என் மலர்
நீங்கள் தேடியது "முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா"
- கொங்கு கல்வி அறக்கட்டளை தலைவர் மோகன்ராசு தலைமை வகித்து முதலாமாண்டு மாணவ, மாணவியர்களை வரவேற்று வாழ்த்தி பேசினார்.
- முடிவில் வணிகவியல் துறை தலைவர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.
மொரப்பூர்,
தருமபுரி மாவட்டம், மொரப்பூர் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு கொங்கு கல்வி அறக்கட்டளை தலைவர் மோகன்ராசு தலைமை வகித்து முதலாமாண்டு மாணவ, மாணவியர்களை வரவேற்று வாழ்த்தி பேசினார்.கொங்கு கல்வி அறக்கட்டளை செயலாளர் ஆர்.பிரபாகரன், பொருளாளர் சாமிக்கண்ணு, கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் சி.பி.எஸ்.சி. பள்ளி தாளாளர் தீ.சந்திரசேகர், மொரப்பூர் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் பொன் வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி முதல்வர் முனைவர் நா.குணசேகரன் வரவேற்று பேசினார். இவ்விழாவில் வணிகவியல் மேலாண்மை துறை தலைவர் ராஜா சிறப்பு விருந்தி னரை அறிமுகப் படுத்தி பேசினார்.
அதனை தொடர்ந்து மாற்று திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு ஆலோசகர் ஐ.நா.மன்றத்தில் 4 முறை உரையாற்றிய கண் பார்வையற்ற சென்னை சுவர்ண லட்சுமி மற்றும் இசை பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றவரும், இந்திய குடியரசு தலைவர் மற்றும் தமிழக முதல்வர் ஆகியோரிடம் விருது பெற்ற கண் பார்வையற்ற ஜோதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பாடல்கள் பாடியும், மாணவ, மாணவியர்களுக்கு கல்வியின் அவசியம் குறித்து பேசினார்கள்.
இவ்விழாவில் கொங்கு கல்வி அறக்கட்டளை இயக்குனர்கள் வெற்றிச் செல்வன், குணசீலன், கணேசன், தமிழரசு, ராமு, நாகராஜ் பரமசிவம் மற்றும் பேராசிரியர்கள் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வணிகவியல் துறை தலைவர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.






