என் மலர்
தர்மபுரி
- மாணவி நேற்று கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டைவிட்டு சென்றார். ஆனால், மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்ப வில்லை.
- போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவி கவுசல்யாவை தேடி வருகின்றனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் ஏரியூரை அடுத்த ஒட்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 19 வயது மாணவி. இவர் தனியார் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் மாணவி நேற்று கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டைவிட்டு சென்றார். ஆனால், மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்ப வில்லை. இதனால் பதறிப்போன மாணவியின் தாய் அவரை உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடிபார்த்தார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து மாணவியின் உறவினர் ஏரியூர் போலீஸ் நிலையத்தில் மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த அய்யண்ணன் மகன் சக்திவேல் (28) என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவி கவுசல்யாவை தேடி வருகின்றனர்.
- விலையில்லா சீருடை, விலையில்லா மிதிவண்டி, விலையில்லா பேருந்து பயண அட்டை, விலையில்லா மூடுகாலணி முதலிய சலுகைகள் வழங்கப்படும்.
- மாணவிகளுக்கு மூவலூர் ராமிர்தம் அம்மையார் கல்வி உதவித்தொகையாக ரூ.1000- மாதந்தோறும் வழங்கப்படுகிறது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் இவ்வாண்டிற்கான நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 31.8.2023 வரை கால நீட்டி ப்பு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளதாவது:-
தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் தருமபுரி மற்றும் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் அரூரில் இவ்வாண்டு ஆகஸ்ட் 2023-ம் ஆண்டு சேர்க் கைக்கு முதல் கட்ட சேர்க்கை நடைபெற்றதில் தொழிற் பிரிவுகளில் மீத முள்ள காலியிடங்களை நிரப்பிட நேரடி சேர்க்கைக் கான கால அவகாசம் 31.7.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சேர்க்கைக்கு வரும்போது தங்கள் அசல் கல்வி சான்றிதழ்கள், சேர்க்கை மற்றும் விண்ணப்ப கட்ட ணங்களுடன் நேரில் வருகை புரியுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது. அசல் 10-ம் வகுப்பு மார்க் சீட், அசல் டி.சி., அசல் சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, அலைபேசி எண்கள், மார்பளவு புகைப் படம் -1, மெயில் ஐடி மற்றும் விண்ணப்ப கட்ட ணம் ரூ.50- சேர்க்கை கட்ட ணம் ரூ.195- (அ) ரூ.185.
பயிற்சி காலத்தின்போது பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.750- உதவித்தொகையாக வழங்கப்படும். இதை தவிர விலையில்லா பாடபுத்தகம், விலையில்லா வரைபட கருவிகள், விலையில்லா மடிக்கணினி, விலையில்லா சீருடை, விலையில்லா மிதிவண்டி, விலையில்லா பேருந்து பயண அட்டை, விலையில்லா மூடுகாலணி முதலிய சலுகைகள் வழங்கப்படும்.
ஆண் மற்றும் பெண் பயிற்சியாளர்களுக்கு விடுதி வசதி உண்டு. மேலும் இந்நிலையத்தில் பயிலும் மாணவிகளுக்கு மூவலூர் ராமிர்தம் அம்மையார் கல்வி உதவித்தொகையாக ரூ.1000- மாதந்தோறும் வழங்கப்படுகிறது.எனவே தகுதியுள்ள மாணவ, மாணவியர்கள் இதுவரை விண்ணப்பிக்காத வர்கள் மற்றும் ஏற்கனவே விண்ணப்பித்து தொழிற் பிரிவு கிடைக்க பெறாத வர்கள் இந்த வாய்ப்பினை தவற விடாமல் விண்ணப் பித்து பயனடையலாம். விண்ணப்பங்களை இல வசமாக பதிவேற்றம் செய்ய தருமபுரி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை அணுகலாம்.
மேலும் விபரங்களுக்கு 94458-03042, 93617-45995, 98949-30508 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் நிரப்பப்பட்டு பொதுமக்க ளுக்கு குடிநீர் தேவைக்காக வழங்கப்பட்டு வருகிறது.
- கோழிப் பண்ணைக்கு தண்ணீர் எடுத்து சென்ற லாரி மற்றும் டிராக்டர்களை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர்.
