என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • ஆற்றங்கரையில் அம்மனுக்கு பூஜை செய்த பின் தலையை வெட்டி பெருமாளுக்கு பூஜை செய்தனர்.
    • ஏராளமான பெண்கள் பொது மக்கள் கலந்து கொண்டு ரத்த சோறு சாப்பிட்டு வினோத வழிபாடு செய்தனர்.

    அரூர்:

    தருமபுரி மாவட்டம் பாப்பி ரெட்டிப்பட்டி அருகே உள்ள இருளப்பட்டியில் காணியம்மன் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன் கொடியேற்று விழா, பல்லக்கு உற்சவம், வான வேடிக்கை, சுவாமி திருக்கல்யாணம் மற்றும் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து காணியம்மன் கோவிலில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தேர் திருவிழா நடைபெற்று முடிந்த பின் சில நாட்களுக்கு பிறகு முனி பிடி திருவிழா நடை பெறுவது வழக்கம்.

    இந்நிலையில் நேற்று நடைபெற்ற முனி பிடி திருவிழாவில் இருளப்பட்டி, அதிகாரப்பட்டி, கோழி மேக்கனூர், தோழனூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள வனப்பகுதியை சுற்றி பெரிய காணியம்மனை மேளதாளத்துடன் இசையுடன் தூக்கி வந்து, பெருமாள் கோவில் பகுதியில் உள்ள ஆற்றங்கரையில் அம்மனுக்கு பூஜை செய்த பின் தலையை வெட்டி பெருமாளுக்கு பூஜை செய்தனர்.

    பிறகு வயலில் அம்மனை வைத்து பூஜை செய்த பின்னர் சக்தி அழைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் அருள் வந்து ஆடிய பூசாரி ஆட்டின் தலையை வெட்டினார். பின்னர் அதன் ரத்தத்தை அம்மனுக்கு பூஜை செய்த சோற்றில் பிசைந்துகொடுக்க குழந்தை இல்லாத பெண்கள், தீராத நோய் உள்ள நபர்கள், முனி பிடித்த நபர்கள் அதனை உண்ணும் போது அவர்கள் வேண்டிய வேண்டுதல்கள் உடனே நடக்கும் என ஐதீகமாக நம்பப்படுகிறது.

    இதில் இருளப்பட்டி, புதுப்பட்டி, அதிகாரப்பட்டி, தோழனூர், பாப்பம்பாடி, புதுப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பெண்கள் பொது மக்கள் கலந்து கொண்டு ரத்த சோறு சாப்பிட்டு வினோத வழிபாடு செய்தனர்.

    • வயது வரம்பு அடிப்படையில் U-17 ஒற்றையர் பிரிவில் செங்கொடி முதல் இடம் பெற்றுள்ளார்.
    • வெற்றிபெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    முதலிடமும் பாப்பிரெட்டிப்பட்டி சரக அளவில் நடைபெற்று வரும் விளையாட்டு போட்டிகளில் ஸ்டான்லி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் கேரம் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர்.

    பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் வயது வரம்பு அடிப்படையில் U-17 ஒற்றையர் பிரிவில் செங்கொடி முதலிடமும், கவிசரண் இரண்டாமிடமும், U-14 இரட்டையர் பிரிவில் கவிசரண் மற்றும் சரன்பாபு முதலிடமும்பிடித்து வெற்றி பெற்றுள்ளனர். U-17 ஒற்றையர் பிரிவில் தாஸ் இரண்டாமிடமும், U-19 ஒற்றையர் பிரிவில் சச்சி ன்தாசன் முதலிட மும்பிடித்து வெற்றி பெற்று ள்ளனர்.

    வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்களையும் பள்ளியின் தாளாளர் முருகேசன் , செயலாளர் பிரு ஆனந்த் பிரகாஷ் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    மேலும் இப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 10 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று வினாடிக்கு 8 ஆயிரம் கன அடியாக சரிந்தது.
    • சுற்றுலா பயணிகள் 10 நாட்களுக்கு பிறகு பரிசலில் சவாரி செய்து மகிழ்ந்தனர்.

