என் மலர்
உள்ளூர் செய்திகள்

2 கல்லூரி மாணவிகள் மாயம்
- கடந்த 16-ந் தேதி வீட்டில் இருந்த மாணவி வெளியே சென்றார். ஆனால், அவர் வீடு திரும்பி வரவில்லை.
- போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடிவரு கின்றனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள தாமரை ஏரி பகுதியைச் சேர்ந்தவர் சிவலிங்கம். இவரது மகள் 19 வயது மாணவி. இவர் தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மாணவியின் தாய் முருகம்மாள் பென்னா கரம் போலீஸ் நிலையத்தில் தன் மகளை அவருடன் படிக்கும் பாலாஜி என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடிவரு கின்றனர்.
தருமபுரி மாவட்டம் தொப்பூரை அடுத்த ஏலகிரி அருகே உள்ள பாலம்மன் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் மாதையன். இவரது மகள் 19 வயது மாணவி.
இவர் தருமபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. படித்து வந்தார். கடந்த 16-ந் தேதி வீட்டில் இருந்த மாணவி வெளியே சென்றார். ஆனால், அவர் வீடு திரும்பி வரவில்லை.
இது குறித்து மீனாவின் தந்தை தொப்பூர் போலீஸ் நிலை யத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடிவரு கின்றனர்.






