என் மலர்
தர்மபுரி
- இன்று அதிகாலை திடீரென கடையில் உள்ள குடோனில் இருந்து புகை வந்தது.
- தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.
காரிமங்கலம்,
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், திண்டல் அடுத்த தெல்லன அள்ளி கிரா மத்தில் எச்சனம்பட்டியை சேர்ந்த மாரிமுத்து என்பவர் பழைய இரும்பு கடை நடத்தி வந்தார்.
மேலும் அவர் பிளாஸ்டிக் பொருட்களை குடோனில் சேகரித்தும் வைத்து இருந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் இன்று அதிகாலை திடீரென கடையில் உள்ள குடோனில் இருந்து புகை வந்தது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து கடையின் உரிமையாளர் மாரிமுத்து வுக்கு தகவல் தெரி விக்கப் பட்டது. உடனே அவர் விரைந்து வந்து பார்வை யிட்டார்.
அப்போது குடோன் முழுவதும் தீ பற்றி குபுகுபு வென எரிந்து ெகாண்டி ருந்தது. இது குறித்து பாலக்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் ெதரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் காரிமங்க லம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.
தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். இந்த தீ விபத்து குறித்து காரிமங்கலம் போலீசார் விசார ணை நடத்தி வருகின்றனர்.
- 26-ந் தேதி சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை மறுபூஜை நடை பெறுகிறது.
- திரளான பெண் பக்தர்கள் பங்கேற்குமாறு நோட்டீஸ் விநியோகித்து கோவில் நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
தருமபுரி,
தருமபுரி நகரில் பிரசித்தி பெற்ற கோட்டை வர மகாலட்சுமி சமேத பரவாசுதேவ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வர மகாலட்சுமிக்கு நாளை (25-ந்தேதி) வெள்ளி க்கிழமையன்று வரலட்சுமி விரதம் நிகழ்ச்சி அனுசரிக்கப்படுகிறது.
இதற்காக நாளை காலை 9 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் செய்யப்பட்டு புண்யா ஹவாசனம் நடை பெறுகிறது. இதை த்தொடர்ந்து காலை 9.30 மணியளவில் அம்மனுக்கு 8 ஆயிரம் வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வரலட்சுமி விரத பூஜை நடைபெறுகிறது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.
இதனையடுத்து 26-ந் தேதி சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை மறுபூஜை நடை பெறுகிறது.
இதில் திரளான பெண் பக்தர்கள் பங்கேற்குமாறு நோட்டீஸ் விநியோகித்து கோவில் நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
- மேற்கு ஒன்றிய செயலாளர் பி.எஸ்.சரவணன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடவு செய்து தொடங்கி வைத்தார்.
- தமிழக அரசின் காலை உணவு திட்டத்தில், மாதிரி உணவு தயார் செய்து பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பாப்பிரெட்டிப்பட்டி,
தருமபுரி மாவட்டம், பாப்பி ரெட்டிப்பட்டி , பையர்நத்தம் அரசு மருத்துவ மனை வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர் பி.எஸ்.சரவணன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடவு செய்து தொடங்கி வைத்தார்.
மேலும் தமிழக அரசின் காலை உணவு திட்டத்தில், மாதிரி உணவு தயார் செய்து பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பொதுமக்களுக்கு பல்சுவை உணவுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பையர் நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தா குப்புசாமி, ஒன்றிய குழு உறுப்பினர் கண்ணன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சிவகாமி செல்வம், பள்ளி ஆசிரியர்கள், சுகாதார மைய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- சந்திரயான்-3 திட்டம் கடந்த 40 நாட்களுக்கு முன்பு விண்ணில் ஏவி தொடங்கப்பட்டு நேற்று வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டு உலக அரங்கில் தனது வெற்றியை பதிவு செய்துள்ளது.
- இந்திய நாட்டின் வெற்றியை நாடு முழுவதும் பொது மக்கள் கொண்டாடி வரு கின்றனர்.