    தருமபுரி, 

    கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவு அதிகரித்ததால் காவிரி ஆற்றில் தமிழக எல்லை யான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து கடந்த சில நாட்களாக தொடர்ந்து 10 ஆயிரம் கனஅடியாகவே இருந்தது.

    தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அளவு குறைந்ததால், கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு குறைந்தது. இதனால் ஒகேனக்கல்லில் நேற்று 10 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 8 ஆயிரம் கன அடியாக சரிந்தது.

    கடந்த சில நாட்களாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து 10 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருந்ததால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி தொடர்ந்து 10-வது நாளாக பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்து இருந்தது.இந்த நிலையில் இன்று காலை நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடியாக சரிந்ததால், ஒகேனக்கல்லில் இன்று முதல் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.இதைத்தொடர்ந்து ஒகேனக்கல்லுக்கு இன்று சுற்றுலாவுக்கு வந்த சுற்றுலா பயணிகள் 10 நாட்களுக்கு பிறகு பரிசலில் சவாரி செய்து மகிழ்ந்தனர்.

    • காமாட்சியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றது.
    • சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்

    தருமபுரி,

    வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு தருமபுரியில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

    தருமபுரியில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை முதல் இரவு வரை பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தர்மபுரி நகரில் வரலாற்று சிறப்புமிக்க கோட்டை கல்யாண காமாட்சியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த வழிபாட்டில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதேபோல் தருமபுரி குமாரசாமிப்பேட்டை மாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு அலங்கார பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். தருமபுரி நெசவாளர் நகரில் உள்ள ஓம் சக்தி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதேபோல் தருமபுரி கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    தருமபுரி குமாரசாமிப்பேட்டை உழவர் தெரு மகாமாரியம்மன் கோவில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், பாரதிபுரம் மாரியம்மன் கோவில், அன்னசாகரம் சக்தி மாரியம்மன் கோவில், மதிகோன்பாளையம் மகாசக்தி மாரியம்மன் கோவில், வட்டார வளர்ச்சி காலனி முத்து மாரியம்மன் கோவில், கடைவீதி புதூர் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    தருமபுரி அரசு மருத்துவ மனை எதிரில் உள்ள பச்சையம்மன் கோவில் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.பின்னர் அம்மனுக்கு அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    • குப்பைகள் அனைத்தும் இவரின் வீட்டு அருகே கொட்டப்பட்டு எரிக்கப் பட்டு வருகிறது.
    • பலமுறை மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்ப டாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

    கடத்தூர்,  

    தருமபுரி மாவட்டம், கடத் தூர் ஊராட்சி ஒன்றியத் திற்கு உட்பட்ட சில்லார அல்லி கிராம பஞ்சாயத்து பகுதி யில் வசித்து வருப வர் இந்தி ராணி (வயது 42). இவரது கணவர் சரவணன். அரசு போக்கு வரத்து கழகத் தில் டிரை வராக இருந்து இறந்த நிலையில் தனது இரண்டு மகன்கள் ஆனந்த், ஆதித்யா ஆகியோருடன் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் சில்லார அள்ளி கிராம பஞ்சாயத்து பகுதியில் இருந்து சேகரிக் கப்படும் குப்பைகள் அனைத்தும் இவரின் வீட்டு அருகே கொட்டப்பட்டு எரிக்கப் பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் குடியிருக்க முடியாத சூழ்நிலை யாலும், புகையால் ஏற்பட்டு வரும் சுவாச பாதிப்பால் பாதிக்கப் பட்டு உள்ளார்.

