என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • பருப்பு விலை உயரக்கூடிய சூழலை மத்திய மாநில அரசுகள் கட்டுப் படுத்த வேண்டும்.
    • விவசாய பொருட்களை சாமானியர்கள், வியாபாரி கள் இல்லாமல் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் பதுக்கி வைத்திருக்கிறார்கள்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

    கிருஷ்ணகிரியில் நடந்த வெடி விபத்து காரணமாக பெரும்பாலான பட்டாசு வியாபாரிகளின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது பட்டாசு வியாபாரிகளி டையை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வணிகர் சங்க பிரதிநிதி கள் விவசாய சங்க பிரதிநிதி கள் துறை சார்ந்த அதிகாரி கள் உள்ளிட்டவர்களை குழு அமைத்து நெறிமுறை ப்படுத்தினால் விலைவாசி உயர்வை ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும்.

    வரும் நாட்களில் வெங்காயம் விலை பெரும் அளவில் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பருப்பு விலை உயரக்கூடிய சூழலை மத்திய மாநில அரசுகள் கட்டுப் படுத்த வேண்டும். விலை வாசி உயர்வு ஏற்பட்டால் மக்கள் கடுமை யாக பாதிக்கப் படுவார்கள்.

    விவசாய பொருட்களை சாமானியர்கள், வியாபாரி கள் இல்லாமல் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் பதுக்கி வைத்திருக்கிறார்கள். அவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால் சாமானியர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படு–கிறது. நெடுஞ்சாலை பகுதியில் சுங்க கட்டணம் பெரிய அளவில் வசூலிக்கப்படுகிறது. இதனை விரைவில் மத்திய அரசு குறைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பள்ளி மேலாண்மை குழு உறுப்பி னர் அறிவழகன், உணவு தயார் செய்வதை பார்வை யிட்டார்.
    • கடத்தூர் அருகே நத்தமேட்டில் பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி தயார் செய்யப்பட்டது.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம், ஜம்மண அள்ளி அரசு பள்ளியில் சத்துணவு திட்ட த்தில் காலை சிற்றுண்டியான கோதுமை ரவை, உப்புமா தயார் செய்யப்பட்டு பள்ளி குழந்தைகளுக்கு வழங்க ப்பட்டது.

    இதில் சமையலற்கள் முத்துலட்சுமி, மகேஸ்வரி, வினோ ஆகியோர் காலை சத்துணவு தயார் செய்து குழந்தைகளுக்கு வழங்கினர். இவர்களுடன் பள்ளி மேலாண்மை குழு உறுப்பி னர் அறிவழகன், உணவு தயார் செய்வதை பார்வை யிட்டார்.

    இந்நிகழ்வை டெப்டி பி.டி.ஒ ராமு கள ஆய்வு மேற்கொண்டார். இதே போல் கடத்தூர் அருகே நத்தமேட்டில் பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி தயார் செய்யப்பட்டது.

    அப்போது ஒன்றிய கவுன்சிலர் ஜெயகுமார், ஊராட்சி மன்ற தலைவர் பரசுராமன், மக்கள் நல பணியாளர் தர்மலிங்கம், ஊராட்சி மன்றத் துணைத் தலைவி லட்சுமி, மகளிர் மன்ற விஜயலட்சுமி, கோபால், ஊராட்சி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் உண்ணாமலை, ஆசிரியர் கோவிந்தசாமி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த திட்டத்தில் கடத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் சுமார் 4 ஆயிரம் குழந்தைகளும், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய பகுதி யில் 3 ஆயிரம் குழந்தை களும் பயன்பெறு வார்கள் என கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • குப்பைகள், பாட்டில்களை எடுத்து விற்று அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் வாழ்ந்து வந்தார்.
    • சில தினங்களுக்கு முன் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    தருமபுரி,

    ஓசூர் அட்கோ காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட மோரனப்பள்ளி கிராமத்தில் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக ஆதரவற்ற ஆண் ஒருவர் சுற்றித்திரிந்துள்ளார்.

    இவர் அப்பகுதியில் குப்பைகள், பாட்டில்களை எடுத்து விற்று அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் வாழ்ந்து வந்தார்.

