என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • இந்த சிறப்பு பூஜையில் மகாலட்சுமிக்கு இனிப்பு வகைகள், பழங்கள், வளையல்கள் வைக்கப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. .
    • இதனை தொடர்ந்து விரதம் இருந்த பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், ரவிக்கை துணி, மஞ்சள், தாலிக்கயிறு பிரசா தமாக வழங்கப்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரியில் பிரசித்தி பெற்ற கோட்டை வர மகாலட்சுமி சமேத பரவாசு தேவப் பெருமாள் கோவிலில் இன்று வரலட்சுமி நோன்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் வரலட்சுமி நோன்பு விரதம் மேற்கொண்ட பெண்கள் பூஜையில் கலந்து கொண்டனர். இன்று வர மகாலட்சுமி சாமிக்கு பிரம்மாண்ட முறையில் 8000 வளையல்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    இந்த சிறப்பு பூஜையில் மகாலட்சுமிக்கு இனிப்பு வகைகள், பழங்கள், வளையல்கள் வைக்கப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து விரதம் இருந்த பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், ரவிக்கை துணி, மஞ்சள், தாலிக்கயிறு பிரசா தமாக வழங்கப்பட்டது. பின்னர் பக்தர்கள் அனை வருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி தலைமையில் தி.மு.க மாவட்ட துணை செயலாளர் ரேணுகா தேவி எஸ்.பி -யிடம் மனு அளித்தார்.
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர்களை ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியுள்ளனர்.

    தருமபுரி,

    தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி தலைமையில், தி.மு.க துணை செயலாளர் ரேணுகா தேவி எஸ்.பி அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது :-

    கடந்த 20-ம் தேதியில் மதுரையில்  அ.தி.மு.க மாநாடு நடைபெற்றது. இதில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர்களை ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியுள்ளனர். அதனை அ.தி.மு.க.வின் அனைத்து தலைவர்களும் ரசித்தனர். மேலும் இதனை தொலைக்காட்சியில் நேரலையில் ஒளிபரப்பு செய்தார்கள்.

    பொது வெளியில் விமர்சனம் என்ற பெயரில் தனிமனித சுதந்தரத்தை கொச்சைப்படுத்திய, முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மாநாடு நடத்திய நிர்வாகிகள், ஒளிபரப்பிய தொலைக்காட்சி நிர்வாகிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

    உடன் மாவட்ட பொருளாளர் தங்கமணி, மகளிர் அணி நிர்வாகிகள் ஆகியோர் இருந்தனர்.

    • ஆடுகளின் எடை கூடுவதற்கு சேற்று தண்ணீரை கால்நடைகளுக்கு வலு கட்டாயமாக குடிக்க வைக்கின்றனர்.
    • விவசாயிகள் ஆடுகளை வாங்கி சென்ற 4 மணி நேரத்தில் துடிதுடித்து இறந்து போகிறது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, நல்லம்பள்ளி, காரிமங்கலம், பாப்பிரெட்டிபட்டி, அரூர், மொரப்பூர், பாப்பாரப்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் வார சந்தைகள் இயங்கி வருகிறது. இந்த வார சந்தைகளில் விவசாயத்திற்கு தேவையான விவசாய பொருட்கள், மளிகை பொருட்கள் காய்கறி வகைகள், ஆடு, மாடு, கோழி, உள்ளிட்டவைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    பெரும்பாலும் பசு மாடுகள் பால் உற்பத்திக்காகவும் காளை மாடுகள் விவசாய பயன்பாட்டிற்காகவும் அதிகபடியாக விவசாயிகள் வாங்கி செல்கின்றனர். அதேபோல் ஆடுகள் வளர்ப்புக்காகவும் இறைச்சிக்காகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தருமபுரி மாவட்ட வாரச்சந்தைகளுக்கு சேலம், கிருஷ்ணகிரி, ஆந்திரா, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆடுகளை வாங்க வியாபாரிகள் வருகின்றனர்.