    குடியிருக்க முடியாத சூழ்நிலையில் கடந்த 3 ஆண்டு களாக தருமபுரி கலெக்டர் அலுவலகம் கடத்தூர் பி.டி.ஓ ஆபீஸ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலமுறை மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்ப டாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால் விதவைப் பெண் இந்தி ராணி, அவரது மகனுடன் கடத்தூர் பி.டி.ஓ ஆபிசில் திடீர் தர்ணா வில் ஈடுபட்ட தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    மதிய சாப்பாடு ஒட்டலில் வாங்கி வந்து பீ.டி.ஒ ஆபிசில் சாப்பிட்டதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. தன்னு டைய வீட்டு அருகில் கொட்டப் பட்டுள்ள குப்பை களை அகற்றும் வரை பீ.டி.ஓ அலுவலகத்தில் தங்கி இருப்பேன் என கூறி தர்ணாவில் ஈடுபட்டார்.

    இரவு சுமார் 7 மணி ஆன நிலையில் காவல் துறையினர் வந்து தர்ணாவில் அமர்ந்திருந்த பெண்ணிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு உடனடி யாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். மகனுடன் 5 மணி நேரம் பீ.டி.ஓ அலுவலகத்தில் அமர்ந்து விதவைபெண் தர்ணாவில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • பள்ளி கல்லூரிக்கு செல்வதற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதில்லை.
    • 9 மணி முதல் 9.30 மணி வரை நகரப் பேருந்துகள் குறைவாக இயக்குவதால் மாணவிகள் சிரமம் அடைகின்றனர்.

     தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில், தருமபுரி நகரத்தை ஓட்டி அரசு கலை கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், ஐடிஐ, அரசு பள்ளிகள் உள்ளது .

    இந்த பள்ளி, கல்லூரி களில் தருமபுரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் தினந்தோறும் தருமபுரி பேருந்து நிலையத்திற்கு வந்து அங்கிருந்து மீண்டும் நகர பேருந்துகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். இதில் தருமபுரியில் இருந்து 18 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காரிமங்கலம் அரசு மகளிர் கலைக் கல்லூரிக்கு 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் தருமபுரி நகர பேருந்து நிலையத்திலிருந்து கல்லூரிக்கு சென்று வருகின்றனர்.

    இந்த நிலையில் காலையில் 9 மணி முதல் 9.30 மணி வரை நகரப் பேருந்துகள் குறைவாக இயக்குவதால் மாணவிகள் கல்லூரி நேரத்திற்கு சரியாக செல்ல வேண்டும் என்பதற்காக பேருந்துகளில் உயிரை பணயம் வைத்து முண்டியடித்து ஓடி பேருந்தில் ஏறுகின்றனர். அதேபோல் கல்லூரி முடிந்து மாலை வீட்டிற்கு திரும்பும் போதும் பேருந்துகளை பிடிக்க மணி கணக்கில் காத்திருந்து பேருந்து பயணம் செய்யும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது.

    இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது:-

    அரசு மகளிருக்கு இலவச பேருந்துகளை இயக்கி வருகிறது. அந்த வகையில் மகளிர் கல்லூரிக்கு 5 பேருந்துகளை இயக்கினால் பெரும் பணம் இழப்பீடு ஏற்படுகிறது . இதனால் அரசு போக்குவரத்து கழகம் பேருந்துகளை குறைவாக இயக்கி வருகிறது . அதேபோல் நகர பேருந்து நிலையத்திலிருந்து தருமபுரி அரசு கலைக் கல்லூரி, மாட்டிலாம் பட்டியில் உள்ள சட்டக் கல்லூரி, செட்டி கரை அரசு பொறியியல் கல்லூரி, பைசுஅள்ளியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி, கடகத்தூர் பகுதியில் உள்ள தொழில்பயிற்சி கல்லூரி, செட்டி கரையில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளி, உள்ளிட்ட பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் இங்கிருந்து நகரப் பேருந்தில் ஏறி பள்ளி கல்லூரிக்கு செல்வதற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதில்லை.