    இந்நிலையில் இவருக்கு கடந்த மாதம் சாலை விபத்து ஏற்பட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

    சில தினங்களுக்கு முன் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். பிரேத பரிசோத னை செய்து அவரது உடலை ஓசூர் அட்கோ காவல் நிலைய காவலர் அசோக், மை தருமபுரி அமரர் சேவை ஒருங்கி ணைப்பாளர் அருணாச்ச லம், முஹம்மத் ஜாபர், தென்றல் ஆகியோர் தருமபுரியில் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர்.

    • வருகிற 24-ந் தேதி காலை 10 மணிக்கு நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆய்வுக் கூட்டம் நடக்கிறது.
    • வருகிற 26 -ந் தேதி ஏரியூர் ஒன்றிய தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆய்வுக் கூட்டம் ராம நாகம்மாள் மண்டபத்தில் நடக்கிறது.

    தருமபுரி,

    தருமபுரி தி.மு.க கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஒன்றிய நகர பேரூர் வாக்குச்சாவடி முகவர்கள் ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது.

    இதில் அந்தந்த பகுதிக்கு உட்பட்ட  வாக்குச்சாவடி முகவர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். நாளை (23-ந் தேதி) காலை 10 மணிக்கு தருமபுரி நகர தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆய்வு கூட்டம் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடக்கிறது.

    மதியம் 12 மணிக்கு அதியமான் கோட்டை நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய தி.மு.க. அலுவல கத்திலும், பிற்பகல் 2 மணிக்கு நல்லம்பள்ளி மத்திய ஒன்றிய தி.மு.க. அலுவலகத்திலும், முகவர்கள் ஆய்வு கூட்டம் நடக்கிறது.

    வருகிற 24-ந் தேதி காலை 10 மணிக்கு நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆய்வுக் கூட்டம் நடக்கிறது.

    இண்டூரில் மதியம் 12 மணிக்கும் தருமபுரி மேற்கு ஒன்றிய தி.மு.க. முகவர்கள் கூட்டம் மாவட்ட தி.மு.க. அலுவலகத்திலும், பிற்பகல் 2 மணிக்கு பாலக்கோடு கிழக்கு ஒன்றிய தி.மு.க. முகவர்கள் ஆய்வுக் கூட்டம் சோமன அள்ளியிலும் நடக்கிறது.

    வருகிற 26 -ந் தேதி ஏரியூர் ஒன்றிய தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆய்வுக் கூட்டம் ராம நாகம்மாள் மண்டபத்திலும், மதியம் 12 மணிக்கு பென்னாகரம் தெற்கு பென்னாகரம் பேரூர் தி.மு.க. முகவர்கள் ஆய்வு கூட்டம் சமுதாய கூட்டத்திலும் நடக்கிறது. அன்றைய தினம் பென்னாகரம் வடக்கு பாப்பாரப்பட்டி பேரூர் தி.மு.க முகவர்கள் ஆய்வு கூட்டம் செங்குந்தர் மண்டபத்திலும் நடக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரசு தொடக்கப்பள்ளி குழந்தை களுக்கு காலை சிற்றுண்டி வழங்க ஒத்திகை நேற்று நடைபெற்றது.
    • காலை சிற்றுண்டி வழங்க ஒத்திகையில் தடங்கம் ஊராட்சி தலைவர் கவிதா முருகன் தலைமையில் அரசு அதிகாரிகள் ஆகியோர் சாப்பிட்டு பார்த்தனர்.

    தொப்பூர்,

    தமிழக அரசால் அரசு தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்க ஒத்திகை நேற்று நடைபெற்றது.

    தருமபுரி மாவட்டம், தடங்கம் ஊராட்சி அவ்வைவழி பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டி வழங்க ஒத்திகையில் தடங்கம் ஊராட்சி தலைவர் கவிதா முருகன் தலைமையில் அரசு அதிகாரிகள் ஆகியோர் சாப்பிட்டு பார்த்தனர்.

