என் மலர்
உள்ளூர் செய்திகள்

பசுமாட்டை திருடியவர் கைது
- பசுமாட்டை மர்ம நபர் திருடி சென்றுவிட்டார்.
- பசு மாட்டை வைத்திருந்தவரிடம் விசாரித்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த சிலம்பு என்கிற தியாகராஜனிடம் வாங்கியதாக தெரிவித்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் கே.ஈச்சம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் மாதவன் (வயது46). விவசாயியான இவர் பசு மாடு ஒன்றை வளர்த்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தோட்டத்தில் கட்டி வைத்திருந்த தனது பசுமாட்டை மர்ம நபர் திருடி சென்றுவிட்டார். இந்த நிலையில் தனது பசுமாட்டை உரப்பம் மாட்டு சந்தையில் நின்று கொண்டிருந்தது. உடனே அந்த பசு மாட்டை வைத்திருந்தவரிடம் விசாரித்தபோது, மாட்டை அதே பகுதியைச் சேர்ந்த சிலம்பு என்கிற தியாகராஜனிடம் வாங்கியதாக தெரிவித்தார்.
இதுகுறித்து மாதவன் கம்பைநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாதவனின் பசுமாட்டை திருடி வேறுநபருக்கு விற்ற தியாகராஜனை கைது செய்தனர்.
Next Story






