என் மலர்
உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் தருமபுரி எம்.எல்.ஏ எஸ்.பி.வெங்கடேஷ்வரன் மாணவர்களுக்கு டெஸ்க், பெஞ்சுகளை வழங்கிய காட்சி.
கடகத்தூர் அரசு தொழில் பயிற்சி நிலைய மாணவர்களுக்கு டெஸ்க், பெஞ்சுகள்
- ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கப்பட்டு, தொழிற் பயிற்சி நிலையத்திற்கு டெஸ்க், பென்ச் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
- விழாவில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் .பி.வெங்கடேஷ்வரன் கலந்து கொண்டு டெஸ்க், பென்ச்சுகளை வழங்கினார்.
தருமபுரி,
தருமபுரி ஒன்றியம், கடகத்தூரில் அமைந்துள்ள அரசு தொழிற் பயிற்சி நிலைய மாணவ, மாணவிகளின் நலன் கருதி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்ட நிதியில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கப்பட்டு, தொழிற் பயிற்சி நிலையத்திற்கு டெஸ்க், பென்ச் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் கலந்து கொண்டு டெஸ்க், பென்ச்சுகளை வழங்கினார்.
இந்நிகழ்வில், அரசு தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் சிவக்குமார், மாவட்ட பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் சிவக்குமார், மற்றும் ஒன்றிய செயலாளர், மாவட்ட துணை செயலாளர், மாவட்ட செயற்குழு உறுப்பினர், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