தொப்பூர்,
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் எர்ரபையனஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கொங்காளம் காடு பகுதியில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு அங்கிருந்து தினந்தோறும் லாரிகள் மற்றும் டிராக்டர் கள் மூலம் தண்ணீரை எச்சனஹள்ளி ஊராட்சி யில் உள்ள ஒரு தனியார் கோழிப்பண்ணைக்கு தினந்தோறும் அதிக அளவில் எடுத்து செல்வதாக கூறப்படுகிறது.
இந்த ஆழ்துளை கிணறுகள் உள்ள பகுதியிலேயே ஊராட்சிக்கு சொந்த மான இரண்டு ஆழ்துளை கிணறுகள் உள்ளது. அதன் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் நிரப்பப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் தேவைக்காக வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக அப்பகுதி மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இருப்பி னும் தனியார் கோழிப் பண்ணை நிறுவனத்திற்கு தினந்தோறும் லாரிகளில் பல்லாயிரக் கணக்கான லிட்டர்கள் அளவில் தண்ணீர் எடுக்கப்பட்டதால் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்க்கு சென்றதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு ஊராட்சி மக்களுக்கு குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை கொங்காளங்காடு பகுதி சாலையில் கோழிப் பண்ணைக்கு தண்ணீர் எடுத்து சென்ற லாரி மற்றும் டிராக்டர்களை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்பொழுது குடிநீர் தேவைக்கே தண்ணீர் இல்லாதபோது கோழி பண்ணைக்காக தினந்தோறும் அதிக அளவில் ஆழ்துளை கிணறுகளில் உறிஞ்சப்பட்டு தண்ணீர் கொண்டு செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லை என்றால் எங்கள் போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.
இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதி அளித்தனர். பின்னர் சிறை பிடிக்கப்பட்ட வாகனத்தை பொதுமக்கள் விடுவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
- சத்துணவு, அங்கன் வாடி, ஊர்புற நூலகர் உள்ளிட்ட தொகு ப்பூதிய ஓய்வூதியர் களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ 7850,வழங்க வேண்டும்
தருமபுரி,
குறைந்தபட்ச ஓய்வூதியம் கேட்டு தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் வட்ட தலைவர் மணி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பழனிச் சாமி, மாவட்ட துணைத் தலைவர்கள் மோகன்ராஜ், ஜெகதீசன்,வட்ட செய லாளர் முனிராஜ், வட்ட பொருளாளர் பாபு, ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
சத்துணவு, அங்கன் வாடி, ஊர்புற நூலகர் உள்ளிட்ட தொகு ப்பூதிய ஓய்வூதியர் களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ 7850,வழங்க வேண்டும் என வலியுறுத்தி னர்.
- நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாக்கடை கால்வாய்களை உடனடியாக தூர் வார வேண்டும்.
- ஆங்காங்கே தேங்கி கிடக்கும் குப்பைகளை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தருமபுரி,
தருமபுரி நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி அவசர கூட்டம் நடந்தது.
நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமை தாங்கினார். நகராட்சி துணை தலைவர் நித்யா முன்னிலை வகித் தார். நகராட்சி ஆணை யாளர் புவ னேஸ்வரன் வரவேற்றார். கூட்டத்தில் பல்வேறு பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
தருமபுரி நகரில் பாராளு மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 6 இடங்களில் ரூ.52 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் உயர் கோபுர மின் விளக்குகள் அமைப்பது, நகராட்சி பகுதியில் உள்ள பல்வேறு வார்டுகளில் ரூ.52 லட்சத்தில் புதிய தார் சாலை கள் மற்றும் சிமெண்ட் சாலைகள் அமைப்பது உள்ளிட்ட ரூ.1 கோடியே 4 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் திட்ட பணிகள் மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மேலும் பல்வேறு திட்ட பணிகள் நிறைவேற்று வது என்பது உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
தருமபுரி எஸ்.வி. ரோட்டில் உள்ள நகராட்சி பள்ளி வளாகத்தில் மாணவ -மாணவிகளின் வசதிக்காக கட்டப்பட்டுள்ள கழிப்பி டத்தை உடனடியாக பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும்.
நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாக்கடை கால்வாய்களை உடனடியாக தூர் வார வேண்டும். ஆங்காங்கே தேங்கி கிடக்கும் குப்பைகளை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகராட்சி கவுன்சிலர்கள் வலியுறுத்தி பேசினர்.