தொப்பூர்,
இந்திய நாட்டை வல்லரசு நாடுகள் மத்தியில் மிகப்பெரிய மைல் கல்லை யும் வெற்றி சரித்திரத்தையும் படைக்க வைத்து உலக நாடு களை திரும்பிப் பார்க்கும் வகையில் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிறு வனம் தனது அடுத்த வெற்றி மைக் கல்லை தொடங்கியது.
சந்திரயான் ஒன்று, இரண்டு படிகளை தொட ர்ந்து சந்திரயான்-3 திட்டம் கடந்த 40 நாட்களுக்கு முன்பு விண்ணில் ஏவி தொடங்கப்பட்டு நேற்று வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டு உலக அரங்கில் தனது வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் இந்திய நாட்டின் வெற்றியை நாடு முழுவதும் பொது மக்கள் கொண்டாடி வரு கின்றனர்.
அதன் ஒரு பகுதியாக தருமபுரி மாவட்டம் பெரியாம்பட்டி பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் பிறமொழி பிரிவு சார்பில் மாவட்ட தலைவர் ராஜா தலைமையில் இந்திய நாட்டில் இஸ்ரோவின் வெற்றி சரித்திரத்தை பொது மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடி னர்.
இந்த வெற்றி கொண் டாட்டத்தில் பொது மக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு சந்திர யான்-3 வெற்றியை பதிவு செய்த விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானி களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து அவர்களின் சாதனைகளை பாராட்டி இந்தியாவின் அசோக சின்னத்தை நிலவில் பதிய வைத்ததை கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் பிறமொழி பிரிவு, மாவட்ட தலைவர் ராஜா தலைமையில் கட்சி தொண்டர்கள், ஒன்றிய கிளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.
- பல்லாயிர க்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு தேர் மீது மிளகு, உப்பு, முத்துக்கொட்டை என பல்வேறு சிறு தானியங்களை வீசி தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.
- திருவிழாவை காண வரும் பக்தர்கள் வந்து செல்வதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்க ப்பட்டது.
பாப்பிரெட்டிப்பட்டி,
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள இருளப்பட்டி கிராமத்தில் காணியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற்றது.
இதில் சுற்றுப்பகுதியில் உள்ள பள்ளிப்பட்டி, இருளப்பட்டி, பாப்பம்பாடி, காந்தி நகர், பாப்பி ரெட்டிப்பட்டி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்றனர்.
கோவிலில் சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்து க்காட்டாக இஸ்லாமிய மதத்தை சார்ந்தவரிடம் பூசாரி தாலி எடுத்துக் கொடுத்து, அம்மன் கழுத்தில் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் கரகாட்டம், நையாண்டி மேளம், பல்லக்கு, வான வேடிக்கை என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வருகிறது.
இத்திருவிழாவை ஒட்டி சுற்றுப்பகுதியில் இருந்தும், திருவண்ணாமலை, சேலம், கிருஷ்ணகிரி என பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேர் திருவிழாவை காண இருளப்பட்டியில் குவிந்தனர்.
தேரோட்டமானது அரூர் - சேலம் நெடுஞ்சாலையில் நடைபெறுவதால் போக்குவரத்தை போலீசார் வேறு பாதையில் திருப்பி விட்டனர்.
இதில் பல்லாயிர க்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு தேர் மீது மிளகு, உப்பு, முத்துக்கொட்டை என பல்வேறு சிறு தானியங்களை வீசி தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.
திருவிழாவை காண வரும் பக்தர்கள் வந்து செல்வதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்க ப்பட்டது. அசம்பா விதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
- வளர்ந்த கரும்பு பயிரில் இதனை கட்டுப்படுத்த, பாதிக் கப்பட்ட பயிரினை நீக்க வேண்டும்.