    விவசாயிகள் அதிகமாக வளர்ப்பிற்கு செம்மறி ஆடு, வெள்ளாடு, குறியாடு, உள்ளிட்ட ஆடுகளை வாங்கி செல்கின்றனர். அவ்வாறு வாங்கிச் செல்லும் ஆடுகள் 4 மணி நேரத்தில் திடீரென இறப்பதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறும் போது நம் மாவட்டத்தில் முக்கியமாக காரிமங்கலம், நல்லம்பள்ளி, பாப்பாரப்பட்டி ,உள்ளிட்ட பகுதிகளில் வார சந்தைகளை இயங்கி வருகிறது. இங்கு விவசாயிகள் வாங்கிச் செல்லும் ஆடுகள் திடீரென துடிதுடித்து இறந்து போகிறது.

    வியாபாரிகள் விவசாயிகள் இடத்தில் நேரடியாக சென்று ஆடுகளை குறைந்த விலைக்கு வாங்கி வாரச்சந்தைகளில் விற்பனை செய்து வருகின்றனர். அவ்வாறு விற்பனை செய்யும் ஆடுகளை லாப நோக்கத்திற்காக, ஆடுகளின் எடை கூடுவதற்கு சேற்று தண்ணீரை கால்நடைகளுக்கு வலு கட்டாயமாக ஊற்றி வார சந்தைகளுக்கு கொண்டு வருவதால் ஆடுகளின் எடை கூடி புஷ்டியாக தெரிவதால் விவசாயிகளிடத்தில் வியாபாரிகள் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

    இவ்வாறு வாங்கிச் செல்லும் விவசாயிகள் வீட்டுக்கு சென்ற 4 மணி நேரத்தில் துடிதுடித்து இறந்து போகிறது. அதே போல் பாப்பாரப்பட்டி வார சந்தையில் கடந்த வியாழக்கிழமை விவசாயி வாங்கி சென்ற ஆடு 4 மணி நேரத்தில் துடிதுடித்து இறந்து போனதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.

    வியாபாரிகள் தங்களுடைய சொந்த லாப நோக்கத்திற்காக கால்நடைகளை சித்திரவதை செய்து விற்பனை செய்து வருபவர்கள் மீது கால்நடை துறையும், விலங்கின ஆர்வலர்களும் கண்டறிந்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    • நிலக்கடலை செடிகள் தற்பொழுது மழையின்றி காய்ந்து வருகிறது.
    • நிலக்கடலை பயிரிட்டு பாதிப்புக்கு உள்ளாகியுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளான இண்டூர், தொப்பூர், மானியதஹள்ளி, ஏலகிரி, அதியமான் கோட்டை, நார்த்தம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இந்த ஆண்டு வைகாசி பட்டத்தில் மழை குறைந்ததால் நிலக்கடலை சாகுபடி ஆயிரம் ஏக்கருக்கும் குறைவான பரப்பளவில் மட்டுமே பயிரிடப்பட்டுள்ளது.

    இதனால் கடந்த ஆண்டுகளை விட நல்லம்பள்ளி வட்டாரத்தில் பெருமளவில் நிலக்கடலை மானாவரி சாகுபடி ஆனது குறைந்துள்ளது. அதனையும் தாண்டி ஒரு சில விவசாயிகள் பயிரிட்டனர்.

    தற்பொழுது ஆடி மாதத்தில் நல்லம்பள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பருவமழையானது முழுவதும் கைவிட்டதன் காரணமாக, ஆங்காங்கே மானாவாரியாக பயிரிட ப்பட்ட நிலக்கடலை செடிகள் தற்பொழுது மழையின்றி காய்ந்து வருகிறது.

    மேலும் போதிய மழை இன்மையின் காரணமாக எதிர்பார்த்த அளவு சாகு படியும் கிடைக்காது என்பது விவசாயிகள் இடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதனால் நிலக்கடலை பயிரிட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக் கப்படும் சூழல் ஏற்பட் டுள்ளது. இதனால் தமிழக அரசு ஆய்வு மேற்கொண்டு நிலக்கடலை பயிரிட்டு பாதிப்புக்கு உள்ளாகியுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    • 8,500 கன அடியாக இருந்த நீர் வரத்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
    • பயணிகளின் பாதுகாப்பு கருதி 10-வது நாளாக பரிசல் இயக்க தடை நீடித்து வருகிறது.