    இதனால் பொது மக்கள் செல்லும் பேருந்து களிலேயே ஆபத்தான நிலையில் கல்லூரி மாணவர்கள் படிகளில் தொங்கி பயணம் செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகள் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்லூரி மாணவிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

    • மல்பரி சாகுபடி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு 400.50 ஏக்கர் மல்பரி பயிரிடப்பட்டது.
    • 63 பட்டு விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.1050 வீதம் ரூ. 10.13 லட்சம் மானியத்தொகை வழங்கப்பட்டது.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி, தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நடை பெற்றது. அப்போது அவர் விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    தருமபுரி மாவட்டத்தில் ஜனவரி முதல் ஆகஸ்ட்-2023 திங்கள் வரையிலான காலத்திற்கான இயல்பான மழையளவு 366.7 மி.மீ ஆகும். தற்பொழுது வரை இந்த ஆண்டு 380.9 மி.மீ மழை பெய்துள்ளது. தருமபுரி மாவட்டத்தில் வேளாண்மை உழவர் நலத் துறையில் 2023-2024 ஆம் ஆண்டிற்கு 1.72,270 ஹெக்டேர் பரப்பளவில் நெல், சிறுதானியங்கள். பயிறு வகைகள் உள்ளிட்ட உணவு தானிய பயிர்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள், பருத்தி, கரும்பு சாகுபடி பரப்பாக இலக்கு நிர்ணயிக்கப் பட்டதில் தற்பொழுது வரை 40,909.8 ஹெக்டேர் பரப்பு சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

    அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டு உள்ளதால், விவசாயிகள் தேவையான விதைகளை பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், தருமபுரி மாவட்–டத்தில் பட்டு வளர்ச்சித்துறையின் மூலம் 721 ஏக்கர் மல்பரி சாகுபடி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு 400.50 ஏக்கர் மல்பரி பயிரிடப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட பல்வேறு துறை அலு–வலர்களுடன் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும். இக்கூட்டத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம், மீன்வளத்துறை, கால்நடை பாரமரிப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த கோரிக்கைகள் குறித்து விவ சாயிகளிடம் இருந்து பெறப் பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அறிவுறுத் தப்பட்டு உள்ளது.

    இக்கூட்டத்தில் பட்டு வளர்ச்சிதுறையின் மூலம் மாநில திட்டத்தின்கீழ் 96.50 ஏக்கர் மல்பெரி நடவு மேற்கொண்டுள்ள 63 பட்டு விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.1050 வீதம் ரூ. 10.13 லட்சம் மானியத்தொகை யினையும். பட்டு புழுவளர்ப்பு மனை அமைத்து புழுவளர்ப்பு மேற்கொண்டு வரும் 5 பட்டு விவசாயிகளுக்கு தலா ரூ.1.20 லட்சம் வீதம் மானியத்தொகை ரூ.6 லட்சத்தையும் மாவட்ட , கலெக்டர் சாந்தி வழங்கினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) பிரியா, வேளாண்மை இணை இயக்குநர் விஜயா, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் சாமிநாதன், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் மாது. தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் பாத்திமா உட்பட தொடர்புடைய அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவ–சாயிகள் கலந்து கொண்டனர்.

    • கணபதி ஹோமம், வர லட்சுமி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது.
    • பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல், தாலி கயிறு வழங்கப்பட்டது

    தருமபுரி,  

    தருமபுரி குமாரசாமி பேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவி லில் 17-ம் ஆண்டு வரலட்சுமி பூஜை மற்றும் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு மாலை 5 மணிக்கு கணபதி பூஜை, கணபதி ஹோமம், வர லட்சுமி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது.

    மாலை 6 மணிக்கு பூர்ணா ஹாதி, இரவு 8 மணிக்கு வரலட்சுமி பூஜை, 9 மணிக்கு மேல் 108 குத்துவிளக்கு பூஜையும் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பெண்கள் குத்துவிளக்கு பூஜையில் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இரவு 9.30 மணிக்கு அம்ம னுக்கு மகா தீபாராதனையும், அதைத்தொடர்ந்து குத்து விளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல், தாலி கயிறு வழங்கப்பட்டது . விழாவிற்கான ஏற்பாடு களை குமாரசாமி பேட்டை கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் மகளிர் அணியினர் ஏற்பாடு செய்திருந்தனர். 

    • தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 6159 தேர்வர்களில் 1313 பெண்கள் ஆவர்.
    • புளூடூத்துடன் இணைக்கப் பயன்படும் உபகரணங்கள், ஸ்மார்ட் வாட்ச், சாதாரண கை கடிகாரம் மற்றும் கால்குலேட்டர் போன்றவற்றை எடுத்துவரக் கூடாது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வருகின்ற 26.08.2023 அன்று மாநிலம் முழுதும் நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது. காலையில் முதன்மை எழுத்துத் தேர்வும், பிற்பகலில் தமிழ் தாள் தேர்வும் இரண்டு கட்டங்களாக நடத்த தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் திட்டமிட்டு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 6159 தேர்வர்களில் 1313 பெண்கள் ஆவர். அதியமான்கோட்டை செந்தில் பப்ளிக் பள்ளி 2100 பேரும் , விஜய் வித்யாலயா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 1600 பேரும், விஜய் வித்யாலயா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 600 பேரும், பச்சமுத்து மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 546 பேரும், விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில்,1313 பெண்களும் தேர்வு எழுதவுள்ளனர்.

    இத்தேர்வுக்கு வரும் நபர்கள் செல்போன், புளூடூத்துடன் இணைக்கப் பயன்படும் உபகரணங்கள், ஸ்மார்ட் வாட்ச், சாதா ரண கை கடிகாரம் மற்றும் கால்குலேட்டர் போன்றவற்றை எடுத்துவரக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தேர்வர்கள் எடுத்துவரும் உடைமைகளுக்கு அவரவரே பொறுப்பேற்க வேண்டும். தேர்வெழுத வரும் நபர்கள் நுழைவுச்சீட்டு, அடையாள அட்டை மற்றும் பேனா ஆகியவைகளை மட்டும் உடன் எடுத்துவர வேண்டும்.

    சான்றிதழ்களை எக்கா ரணத்தைக் கொண்டும் தேர்வு மையத்திற்கு எடுத்து வரக் கூடாது. காலை 08.30 மணிக்குள்ளும், பிற்பகல் தேர்விற்கு உணவு இடைவேளை முடித்து 2 மணிக்குள்ளும் தேர்வு மையத்திற்குள் வர வேண்டும்.

    விதிமீறலில் ஈடுபடும் தேர்வர்கள் மீது தகுந்த விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இரு சக்கர வாகனங்களில் வரும் தேர்வர்கள் கட்டா யம் மோட்டார் வாகன விதிகளுக்குட்பட்டு, விதியில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை கடை பிடித்து வாகனத்தில் தேர்வு மையத்திற்கு வர வேண்டும்.

    தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்ட பின்பு எந்தக் காரணத்தைக் கொண் டும் தகுந்த உத்தரவின்றி வெளியே செல்லக் கூடாது. தேர்வுக்கு ஆஜராகும் அனைத்து தேர்வர்களும் தகுந்த முறையில் கொ ரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இடைத் தரகர்களை நம்ப வேண்டாம். இவ் வாறு அறிக்கையில் கூறப்பட் டுள்ளது.

