்பில் புகைப்பட கண்காட்சி, செயல்பாடுகள் இடம் பெற்றன.
    • 200-க்கும் மேற்பட்ட அரியவகை மரக்கன்றுகளின் கண்காட்சி இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    தருமபுரி, 

    தருமபுரியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழ்நாடு நாள் எனும் சிறப்பு நிகழ்ச்சி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

    இதில் பாரம்பரிய மிக்க 200-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை கண்காட்சியில் வைத்து மாணவிகள் அசத்தினர்.

    தமிழ்நாடு நாள் நிகழ்ச்சி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மக்கள் தொடர்பு அலுவலகம், பள்ளிகல்வித் துறைசார்பில் புகைப்பட கண்காட்சி, செயல்பாடுகள் இடம் பெற்றன.

    இதில் அவ்வையார் பள்ளி மாணவிகளின் பாரம்பரிய மிக்க 200-க்கும் மேற்பட்ட அரியவகை மரக்கன்றுகளின் கண்காட்சி இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    இக்கண்காட்சியில் மாணவிகள் தேடி திரட்டிய அரிய வகை மரக்கன்றுகளான ருத்திராட்சை மரம், திருவோடு மரம், மகாவில்வம், சிவகுண்டலம், சொர்க்க மரம், நாகலிங்கம், குதிரை பிடுக்கன், ஆகிய மரக்கன்றுகள் வைத்திருந்தனர்.

    மேலும் தான்றிக்காய், பதிமுகம் மரம், அசோகமரம், வெள்வேல், கூந்தல் பனை, தாளிப் பனை, பம்ளிமாஸ், பிரியாணி இலை, ஓதியன், ஈட்டி, சந்தனம், ஏழிலை பாலை, ரப்பர், ராம் சீத்தா, யூக்லிப்டிஸ், சோப்பு காய், பபூரசு மரம், நோனி, மற்றும் கீரை விதைகள், கிழங்கு வகைகள் இக்கண்காட்சியில் வைத்து மாணவிகள் அசத்தினர்.

    இக்கண்காட்சியை திறந்து வைத்த கலெக்டர் சாந்தி, எஸ்.பி. ஸ்டீபன் ஜேசுபாதம், மற்றும் நகர்மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது, முன்னாள் எம்.எல்.ஏ. தடங்கம் சுப்பிரமணி, தலைமை ஆசிரியை கலைச்செல்வி ஆகியோர் மாணவிகளை வெகுவாக பாராட்டினர்.

    • கொங்கு கல்வி அறக்கட்டளை தலைவர் மோகன்ராசு தலைமை வகித்து முதலாமாண்டு மாணவ, மாணவியர்களை வரவேற்று வாழ்த்தி பேசினார்.
    • முடிவில் வணிகவியல் துறை தலைவர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.

    மொரப்பூர்,

    தருமபுரி மாவட்டம், மொரப்பூர் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா நடைபெற்றது.

    இவ்விழாவிற்கு கொங்கு கல்வி அறக்கட்டளை தலைவர் மோகன்ராசு தலைமை வகித்து முதலாமாண்டு மாணவ, மாணவியர்களை வரவேற்று வாழ்த்தி பேசினார்.கொங்கு கல்வி அறக்கட்டளை செயலாளர் ஆர்.பிரபாகரன், பொருளாளர் சாமிக்கண்ணு, கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் சி.பி.எஸ்.சி. பள்ளி தாளாளர் தீ.சந்திரசேகர், மொரப்பூர் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் பொன் வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கல்லூரி முதல்வர் முனைவர் நா.குணசேகரன் வரவேற்று பேசினார். இவ்விழாவில் வணிகவியல் மேலாண்மை துறை தலைவர் ராஜா சிறப்பு விருந்தி னரை அறிமுகப் படுத்தி பேசினார்.

    அதனை தொடர்ந்து மாற்று திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு ஆலோசகர் ஐ.நா.மன்றத்தில் 4 முறை உரையாற்றிய கண் பார்வையற்ற சென்னை சுவர்ண லட்சுமி மற்றும் இசை பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றவரும், இந்திய குடியரசு தலைவர் மற்றும் தமிழக முதல்வர் ஆகியோரிடம் விருது பெற்ற கண் பார்வையற்ற ஜோதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பாடல்கள் பாடியும், மாணவ, மாணவியர்களுக்கு கல்வியின் அவசியம் குறித்து பேசினார்கள்.

    இவ்விழாவில் கொங்கு கல்வி அறக்கட்டளை இயக்குனர்கள் வெற்றிச் செல்வன், குணசீலன், கணேசன், தமிழரசு, ராமு, நாகராஜ் பரமசிவம் மற்றும் பேராசிரியர்கள் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வணிகவியல் துறை தலைவர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.

    ×