    ஒகேனக்கல்,

    கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு உபரி நீர் திறந்து விடப்பட்டதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வந்தது .

    இதனைத் தொடர்ந்து கர்நாடகா அணை களில் இருந்து கடந்த இரு தினங்க ளுக்கு முன்பு 10,900 கன அடி உபரிநீர் தமிழகத்திற்கு வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இந்த நீர்வரத்து காரணமாக தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் 8,500 கன அடியாக இருந்த நீர் வரத்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

    இந்த நீர் வரத்து காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்தருவி, சீனி அருவி, மெயின் அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    மேலும் நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகத்தால் தொடர்ந்து பத்தாவது நாளாக பரிசல் இயக்க தடை நீடித்து வருகிறது.

    • உடற்கல்வி இயக்குநர் சேவியர் டெனிஸ் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்தார்.
    • மாணவ, மாணவிகளுக்கான தொடர் ஓட்டம் மற்றும் பேராசிரியர் களுக்கான பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

    தருமபுரி,

    தருமபுரி, தொன் போஸ்கோ கல்லூரியில் 15-ஆம் ஆண்டு விளையாட்டு விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்குக் கல்லூரிச் செயலர் ராபர்ட் ரமேஷ்பாபு தலைமை வகித்தார். முதல்வர் ஆஞ்சலோ ஜோசப் முன்னிலை வகித்து வரவேற்றார்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக சலேசிய குருத்துவ வாழ்வில் வெள்ளி விழா காண்பவரும், இக்கல்லூரியின் முதல் தாளாளரும், பன்னூர், தொன் போஸ்கோ பள்ளியின் இன்றைய தாளாளருமான ஜான்சன் அந்தோணிசாமி கலந்துகொண்டு, கொடியேற்றி விழாவைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

    அவர் பேசுகையில், மாணவ, மாணவியர் கற்கும் கல்வியோடு உடலினை உறுதி செய்யும் விளையாட்டிலும், தம் திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் நல்லதொரு சமூகத்தை உருவாக்க முடியும் என்று அறிவுறுத்தினார்.

    கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் சேவியர் டெனிஸ் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்தார். தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கான தொடர் ஓட்டம் மற்றும் பேராசிரியர் களுக்கான பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

    விழாவில் கல்லூரித் துணை முதல்வர் முனைவர் பாரதி பெர்னாட்ஷா வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை அறிவித்து நிறைவுரையாற்றினார். மாணவ, மாணவியரின் விளையாட்டுத் திறன்களை வளர்க்கும் விதத்தில் அமைந்த இவ்விழாவில் கல்லூரிப் பொருளாளர் அந்தோணி பாப்புராஜ், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

    வணிக நிர்வாகவியல் துறைத் தலைவர் ஆனந்த், கணினி அச்சுக்கலைத் துறைத் தலைவர் ராம்குமார் ஆகியோர் தலைமையில் துறைப் பேராசிரியர்கள் இணைந்து இந்நிகழ்விற்கான ஏற்பாடு களைச் செய்திருந்தனர்.

    மா ணவ, மாணவியருக்கு உடல் உறுதியினையும், உற்சாகத்தையும் அளிப்பதாக இந்நிகழ்வு அமைந்திருந்தது.

    • மாவட்டத்தில் 1 முதல் 5 வகுப்பு வரை படிக்கும் 51 ஆயிரத்து 538 பள்ளி மாணவ, மாணவிகள் பயன் அடைவார்கள்.
    • கலெக்டர் சாந்தி பங்கேற்று பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவை வழங்கி அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.