    • பா.ஜ.க கொடியேற்று விழா ஒன்றிய தலைவர் சிவலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
    • மாவட்ட தலைவர் பாஸ்கர் எம்.எல்.ஏ கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வடக்கு ஒன்றியம் மாதேஹள்ளி மற்றும் ஓ.ஜிஹள்ளி ஆகிய ஊர்களில் பா.ஜ.க கொடியேற்று விழா ஒன்றிய தலைவர் சிவலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

    விழாவில் மாவட்ட தலைவர் பாஸ்கர் எம்.எல்.ஏ கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார்.நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலா ளர்கள் ஐஸ்வர்யம் முருகன், வெங்கட்ராஜ் மாவட்ட துணை தலைவர் சோபன் மற்றும் மாவட்ட செயலாளர் தெய்வமணி குமார் மற்றும் தொழிற்பிரிவு கிருஷ்ணன், தருமபுரி வடக்கு ஒன்றிய தலைவர் நாகராஜ் , நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய தலைவர் மாதன், ஒன்றிய பொதுச் செயலாளர் ஆறுமுகம், மாவட்ட ஓபிசி அணி செயலாளர் கல்யாண சுந்தரம், கூட்டுறவு பிரிவு செயலாளர் மணி, ஒன்றிய பொருளாளர் பச்சையப்பன், ஒன்றிய செயலாளர்கள் முருகன் ,சந்தோஷ், திருப்பதி, ஓ பி சி அணி ஒன்றிய தலைவர் டி.பி முருகன், மாவட்ட ஒன்றிய அணி மற்றும் அணிபிரிவு நிர்வாகிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள், மற்றும் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை ஒன்றிய இளைஞர் அணி தலைவர் ராம கிருஷ்ணன் மற்றும் கிளை தலைவர்கள் மாதேஅள்ளி தினேஷ் குமார், சம்பத், மாரியப்பன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • விழாவுக்கு அறக்கட்டளை தலைவர் மோகன்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் ஸ்ரீதர் வரவேற்றார்.
    • நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    தருமபுரி,

    தருமபுரி நகரம், குமாரசாமிப்பேட்டையில் பாரிமுனை நண்பர்கள் மற்றும் வாரியார் அன்ன தான அறக்கட்டளை சார்பில் கிருபானந்த வாரியார் சாமி பிறந்தநாள் விழா சிவசுப்பிரமணியசாமி கோவில் பின்புறம் தட்சணாமூர்த்தி தெருவில் நடைபெற்றது.

    விழாவுக்கு அறக்கட்டளை தலைவர் மோகன்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் ஸ்ரீதர் வரவேற்றார். ஊர் பிரமுகர்கள் குமார், டி.ஜி. மணி, சண்முகம், மோகன், மணிவண்ணன், சதாசிவம், இளங்கோவன், நகராட்சி கவுன்சிலர்கள் பாண்டியன், முருகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவையொட்டி கிருபானந்த வாரியார் உருவப்படத்திற்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.

    நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். விழாவில் அறங்காவலர் குழு தலைவர் சேகரன், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி மணிவண்ணன், நிர்வாகிகள் உதயபானு, தவமணி, சேகர், பாபு, சோமசுந்தரம், துரை, பழனிசாமி, பூங்குன்றம், கண்ணன், பசுபதி மற்றும் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    • ரூ.6.30 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
    • வன்னியர் சங்க கொடியினை பெரியசாமி ஏற்றி வைத்தார்.

    தொப்பூர், 

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் பாகலஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட விநாயகபுரம் பகுதியில் நல்லம்பள்ளி மத்திய ஒன்றிய பா.ம.க சார்பில் பா.ம.க கொடியினை தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் ஏற்றி வைத்தார். வன்னியர் சங்க கொடியினை பெரியசாமி ஏற்றி வைத்தார்.

    அதனை தொடர்ந்து விநாயகபுரம் பகுதியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.6.30 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டில் பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி, ஊராட்சி மன்ற தலைவர் முருகன், மாவட்ட துணை தலைவர் முத்துவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயகுமார், பொருளாளர் உத்திரகுமாரி, பசுமை தாயகம் சுப்பிரமணி, ராஜேந்திரன், வார்டு உறுப்பினர், பெரியண்ணன், கிளை தலைவர் மணி, கிளை பொருளாளர் முனிராஜ் மற்றும் பா.ம.க நிர்வாகிகள் பிரேம்குமார், வெற்றிவேல் மற்றும் பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

    ×