என் மலர்
தர்மபுரி
- பின்னால் வந்த இருசக்கர வாகனம் முருகேசன் மீது மோதியது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை மேற்கொண்டு வருகின்ற னர்.
பென்னாகரம்,
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே பருவ தன அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட காட்டுநாயக்கன அள்ளி பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது50). கட்டிட மேஸ்திரியான இவர் தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்காக பருவதன அள்ளி பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த இருசக்கர வாகனம் முருகேசன் மீது மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த முருகேசனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பென்னா கரம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து பென்னா கரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை மேற்கொண்டு வருகின்ற னர்.
- ஊட்டமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின் கம்பிகள்தாழ்வாக அமைக்கப் பட்டுள்ளது.
- மின் வாரிய துறையினர் தாழ் வாக உள்ள மின் கம்பிகளை உயர்த்தி அமைக்கப்பட வேண்டும்.
ஒகேனக்கல்,
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் சுற்றுலா தலத்திற்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வேன், கார், பஸ் இதுபோன்ற வாகனங்களில் அதிக அளவில் வருகின்றனர். இதனால் எப்போதும் ஒகேனக்கல் பரபரப்பாக காணப்படும்.
இது மட்டும் இல்லாமல் ஒகேனக்கல்லில் இருந்து அஞ்செட்டி வழியாக ஓசூர், பெங்களூர் செல்லக்கூடிய சாலையில் ஏராளமான வாகனங்கள் வருகின்றன.
குறிப்பாக ஒகேனக்கல், ஊட்டமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின் கம்பிகள்தாழ்வாக அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் இவ்வழியாக செல்லக்கூடிய சரக்கு வாகனங்கள்,பேருந்து, வைக்கோல் ஏற்றி செல்ல கூடிய லாரிகள் உரசும் அளவிற்கு இந்த மின் கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது.
பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பே விபத்தை தடுக்கும் வகையில் மின் வாரிய துறையினர் தாழ்வாக உள்ள மின் கம்பிகளை உயர்த்தி அமைக்கப்பட வேண்டும்.
மேலும் இரவு நேரங்களில் மின்வெட்டு அதிக அளவில் தினந்தோறும் ஏற்படுகிறது. இரவு நேரங்களில் மின் ஊழியர்கள் இருப்பதில்லை. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரவு நேரங்களிலும் ஊழியர்கள் பணியில் இருக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் சிமெண்ட் மற்றும் கம்பி பெயர்ந்து கீழே விழுந்தது.
- தொட்டியின் மேல்பகுதி, தூண், ஆபத்தான நிலையில் இருக்கிறது.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியத்திற்க்குட்பட்ட ஜெர்தலாவ் ஊராட்சியை சேர்ந்த மாக்கன் கொட்டாய் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைகளுக்காக கடந்த 2015-ம் ஆண்டு ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. கடந்த 8 ஆண்டுகளாக போதிய பராமரிப்பு இல்லாததால் நீர்த்தேக்க தொட்டியின் மேல்பகுதி, தூண், மற்றும் பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இருக்கிறது.
இது குறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. இந்நிலையில் நேற்று காலை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் சிமெண்ட் மற்றும் கம்பி பெயர்ந்து கீழே விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாரும் அருகில் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
எனவே மாவட்ட நிர்வாகம் பெரும் விபத்து ஏற்படும் முன்னர், பழமையான மேல் நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றி விட்டு புதிய நீர்த்தேக்க தொட்டியை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 1,316 பெண்கள் என மொத்தம் 61,59 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
- மையங்களை காவலர் பயிற்சி கல்லூரி டி.ஐ.ஜி. ஆனி விஜயா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தருமபுரி,
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் மற்றும் தீயணைப்பு மீட்பு பணிகள் படை நிலைய அலுவலர் ஆகிய பதவிகளுக்கான எழுத்து தேர்வு நேற்று நடைபெற்றது.
தருமபுரி மாவட்டத்தில் இந்த தேர்வை எழுத 4,843 ஆண்கள், 1,316 பெண்கள் என மொத்தம் 61,59 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
இவர்களில் 4,140 ஆண்களும், 1,096 பெண்களும் என மொத்தம் 5,236 பேர் தேர்வை எழுதினார்கள். இந்த தேர்வை எழுத விண்ணப்பித்தவர்களில் 703 ஆண்கள், 220 பெண்கள் என மொத்தம் 923 பேர் தேர்வை எழுதவில்லை.