- இறுதியில் வேளாண்மை உதவி அலுவலர் விஜயன் துறை ரீதியான மானிய திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே சோமனஅள்ளி கிராமத்தில் விவசாயிகளுக்கு நிலையான கரும்பு சாகுபடி தொழில்நுட்பம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் வட்டார வேளாண்மை உதவி இயக்கு நர் அருள்மணி விவசாயிகள் கரும்பு சாகுபடி தொழில்நு ட்பத்தை கடைப்பிடித்து உற்பத்தியை பெருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் அங்கக வேளாண், சிறுதானிய ஆண்டு ஆகியன குறித்து எடுத்துரைத்தார்.
உழவன் செயலி விழிப்புணர்வு மற்றும் பிரதம மந்திரி நிதி உதவி திட்டம் குறித்து தருமபுரி வேளாண்மை துணை இயக்குநர் குணசேகரன் விவசாயிகளுக்கு கூறினார்.
பாப்பாரப்பட்டி வேளா ண்மை அறிவியல் நிலை யத்தினர் கூறுகையில் தருமபுரி மாவட் டத்தில் கரும்பில் வேர்புழுவின் தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது.
இது மறுதாம்பு கரும்பில் அதிகம் இருக்கும். இதனை கட்டுப்படுத்த பேவேரியா பேசியனா அல்லது மெட்டா ரைசியம் அனிசோ பிலே, லெக்கானி சிலியம் போன்ற வற்றை ஒரு கிலோ உயிர் கொல்லிக்கு 100 கிலோ மக்கிய தொழு உரத்துடன் கலந்து, நிழலில் வைத்து மூன்று தினங்களுக்கு பிறகு வயலில் இட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.
வளர்ந்த கரும்பு பயிரில் இதனை கட்டுப்படுத்த, பாதிக் கப்பட்ட பயிரினை நீக்க வேண்டும். பயிர் சுழற்சி செய்வதன் மூலம் இதனை கட்டுபடுத்தலாம் எனக் கூறினார்.
கரும்பு பெருக்கு அலுவலர் கதிரவன் நீடித்த நிலையான கரும்பு சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் அலுவலர் கேசவன் நாற்றங் காலில் தரமான நாற்று உற்பத்தி, கரும்பு சாகுபடி தொழில் நுட்பங்கள், கரும்பு நுனி கிள்ளுதல், பராமரிப்பு மேலாண்மை ஆகியன குறித்து எடுத்துரைத்தனர்.
இறுதியில் வேளாண்மை உதவி அலுவலர் விஜயன் துறை ரீதியான மானிய திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.
பயிற்சியில் வேளாண் அலுவலர், கரும்பு உதவி அலுவலர்கள், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் மற்றும் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- விழாவை யொட்டி பால்குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
- சுற்று வட்டா ரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், தா.அய்யம்பட்டி கிராமத்தில் தேசத்து மாரியம்மன் கோவில் திருவிழா மற்றும் கோவிலின் 3-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா கொடியேற்றம் மற்றும் கங்கனம் கட்டும் நிகழ்ச்சி யுடன் தொடங்கியது.
விழாவை யொட்டி பால்குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு கூழ் ஊற்றி சிறப்பு வழிபாடும், அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாவிளக்கு ஊர்வலம் நேற்று நடை பெற்றது. இதில் தேசத்து மாரியம்மன் கோவிலுக்கு ஏராளமான பெண்கள் மேளதாளங்கள் முழங்க மாவிளக்கு எடுத்து ஊர்வ ளமாக சென்றனர்.
இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு வழிபா டுகள் மற்றும் மகா தீபார தனை நடைபெற்றது. இதை த்தொடர்ந்து வேடி யப்பன் கோவிலுக்கும் மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது.
இதில் சுற்று வட்டா ரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இன்று முனியப்பனுக்கு மாவிளக்கு எடுக்கும் ஊர்வ லமும், நாளை மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் எம்.எல்.ஏ. வேலுசாமி மற்றும் விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.
