என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி அரசு மகளிர் பள்ளியில் கண்காட்சி: பாரம்பரிய மரக்கன்றுகள் வைத்து மாணவிகள் அசத்தல்
    X

    தருமபுரி அரசு மகளிர் பள்ளியில் கண்காட்சி: பாரம்பரிய மரக்கன்றுகள் வைத்து மாணவிகள் அசத்தல்

    • மக்கள் தொடர்பு அலுவலகம், பள்ளிகல்வித் துறைசார்பில் புகைப்பட கண்காட்சி, செயல்பாடுகள் இடம் பெற்றன.
    • 200-க்கும் மேற்பட்ட அரியவகை மரக்கன்றுகளின் கண்காட்சி இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    தருமபுரி,

    தருமபுரியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழ்நாடு நாள் எனும் சிறப்பு நிகழ்ச்சி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

    இதில் பாரம்பரிய மிக்க 200-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை கண்காட்சியில் வைத்து மாணவிகள் அசத்தினர்.

    தமிழ்நாடு நாள் நிகழ்ச்சி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மக்கள் தொடர்பு அலுவலகம், பள்ளிகல்வித் துறைசார்பில் புகைப்பட கண்காட்சி, செயல்பாடுகள் இடம் பெற்றன.

    இதில் அவ்வையார் பள்ளி மாணவிகளின் பாரம்பரிய மிக்க 200-க்கும் மேற்பட்ட அரியவகை மரக்கன்றுகளின் கண்காட்சி இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    இக்கண்காட்சியில் மாணவிகள் தேடி திரட்டிய அரிய வகை மரக்கன்றுகளான ருத்திராட்சை மரம், திருவோடு மரம், மகாவில்வம், சிவகுண்டலம், சொர்க்க மரம், நாகலிங்கம், குதிரை பிடுக்கன், ஆகிய மரக்கன்றுகள் வைத்திருந்தனர்.

    மேலும் தான்றிக்காய், பதிமுகம் மரம், அசோகமரம், வெள்வேல், கூந்தல் பனை, தாளிப் பனை, பம்ளிமாஸ், பிரியாணி இலை, ஓதியன், ஈட்டி, சந்தனம், ஏழிலை பாலை, ரப்பர், ராம் சீத்தா, யூக்லிப்டிஸ், சோப்பு காய், பபூரசு மரம், நோனி, மற்றும் கீரை விதைகள், கிழங்கு வகைகள் இக்கண்காட்சியில் வைத்து மாணவிகள் அசத்தினர்.

    இக்கண்காட்சியை திறந்து வைத்த கலெக்டர் சாந்தி, எஸ்.பி. ஸ்டீபன் ஜேசுபாதம், மற்றும் நகர்மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது, முன்னாள் எம்.எல்.ஏ. தடங்கம் சுப்பிரமணி, தலைமை ஆசிரியை கலைச்செல்வி ஆகியோர் மாணவிகளை வெகுவாக பாராட்டினர்.

    Next Story
    ×