இந்த தேர்விற்காக தருமபுரி மாவட்டத்தில் 5 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. நேற்று காலை முதன்மை எழுத்து தேர்வும், பிற்பகலில் தமிழ்த்தாள் தேர்வும் 2 கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்வு நடைபெற்ற மையங்களை காவலர் பயிற்சி கல்லூரி டி.ஐ.ஜி. ஆனி விஜயா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதேபோல் தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் மற்றும் போலீஸ் அதிகாரிகள் தேர்வு நடைபெற்ற ஒவ்வொரு மையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
- மது குடிக்கும் பழக்கம் இருப்பதால், அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வருவார்.
- வீட்டின் அருகே உள்ள சொந்தமான கிணற்றில் தவறி விழுந்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள கே.ஜெட்டிஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி. இவரது மகன் ராமன் (வயது29). கூலித்தொழிலாளியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதால், அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வருவார்.
இந்த நிலையில் நேற்று மது குடித்துவிட்டு ராமன் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த அவர், வண்டியை நிறுத்திவிட்டு தள்ளாடியபடி நடந்து சென்றார்.
அப்போது அவர் வீட்டின் அருகே உள்ள அவருக்கு சொந்தமான கிணற்றில் தவறி விழுந்தார். இதில் நீரில் மூழ்கி ராமன் பரிதாபமாக உயிரிழந்தார். வீட்டிற்கு வண்டியில் வந்த மகனை காணவில்லை என்று பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடிபார்த்தபோது, கிணற்றில் அவர் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அப்போது அவர்கள் ராமனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இந்த சம்பவம் குறித்து பழனி பாப்பாரப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பாலக்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் ராமனின் உடலை கிணற்றில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மின்விளக்குகள் விற்பனை செய்யும் கடையில் வேலை பார்த்து வந்தார்.
- பரிசோதித்த டாக்டர்கள் ராஜமாணிக்கம் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தருமபுரி,
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள சிலுவன்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது52). எலக்ட்ரீசியனான இவர் சேலத்தில் உள்ள அலங்கார மின்விளக்குகள் விற்பனை செய்யும் கடையில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ஏ.பள்ளிப்பட்டியை அடுத்த கவுண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரது வீட்டில் அலங்கார மின்விளக்குகள் பொருந்தும் பணிக்காக நேற்று ராஜமாணிக்கம் வந்தார். அப்போது அவர் கட்டிடத்தின் மேலே ஏறி மின்விளக்குகள் பொருத்தும் போது திடீரென்று தவறி கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயமடைந்த ராஜமாணிக்கத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ராஜமாணிக்கம் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த ஏ.பள்ளிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராஜமாணிக்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராம்பர்வேஸ்–குமாருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
- இரவு திடீ ரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராயக்கோட்டை, ஆக.27-
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம்பர்வேஸ்–குமார் (வயது21). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்–டையை அடுத்த தொட்டி நாயக்கன்அள்ளி கிராமத்தில் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் ராம்பர்வேஸ்–குமாருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவரது மனைவியை பீகாரில் மாநிலத்திலேயே விட்டுவிட்டு ராம்பர்வேஸ்–குமார் மட்டும் தொட்டி நாயக்கனஅள்ளிக்கு வந்தார்.
இந்த நிலையில் அவர் அடிக்கடி தனது செல்–போனில் பேசி குடும்பத்–தினருடன் வந்ததாக தெரிகிறது. அப்போது ராம்பர்வேஸ்–குமாருக்கு, அவரது குடும்–பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட–தாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த காணப்பட்ட அவர் நேற்று இரவு திடீ ரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த ராயக்கோட்டை போலீசார் உடனே சமபவ இடத்திற்கு வந்து ராம்பர்வேஸ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரி–சோதனைக்காக ராயக்–கோட்டை அரசு ஆஸ்பத்–திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசா–ரணை நடத்தி வருகின்றனர்.
- சாலை ஓரங்களில் மரங்க ளை நடவு செய்து கடந்த 15 வருடங்களாக பராமரித்து வந்தனர்.
- மரங்களை மர்ம நபர்கள் நள்ளிரவில் வெட்டி சாய்த்து உள்ளனர்.