கவுன்சிலர்களின் கோரிக் கைகளை உடனடியாக நிறை வேற்ற நடவடிக்கை எடுக்கப் படும் என்று நகராட்சித் தலைவர் மற்றும் ஆணை யாளர் தெரிவித்தனர்.
கூட்டத்தில் நகராட்சி பொறியாளர் புவனேஸ் வரி, உதவி பொறியாளர் நாகராஜ், சுகாதார அலுவலர் ராஜரத்தினம், வருவாய் ஆய்வாளர் மாதையன், கணக்கு அலுவலர் முத்துக் குமார் மற்றும் துப்புரவு ஆய்வா ளர்கள், அலு வலர்கள் கலந்து கொண்ட னர்.
- இருமத்தூர் துணைமின் நிலையத்தில் நாளை 24-ந்தேதி வியாழக்கிழமை மாதாந்திர பரா மரிப்பு பணிகள் நடைபெறு கிறது.
- நாளை 24-ந்தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார விநி யோகம் நிறுத்தம் செய்யப் படுகிறது.
மொரப்பூர்,
தருமபுரி மாவட்டம், கடத்தூர் மின்வாரிய கோட்ட செயற் பொறி யாளர் ரவி வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறப்பட்டு ள்ளதாவது:-
இருமத்தூர் துணைமின் நிலையத்தில் நாளை 24-ந்தேதி வியாழக்கிழமை மாதாந்திர பரா மரிப்பு பணிகள் நடைபெறு கிறது. அதனால் கம்பைநல்லூர், பூமி சமுத்திரம், க. ஈச்சம் பாடி, சொர்ணம்பட்டி, மாவடிபட்டி, மல்ல சமுத்தி ரம், செங்குட்டை, சமத்துவ புரம், அக்ரஹாரம், முத்தம் பட்டி, மல்லம்மா புரம், பள்ளம்பட்டி, பெரிச்சா கவுண்டம்பட்டி, காட்ட னூர், சொர்னம்பட்டி, பட்டாக பட்டி, பெரம் மாண்டப்பட்டி, கெலவள்ளி, கொங்கரப் பட்டி, கூடு துறைபட்டி, பள்ளத்தூர், மரியம்பட்டி, கோணம்பட்டி, காடை யாம்பட்டி, வகுரப்பம்பட்டி, பள்ளிப்பட்டி, இருமத்தூர், வாடமங்கலம், கொன்றம் பட்டி மற்றும் திப்பம்பட்டி ஆகிய கிராமங்களுக்கும் நாளை 24-ந்தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார விநி யோகம் நிறுத்தம் செய்யப் படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதே போல் கடத்தூர், ஆர்.கோபிநாதம்பட்டி ஆகிய துணை நிலையத்தில் நாளை மாதாந்தி பராமரிப்பு பணிகள் நடக்கிறது. அதனால் கடத்தூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கடத்தூர், புளியம் பட்டி, ரேக அல்லி, சுங்கர அள்ளி, தேக்கல்நாயக்கன் பட்டி, நத்த மேடு, புதுரெட்டியூர், நல்ல குட்டல அள்ளி, முத்தனூர், மணியம்பாடி, கதிர் நாயக்கன் அல்லி , ராணி மூக்கனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களிலும், ஆர்.கோபிநாதம்பட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பொம்பட்டி, நவலை, ஆண்டிப்பட்டி, கருத்தங்குளம், சுந்தரம் பள்ளி ஆகிய கிராமங்கள் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கிராமங்களிலும்மின் கம்பிகளின் தரம் உயர்த்தும் வேலைகள் நடைபெறு வதால், நாளை வியாழக் கிழமை 24-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தும் செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறி யாளர் சுரேஷ் தெரிவித்து ள்ளார்.
- கலெக்டர் சாந்தி தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
- விவசா யிகள் இக் கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்களது குறை களையும் கருத்து களையும் எடுத்து கூறி பயனடையலாம்.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை 25-ந்தேதி நடைபெற உள்ளது.