- வருவாய் துறையின் சார்பில் 13 பயனாளிகளுக்கு ரூ.11.02 லட்சம் மதிப்பீட்டில் வீட்டுமனை பட்டா மற்றும் தொழிற்கல்வி உதவி தொகையினை வழங்கப்படடது.
- 20 பயனாளிகளுக்கு ரூ.12.57 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, பொது கணக்குக் குழுத் தலைவர் செல்வ பெருந்தகை வழங்கினார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடு தல் கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, பொது கணக்குக் குழுத் தலைவர் செல்வ பெருந்தகை தலைமையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது கணக்குக் குழு (2023-2024) தணிக்கை பத்திகள் குறித்த மாவட்ட அளவிலான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் குழு உறுப்பி னர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அக்ரி கிருஷ்ண மூர்த்தி, ஈஸ்வரன், உதயசூரியன், சேகர், பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் சாந்தி முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் வருவாய் துறையின் சார்பில் 13 பயனாளிகளுக்கு ரூ.11.02 லட்சம் மதிப்பீட்டில் வீட்டுமனை பட்டா மற்றும் தொழிற்கல்வி உதவி தொகையினையும், மாற்று திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 7 பயனாளிகளுக்கு ரூ.1.55 லட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் ரீடர் மற்றும் உதவித்தொகைகள் என மொத்தம் 20 பயனாளிகளுக்கு ரூ.12.57 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, பொது கணக்குக் குழுத் தலைவர் செல்வ பெருந்தகை வழங்கினார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில், தருமபுரி சட்டமன்ற உறுப்பி னர் எஸ்.பி.வெங்க டேஷ் வரன், பாப்பி ரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, சேலம் சரக காவல் துறை துணை தலைவர் ராஜேஸ்வரி, தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை சார்புச் செயலாளர் பாலசீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) பிரியா, தருமபுரி மாவட்ட த்தில் பணிபுரியும் அனைத்து துறை தலைமை அலுவலர் கள் கலந்து கொண்டனர்.
- போலீஸ் அதிகாரிகள் நடத்திய இந்த விசாரணையில் 102 மனுக்கள் மீதும் உடனடி தீர்வு காணப்பட்டது.
- முகாமில் கொடுக்கப்பட்ட அனைத்து மனுக்களுக்கும் ஒரே நாளில் தீர்வு காணப் பட்டது குறிப்பிடத்தக்கது.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட போலீஸ் துறை சார்பில் வாரந்தோறும் புதன்கிழமை தருமபுரியில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு அலுவலக வளா கத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது.
அதன்படி நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் முன்னிலை வகித்தார்.
இந்த முகாமில் மாவட்டம் முழுவதும் 33 போலீஸ் நிலையங்களில் இருந்து தனித்தனியாக புகார் மனுதாரர்களை நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
நிலத்தகராறு, சொத்து தகராறு, அடிதடி தகராறு, பொது வழி பிரச்சினை, குடும்பத் தகராறு, ஊர் தகராறு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி கொடுக்கப்பட்ட மொத்தம் 102 புகார் மனுக்களும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு அறிவுறுத்தலின் பேரில் போலீஸ் அதிகாரி கள் மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் ஆகியோரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீஸ் அதிகாரிகள் நடத்திய இந்த விசாரணையில் 102 மனுக்கள் மீதும் உடனடி தீர்வு காணப்பட்டது.
முகாமில் கொடுக்கப்பட்ட அனைத்து மனுக்களுக்கும் ஒரே நாளில் தீர்வு காணப் பட்டது குறிப்பிடத்தக்கது.
வாரந்தோறும் நடை பெற்று வரும் இந்த சிறப்பு குறை தீர்க்கும் முகாம்களில் பெரும்பாலான மனுக்கள் குடும்ப பிரச்சினை மற்றும் பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக புகார் மனுக்கள் அதிகம் வருவது குறிப்பிடத்தக்கது.