    இதில் தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா மேரி, சமையலர் விஜயசாந்தி, வசந்தி, சௌந்தாமணி, மாவட்ட துணை அமைப்பாளர், தி.மு.க. சுற்றுச்சூழல் அணி தருமபுரி கிழக்கு மாவட்ட துணை அமைப்பாளர் அவ்வை முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 380 மனுக்கள் வரப்பெற்றன.
    • மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அதற்கான தீர்வினை விரைந்து காண வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு கலெக்டர் சாந்தி உத்தரவிட்டு ள்ளார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி, தலைமையில் நடை பெற்றது.ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமைகளில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெறப்பட்டு, தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய தீர்வுகள் காணப்பட்டு வருகிறது.

    கூட்டத்தில் பொது மக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம், பட்டா வேண்டுதல், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலை வாய்ப்பு, இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 380 மனுக்கள் வரப்பெற்றன என்று கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெரிவித்துள்ளார்.

    பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமெனவும், பொது மக்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அதற்கான தீர்வினை விரைந்து காண வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு கலெக்டர் சாந்தி உத்தரவிட்டு ள்ளார்.

    கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) நசீர் இக்பால், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறும் பான்மையினர் நல அலுவலர் ராஜசேகரன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கண்ணன் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • கள்ள தனமாக மதுபானங்கள் விற்பனை செய்ததாக 19 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • சூதாட்டத்தில் ஈடுபட்ட 21 பேர், 3 கஞ்சா வழக்குகள், புகையிலை பொருட்கள், 2 லாட்டரி வழக்குகள் உள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் மதுபோதையில் வாகனம் இயக்குவோர் மீது நட வடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதையொட்டி தருமபுரி மாவட்டம், முழுவதும் போலீசார் சிறப்பு வாகன தணிக்கை மேற் கொண்டனர்.

    அப்போது மது போதையில் வாகனம் இயக்கியதற்காக தருமபுரி காவல் உட்கோட்டத்தில் 15 பேர், அரூர் உட்கோட்டத்தில் 18 பேர், பென்னாகரம் உட்கோட்டத்தில் 17 பேர், பாலக்கோடு உட்கோட்டத்தில் 19 பேர் என 69 பேர் போலீசாரிடம் சிக்கினர். இவர்களிடம் இருந்து ரூ.6.9 லட்சம் அபராதம் போலீசார் வசூலித்தனர்.

    இதை தவிர சூதாட்டத்தில் ஈடுபட்ட 21 பேர், 3 கஞ்சா வழக்குகள், புகையிலை பொருட்கள், 2 லாட்டரி வழக்குகள், புகையிலை பொருட்கள் விற்றதாக 6 பேர் மீதும் வழக்குகள் செய்யப் பட்டன.

    இவை தவிர, கள்ளதனமாக மதுபானங்கள் விற்பனை செய்ததாக 19 பேர் கைது செய்யப்பட்டனர்.

    • அங்காடிக்கு நேற்று 1,645 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு வந்தன.
    • மொத்தம் ரூ.8 லட்சத்து 57 ஆயிரத்து 198 மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டு கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டு கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.

    இந்த அங்காடிக்கு நேற்று 1,645 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு வந்தன. நேற்று ஒரு கிலோ பட்டுகூடு அதிகபட்சமாக ரூ.658-க்கும், குறைந்த பட்சமாக ரூ.289- க்கும், சராசரியாக ரூ.521.09-க்கும் விற்பனையானது.

    மொத்தம் ரூ.8 லட்சத்து 57 ஆயிரத்து 198 மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.

    • காரிமங்கலம் துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் 24-ந்தேதி மாதா ந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை மறுநாள் 24-ந் தேதி வியாழக் கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டம், வெள்ளி சந்தை துணை மின்நிலைய செயற்பொறியாளர் வனிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காரிமங்கலம் துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் 24-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    அதனால் காரிமங்கலம் சுற்று வட்டார பகுதியான காரிமங்கலம், கெரகோட அள்ளி, பொம்மஅள்ளி, கெட்டுர், அனுமந்தபுரம், எழுமிச்சனஅள்ளி, அண்ணா மலை அள்ளி, கும்பாரஅள்ளி, சின்ன கொல்லப்பட்டி, பெரிய கொல்லப்பட்டி, கொல்லுப்பட்டி, காட்டூர், தும்பல அள்ளி, ஏ.சப்பாணிபட்டி, கெண்டிகானஅள்ளி, பெரியாம்பட்டி, சின்ன பூலாப்பட்டி, மோட்டு கொட்டாய், பேகாரஅள்ளி, திண்டல், பந்தாரஅள்ளி, எட்டியானூர், கோவிலூர், கே. மோட்டூர், எச்சனஅள்ளி, கீரிக்கொட்டாய், மன்னன் கொட்டாய் உள்ளிட்ட அதன் சுற்றுவட்டார பகுதி களில் நாளை மறுநாள் 24-ந் தேதி வியாழக் கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    • தட்கல் முறையில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கும், முன்னுரிமை அடிப்படை யில் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும்.
    • விவசாய மின் இணைப்பு பெற தங்கள் பகுதி செயற்பொறியாளர் இயக்குதல் மற்றும் பராமரித்தல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.