    தருமபுரி,

    தமிழகத்தில் உள்ள 31 ஆயிரம் அரசு பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்து இன்று நாகப்பட்டிணம் மாவட்டம் திருக்குவளையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது அவர் காணொளி காட்சி மூலம் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இதைத்தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் உள்ள 1013 அரசு பள்ளிகளில் இன்று காலை உணவு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டம் விரிவாக்கம் செய்யபட்டதன் மூலம் மாவட்டத்தில் 1 முதல் 5 வகுப்பு வரை படிக்கும் 51 ஆயிரத்து 538 பள்ளி மாணவ, மாணவிகள் பயன் அடைவார்கள்.

    தருமபுரி நகரில் டி.ஆர்.சுந்தரம் தெருவில் அமைந்துள்ள நகராட்சி டவுன் அரசு தொடங் கப்பள்ளியில் இன்று காலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சாந்தி பங்கேற்று பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவை வழங்கி அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.

    இந்த நிகழ்ச்சியில், தருமபுரி எம்.பி. செந்தில்குமார், எம்.எல்.ஏ. வெங்கடேஸ்வரன், தருமபுரி தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி, மாவட்ட பொருளாளர் தங்கமணி, மாவட்ட கல்வி அலுவலர் குணசேகரன், உணவு பாதுகாப்பு துறை பானுசுஜாதா மற்றும் நகர்மன்ற கவுன்சிலர்கள், அரசு அதிகாரிகள், தி.மு.க. கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோன்று தருமபுரி மாவட்டம்,பாப்பி ரெட்டிப்பட்டி வட்டம், மோளையானூர் அரசு துவக்கப்பள்ளி யில் தமிழக அரசின் காலை உணவு திட்டம் தொடக்க விழா தருமபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன் தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய செயலாளர் ராசு.தமிழ்செல்வன், ஒன்றிய குழு உறுப்பினர் சுந்தரம் தர்மலிங்கம், பள்ளி தலைமை ஆசிரியர் வே.தாமரை செல்வி,ஊராட்சி மன்ற தலைவர் துரை பாண்டியன்,துணை தலைவர் மணி இளங்கோ,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உதய சூரியன்,முன்னாள் ஒன்றிய செயலாளர் பொன்னுசாமி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் சரவணன் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் கவுதமன், கிளை செயலாளர் திருவாசகம், தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் தமிழ் அழகன், சண்முகம், ஆதம், கட்சி நிர்வாகிகள் கல்யாண சுந்தரம், தமிழ், ரமேஷ்,சதிஷ்,முகிலன், மகாராஜன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோன்று காரி மங்கலம், அரூர், பென்னா கரம், நல்லம்பள்ளி, மொரப்பூர், கம்பைநல்லூர் ஆகிய பகுதிகளில் இன்று அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    • கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சண்முகபிரியா வீட்டைவிட்டு வெளியே சென்றார்.
    • தூங்க சென்றவர் மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது மாணவியை காணவில்லை.

    தருமபுரி,

    தருமபுரி கீழ்கண்ணியான்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் முக்கால்நாய்க்க ன்பட்டியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த சிறுமி திடீரென்று மாயமானார்.

    இது குறித்து அவரது தந்தை மதிகோண்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் மாயமான சிறுமியை தேடிவருகின்றனர்.

    இதே போன்று பாப்பி ரெட்டிப்பட்டி ஆவராங்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகள் சண்முகபிரியா (20). இவர் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எட், முதலாமாண்டு படித்து வருகிறார். கடந்த 22-ந் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சண்முகபிரியா வீட்டைவிட்டு வெளியே சென்றார். மாலை அவர் வீடு திரும்பி வரவில்லை. இது குறித்து மாணிக்கம் பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சண்முக பிரியாவை தேடிவருகின்றனர்.

    இதேபோன்று தருமபுரி மாவட்டம் பெரும்பாலை பகுதியைச் சேர்ந்தவர் 17வயது சிறுமி. இவர் தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. படித்து வந்தார். கடந்த 23-ந் தேதி வீட்டில் தூங்க சென்றவர் மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது மாணவியை காணவில்லை.