முகாமில் தருமபுரி டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரங்க சாமி, சரவணன், செந்தில் குமார் உள்ளிட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீஸ் துறை அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- மரப்பலகையில் இருந்த ஆணியின் மீது மிஷின் மோதியதில் தென்ன ரசுவின் கையில் இருந்த கட்டிங் மிஷின் தாறுமாறாக ஓடியதில், அவரது கை மற்றும் கால், உடல்க ளில் வெட்டியது.
- தென்னரசுவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியில் இறந்துவிட்டதாக தெரி வித்தனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் அரூர் சுண்டகப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தென்னரசு (வயது40). கட்டிட தொழிலாளி.
இவர் நேற்று தனது மனைவி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 5 பேருடன் சேர்ந்து மொ ரப்பூர் அருகே உள்ள எம். வெள்ளாளப் பட்டியைச் சேர்ந்த ராஜாமணி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் கட்டிட வேலைக்கு சென்றனர்.
அப்போது தென்னரசு கட்டிடத்திற்காக மரபல கையை கட்டிங் மிஷின் மூலம் அறுத்து கொண்டி ருந்தார்.
அப்போது அந்த மரப்பலகையில் இருந்த ஆணியின் மீது மிஷின் மோதியதில் தென்ன ரசுவின் கையில் இருந்த கட்டிங் மிஷின் தாறுமா றாக ஓடியதில், அவரது கை மற்றும் கால், உடல்க ளில் வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த தென்னரசுவின் உடலில் இருந்து அதிகளவில் ரத்தம் வெளியேறியது.
இதனை கண்ட உடனே உடன் சென்ற தொழிலாளர்கள் பதறினர். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.
அங்கு தென்னரசுவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியில் இறந்துவிட்டதாக தெரி வித்தனர்.
இந்த சம்பவம் குறித்து மொரப்பூர் போலீசார் தகவலறிந்து உடனே சம்பவ இடத்திற்கு வந்து தென்னரசுவின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக அனுப்பி வைத் தனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நேற்று முன்தினம் அதிக பட்சமாக ரூ.636-க்கு விற்ப னையான பட்டுக்கூடு நேற்று கிலோ விற்கு ரூ.26 விலை குறைந்தது.
- மொத்தம் ரூ.9 லட்சத்து 73ஆயிரத்து 582 மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.
தருமபுரி,
தருமபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டு கூடுகள் ஏல அங்கா டிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டு கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.
இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 1 டன் 235 கிலோவாக இருந்த பட்டு கூடுகள் வரத்து நேற்று 1 டன் 748 கிலோவாக அதிகரித்தது. அதே நேரத்தில் பட்டுக்கூடு களுக்கான தேவை குறைந்தது.
நேற்று முன்தினம் அதிக பட்சமாக ரூ.636-க்கு விற்ப னையான பட்டுக்கூடு நேற்று கிலோ விற்கு ரூ.26 விலை குறைந்தது.
நேற்று ஒரு கிலோ பட்டுக் கூடு அதிகபட்சமாக ரூ.610-க்கும், குறைந்த பட்சமாக ரூ.305-க்கும், சராசரியாக ரூ.556.76-க்கும் விற்பனை யானது. மொத்தம் ரூ.9 லட்சத்து 73ஆயிரத்து 582 மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.
- கடந்த 2 நாட்களாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாகவே தொடர்ந்து நீடித்தது.
- ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
ஒகேனக்கல்:
கர்நாடக மாநில நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் இந்த இரு அணைகளில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வினாடிக்கு 17 ஆயிரத்து 960 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
மேலும் காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்தது.
இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாகவே தொடர்ந்து நீடித்தது.
இந்த நிலையில் தற்போது கர்நாடக அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது.
இதனால் ஒகேனக்கல்லுக்கு நேற்று மாலை 11 ஆயிரம் கனஅடியாக வந்த நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி 8,500 கனஅடியாக தண்ணீர் குறைந்து வந்தது.
இருப்பினும் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
இந்த நீர்வரத்தை தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து 9-வது நாளாக நீடித்தது.