    தருமபுரி,

    தருமபுரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் தமிழ்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் அறிவுறுத்தலின்பேரில், விவசாய மின் இணைப்பு பெற காத்திருப்பு பட்டியலில் உள்ள விருப்பமுள்ள விண்ணப்ப தாரர்கள், விரைந்து விவசாய மின் இணைப்பு பெறும் வகையில், விரைவு தட்கல் மின் இணைப்பு வழங்கல் திட்டம், கடந்த 2017-ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

    தட்கல் முறையில் ஏற்கனவே பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கும், தற்போது தட்கல் முறையில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கும், முன்னுரிமை அடிப்படையில் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும்.

    எனவே, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில், ஏற்கனவே விவசாய மின் இணைப்புகோரி பதிவு செய்துள்ள விவசாயிகள், தட்கல் சிறப்பு திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு பெற தங்கள் பகுதி செயற்பொறியாளர் இயக்குதல் மற்றும் பராமரித்தல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விசாரிக்கும் போது அதே பகுதியைச் சேர்ந்த பருவதன அள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் பணத்தை எடுத்துச் சென்றதாக பூசாரி தெரிவித்தார்.
    • பூசாரியை காவலில் எடுத்து விசாரித்தால் உண்மை தெரியவரும்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று மக்கள் குறைத்தீர்க்கும் முகாமில் கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க வந்தனர். அந்த மனுவில் அப்பகுதி பொதுமக்கள் கூறியிருப்பதாவது:-

    எங்கள் கிராமத்தில் 18 கிராம மக்கள் வழிபடும் பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இந்து அறநிலைய துறைக்கு சொந்தமான பழமை வாய்ந்த சிறப்புமிக்க பெரிய மாரியம்மன் கோவிலில் வைக்கப்பட்டிருக்கும் உண்டியலில் உள்ள பணத்தை கடந்த 18-ந் தேதி அன்று சில மர்ம நபர்கள் திருடி சென்றதாக கோவில் பூசாரி கூறியுள்ளார்.

    பொதுமக்கள் சென்று பார்க்கும் போது கோவிலில் போடப்பட்டிருக்கும் 2 பூட்டுகளும் உடைக்கப் படவில்லை. ஆனால் உண்டியல் பணம் மட்டுமே திருடுபோய் உள்ளது தெரியவந்தது. மேலும் நாங்கள் பூசாரியை விசாரிக்கும் போது அதே பகுதியைச் சேர்ந்த பருவதன அள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் பணத்தை எடுத்துச் சென்றதாக பூசாரி தெரிவித்தார். அதனால் பூசாரியை காவலில் எடுத்து விசாரித்தால் உண்மை தெரியவரும். இது சம்பந்தமாக அறநிலை யத்துறை அதிகாரியிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே மாவட்ட கலெக்டர் உரிய விசாரணை செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    • தண்டவாளத்தில் பலத்த காயமடைந்து இறந்து கிடந்தார்.
    • ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள பெல்ராம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது43). ரெயில்வே கேட் கீப்பரான இவர் வட்டகானம்பட்டி ரெயில்வே கேட் பகுதியில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் இவர் நேற்று இரவு வட்டகானம்பட்டி-செங்கோடம்பட்டி இடையே உள்ள தண்டவாளத்தில் பலத்த காயமடைந்து இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த தருமபுரி ரெயில்வே போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜெகதீசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெகதீசன் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தாரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×