என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அளவுக்கு அதிகமாக மாத்திரைகள் சாப்பிட்டு இளம்பெண் தற்கொலை
    X

    அளவுக்கு அதிகமாக மாத்திரைகள் சாப்பிட்டு இளம்பெண் தற்கொலை

    • திவ்யா கடந்த 19-ந் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி கிடந்தார்.
    • அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜகுணசேகரன். கூலித்தொழிலாளி.

    இவர் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு அதேபகுதியைச் சேர்ந்த திவ்யா என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகள் உள்ளார்.

    இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதன்காரணமாக மனமுடைந்து காணப்பட்ட திவ்யா கடந்த 19-ந் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். உடனே அங்கிருந்த உறவினர்கள் திவ்யாவை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த திவ்யாவின் தாய் குப்பம்மாள் மகேந்திரமங்கலம் போலீஸ் நிலையத்தில் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திவ்யாவின் கணவர், மாமனார், மாமியார் ஆகிய 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணமாகி 4 வருடங்கள் ஆனநிலையில் இளம்பெண் இறந்த சம்பவம் குறித்து அவரது கணவர் ராஜகுணசேகரனிடம் தருமபுரி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×