இது குறித்து தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளதாவது:-தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை 25-ந் தேதி வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 11 மணியளவில் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.எனவே தருமபுரி மாவட்டத்தை சார்ந்த விவசா யிகள் இக் கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்களது குறை களையும் கருத்து களையும் எடுத்து கூறி பயனடையலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- பிளஸ்-2 வரை படித்து விட்டு தேர்வில் தேர்ச்சியடை யாததால் மறுதேர்வு எழுதி விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள மோது குலஅள்ளி கிராமம் உள்ள அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் 19 வயது மாணவி. இவர் பிளஸ்-2 வரை படித்து விட்டு தேர்வில் தேர்ச்சியடை யாததால் மறுதேர்வு எழுதி விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று மாணவி பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வெளியே சென்றார். ஆனால், அவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதுகுறித்து மாணவியின் தாய் பாலக்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
இதேபோன்று அதே பகுதியைச் சேர்ந்த 17வயது சிறுமி. 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். சம்பவத் தன்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து சிறுமியின் தாய், பாலக்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வருகின்றனர்.
- பின்னர் அவர்கள் பாலிடெக்னிக் கல்லூரியின் ஆய்வகம், மாணவர்கள் தங்கும் விடுதி ஆகியவற்றை பொதுகணக்கு குழுவினர் ஆய்வு செய்தனர்.
- இந்த ஆய்வின் போது, தருமபுரி எம்.எல்.ஏ. வெங்கடேஸ்வரன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
தருமபுரி,
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வ பெருந்தகை தலைமையில், குழு உறுப்பினர்கள் எம்.எல்.ஏ.க்கள் திருச்செங்கோடு ஈஸ்வரன், திருப்போரூர் பாலாஜி, பரமத்திவேலூர் எஸ். சேகர் ஆகியோர் இன்று தருமபுரி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களுடன் மாவட்ட கலெக்டர் சாந்தி உடன் சென்றார்.
இன்று காலை சட்டமன்ற பேரவை பொதுக்கணக்கு குழுவினர் காரி மங்கலத்திற்கு சென்றனர். அங்கு உள்ள அரசு பாலி டெக்னிக் கல்லூரியில் முதற்கட்டமாக செய்தபோது, அங்குள்ள ஒரு வகுப்பறையில் சுவற்றில் விரிசல் ஏற்பட்டிருந்தது. இதுகுறித்து ஈஸ்வரன் எம்.எல்.ஏ., எப்படி விரிசல் விழும் அளவிற்கு தரமற்ற முறையில் கட்டிடம் கட்டினீர்கள் என அதிகாரிகளை பார்த்து கேள்வி எழுப்பினார். இதேபோன்று கல்லூரியில் உள்ள சமையலறைக்கு சென்று ஊழியர்களிடம் கேள்வி எழுப்பி ஈஸ்வரன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
பின்னர் அவர்கள் பாலிடெக்னிக் கல்லூரியின் ஆய்வகம், மாணவர்கள் தங்கும் விடுதி ஆகியவற்றை பொதுகணக்கு குழுவினர் ஆய்வு செய்தனர்.
இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு காரிமங்கலம் பஸ் நிலையம், உழவர் சந்தை, வாரசந்தை, மின்தகன மேடை மற்றும் அரசு திட்டப்பணிகள் நடைபெறும் இடங்களை ஆய்வு செய்தனர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்து தருமபுரி நகரில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட நூலகம், அறிவுசார் மையம் ஆகிய இடங்களில் ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து சட்டமன்ற பேரவை பொதுகணக்கு குழுவினர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த ஆய்வின் போது, தருமபுரி எம்.எல்.ஏ. வெங்கடேஸ்வரன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
- பாப்பிரெட்டிப்பட்டி வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் தொடங்கப்பட்டது.
- நிகழ்ச்சியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட விளை யாட்டு வீரர்கள் பங்கேற்ற னர்.
கடத்தூர்,
தருமபுரி மாவட்டம், கடத்தூர் அரசு பள்ளியில் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் தொடங்கப்பட்டது.இதில் பாப்பி ரெட்டிப் பட்டி வட்டாரத்திற்கு உட்பட்ட அரசு மற்றும் தனி யார் பள்ளி களை சேர்ந்த சுமார் 60-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றது.