    இது குறித்து அவரது தந்தை பெரும்பாலை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    • மது பானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக பாலக்கோடு போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
    • 3 பேரையும் கைது செய்த போலீசார் 70 குவாட்டர் மற்றும் பீர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளில் சட்ட விரோதமாக அரசு மது பானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக பாலக்கோடு போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

    அதனை தொடர்ந்து நேற்று மாலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாலக்கோடு அண்ணாநகரில் வீட்டில் வைத்து மதுபானங்களை ராஜாராமன் (வயது 26) என்பவர் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தார்.

    அதேபோல் காவாப்பட்டியை சேர்ந்த மீனா (53), கணபதிகொட்டாய் பகுதியை சேர்ந்த சாவித்திரி (60) ஆகியோர் வீட்டில் வைத்து மது விற்பனை செய்து வந்தனர்.

    உடனடியாக அவர்கள் 3 பேரையும் கைது செய்த பாலக்கோடு போலீசார் அவர்களிடமிருந்து 70 குவாட்டர் மற்றும் பீர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • திருட்டு நடைபெற்ற பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளையும் பார்வையிட்டனர்.
    • திருடிய ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வருபவர் சிவதர்ஷினி (வயது23). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது ஸ்கூட்டரை அரசு ஆஸ்பத்தி ரியில் உள்ள பிரசவ வார்டு அருகே நிறுத்தி விட்டு பணிக்கு சென்றார்.

    பணியை முடித்துவிட்டு மீண்டும் திரும்பி வந்தபோது அவருடைய ஸ்கூட்டர் மாயமாகி இருந்தது. மர்ம நபர்கள் அவருடைய ஸ்கூட்டரை திருடி சென்றிருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிவ தர்ஷினி இது பற்றி தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இது தொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்்பெக்டர் விஜய சங்கர் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    திருட்டு நடைபெற்ற பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளையும் பார்வையிட்டனர்.

    அப்போது வேலூரைச் சேர்ந்த ஷகில் (36), வாணியம் பாடியை சேர்ந்த அஸ்கர் அலி (27) ஆகியோர் அந்த ஸ்கூட்டரை திருடி இருப்பது தெரியவந்தது.

    இது தொடர்பாக போலீசார் இந்த 2 பேரையும் கைது செய்தனர். அவர்கள் திருடிய ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி சிறையில் அடைத்தனர்.

    • கடந்த 16-ந் தேதி வீட்டில் இருந்த மாணவி வெளியே சென்றார். ஆனால், அவர் வீடு திரும்பி வரவில்லை.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடிவரு கின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள தாமரை ஏரி பகுதியைச் சேர்ந்தவர் சிவலிங்கம். இவரது மகள் 19 வயது மாணவி. இவர் தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மாணவியின் தாய் முருகம்மாள் பென்னா கரம் போலீஸ் நிலையத்தில் தன் மகளை அவருடன் படிக்கும் பாலாஜி என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடிவரு கின்றனர்.

    தருமபுரி மாவட்டம் தொப்பூரை அடுத்த ஏலகிரி அருகே உள்ள பாலம்மன் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் மாதையன். இவரது மகள் 19 வயது மாணவி.

    இவர் தருமபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. படித்து வந்தார். கடந்த 16-ந் தேதி வீட்டில் இருந்த மாணவி வெளியே சென்றார். ஆனால், அவர் வீடு திரும்பி வரவில்லை.

    இது குறித்து மீனாவின் தந்தை தொப்பூர் போலீஸ் நிலை யத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடிவரு கின்றனர்.

    • சூப்பர் சீனியர் பிரிவுக்கான வாலிபால் இறுதி போட்டி கோபி நாதம்பட்டி கூட்ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது.
    • வட்டார அளவிலான போட்டியில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம், பாப்பி ரெட்டிப்பட்டி சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வருகிறது.

    இதில் சூப்பர் சீனியர் பிரிவுக்கான வாலிபால் இறுதி போட்டி கோபி நாதம்பட்டி கூட்ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது.

    இதில் கடத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அணியும், ராமியம் பட்டி பள்ளி அணியும் விளை யாடினர்.

    இதில் கடத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வட்டார அளவிலான போட்டியில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.

    ×