இதில் ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் பிரிவிற்கான வாலிபால் போட்டிகளும், கோகோ போட்டிகளும் நடைபெற்றது.இந்த விளையாட்டு போட்டிகளை கடத்தூர் அரசு பள்ளி ஆசிரியர், சங்க தலைவர் கிருஷ்ணன், கண்ட கவுண்டனூர் தலைமை ஆசிரியர் அருள் வளவன், முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் மணி மாறன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட விளை யாட்டு வீரர்கள் பங்கேற்றனர். மேலும் உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜேந்திரன், தென்றல், மாது, செல்வம், முரளி, சிங்காரம், உள்ளிட்ட இருபால் உடற்கல்வி ஆசிரி யர்கள் கலந்து கொண்டனர்.
- சாதி, மதம் இல்லாமல் அனைரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்.
- மாவட்டத்தில் நடைபெறும் குற்ற சம்பவங் களில் 80 சதவீதம் மது போதையால் தான் நடை பெறுகிறது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், செம்மாண்டகுப்பம் கிரா மத்தில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்றத்தலைவர் பானு பூமணி தலைமை வகித்தார்.
முகாமில், தருமபுரி மாவட்ட சமூக நீதி மற்றும் சமூக உரிமைகள் பிரிவு டி.எஸ்.பி. ஜெயக்குமார், சட்ட ஒழுங்கு பிரிவு டி.எஸ்.பி செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இம்முகாமில், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தேவி அருள்ஞானசேகரன், வட்டாட்சியர் சரவணன், புள்ளியல்துறை ஆய்வாளர் உஷாராணி, ஊராட்சி செயலர் இடும்பன், பசுமை தாயகம் வக்கீல் மாது, ஊர்கவுண்டர், மந்திரி கவுண்டர் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
இம்முகாமில் மாவட்ட சமூக நீதி மற்றும் சமூக உரிமைகள் பிரிவின் கீழ் பள்ளியில் படிக்கும் மாண வர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு செய்து தரப்பட்டுள்ள வசதிகள், உயர்கல்வி சிறப்பு உதவி தொகை, போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம், பெண் கல்வி ஊக்குவிப்பு திட்டம் குறித்து விழிப்பு ணர்வு துண்டு பிரசுரங்கள் பொது மக்க ளுக்கு வழங்கப்பட்டது.
முகாமில் டி.எஸ்.பி. ஜெயக்குமார் பேசும்போது சட்டத்தின் முன் அனை வரும் சமம். உயர்ந்தவர் தாழ்ந்தவர், பணம் படைத்த வர், ஏழைகள் என்று வேற்றுமைகள் இன்றி எல்லோரும் சமத்துவத்துடன் வாழ வேண்டும்.
தன்னடக்கத்தோடு இருக்க வேண்டும். சட்டங் கள் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வாய்ப்பு இல்லை. 27 ஆயிரம் சட்டங்கள் உள்ளன. இதில் இந்திய அரசியல் சட்டம் முக்கியமானது. தீண்டாமை இருக்கக்கூடாது.
சாதி, மதம் இல்லாமல் அனைரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். வார்த்தை களை பார்த்து பேச வேண்டும். அடுத்த நபர்களையும், சாதியை பற்றியும் இழிவாக பேசக்கூடாது. மேலும் மாவட்டத்தில் நடைபெறும் குற்ற சம்பவங் களில் 80 சதவீதம் மது போதையால் தான் நடை பெறுகிறது.
ஆகவே அவற்றை கட்டுப்படுத்த பெண்களின் பங்களிப்பு மிக அவசியம். முடிந்தவரை மதுபோதை யில் இருந்து ஆண்களை மீட்டெடுக்கவும், கட்டுப் படுத்தவும் பெண்களால் மட்டுமே முடியும் என்றார்.
- சுற்றுலா மினி வேன் இவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார்.
- அவருக்கு மூக்கு, வாய், இடது கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
மாரண்டஅள்ளி,
தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே அமானிமல்லாபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 58) கூலி தொழிலாளி.
இவர் கடந்த 20-ம் தேதி மளிகை பொருட்கள் வாங்க கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது எம்.ஜி.ஆர் நகர் அருகே சாலையை கடக்க முயன்ற போது மார ண்ட அள்ளியில் இருந்து பாலக்கோடு நோக்கி வந்த சுற்றுலா மினி வேன் இவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். அதில் அவருக்கு மூக்கு, வாய், இடது கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இது குறித்து மாரண்ட அள்ளி போலீசில் புகார் அளிக்கப்படடது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.