தொப்பூர்,
தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலை தொம்பர காம்பட்டி பகுதியில் நெடு ஞ்சாலைத்துறை துறையினர் சாலை ஓரங்களில் மரங்க ளை நடவு செய்து கடந்த 15 வருடங்களாக பராமரித்து வந்தனர். இந்த மரங்களை மர்ம நபர்கள் நள்ளிரவில் வெட்டி சாய்த்து உள்ளனர்.தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் இது போன்ற மரங்கள் அழிப்பு தொடர்கதையாக மாறி வருகிறது.
இது போன்ற செயல் களில் ஈடுபடும் மர்ம நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப் படாததே காரணம் என்று அப்பகுதி பொது மக்கள் குற்றம் சாட்டி வைக்கின்றனர். மேலும் சாலை பரா மரிப்பு குழுவினர் ஆய்வு செய்து மரங்களை வெட்டிய மர்ம நபர்கள் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுப்ப தாக தெரிவித்துள்ளனர்.
- விபத்தில் ஆட்டோ டிரைவர் தீனாவுக்கு காலில் முறிவு ஏற்பட்டது.
- கோவில் முன்பு உள்ள பள்ளத்தில் கண் இமைக்கும் நேரத்தில் கவிழ்ந்தது.
தொப்பூர்,
தருமபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் பகுதியில் இன்று காலை ராட்சத இரும்பு உருளை ஏற்றி சென்ற லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் படுகாயம் அடைந்தார். அதன் பின்னால் வந்த கண்டெய்னர் லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த இரு விபத்துகளால் பெங்களூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது.
அப்போது காவல்துறையினரும் சாலை பராமரிப்பு குழுவினரும் போக்குவரத்தை சீர் செய்தனர். பின்னர் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நார்த்தம்பட்டி பகுதியை சேர்ந்த தீனா (வயது24) என்பவர் தன்னுடைய ஆட்டோவில் வெள்ளக்கல் பகுதியில் இருந்து சாலையின் எதிர் திசையில் தொப்பூரை நோக்கி சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது தொப்பூர் ஆஞ்சநேயர் கோவில் முன்பு வந்த போது சேலத்தில் இருந்து தருமபுரி நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அதிக அளவில் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்க வலது புறமாக திடீரென ஆட்டோவை திருப்பிய பொழுது கோவில் முன்பு உள்ள பள்ளத்தில் கண் இமைக்கும் நேரத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் தீனாவுக்கு காலில் முறிவு ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
- கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
- ரூ. 2100 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்–தில் உள்ள ஓசூர் சிப்காட், சூளகிரி, மத்திகிரி, பாகலூர் ஆகிய பகுதிகளில் போதை தடுப்பு போலீசார் சோதனை செய்தனர்.அப்போது கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1000 மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று வேப்ப–னபள்ளி, போச்சம்பள்ளி, மத்தூர், ஊத்தங்கரையில் அந்தந்த பகுதிகளில் உள்ள போலீசார் ரோந்து சென்ற–போது தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டை விற்பனை செய்த 5 பேர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 2100 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
இதே போன்று ஓசூர், சூளகிரி ஆகிய பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.இதேபோன்று பாகலூர் போலீசார் ரோந்து சென்றபோது, போயப்பன்–குட்டை பகுதியில் பணம் வைத்து சூதாடிய 3 பேரை கைது செய்தனர். அவர்க–ளிடம் இருந்து ரூ.350-யை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- அழகிய வர்ணம் தீட்டும் பணியில் தொழி லாளர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.
- ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்கப்படும்.
தருமபுரி,
விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் 18-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொது மக்கள் விநாயகர் சிலை களை பொது இடத்தில் வைத்து வழிபாடு நடத்தி நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். சுமார் 5 அடி முதல் 10 அடி வரை விதவிதமான விநாயகர் சிலைகள் வழி பாட்டுக்கு வைக்கப்படும். இதைத்தொடர்ந்து விநாயகர் சிலை தயாரிப்பு பணி பல்வேறு இடங்களில் தீவிரமாக நடந்து வருகிறது.
இதில் தருமபுரி மாவட்டத்தில் பழைய தருமபுரி, சவூளூர் உள்ளிட்ட பகுதிகளில், வடமாநில தொழிலாளர்கள் தங்கி, விநாயகர் சிலை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வரு கின்றனர். இங்கு விநாயகர், கல்வெட்டு விநாயகர், ராஜ விநாயகர், தர்பார் விநாய கர், செண்டு வாகன விநாய கர், மூல வாகன விநாயகர், ஆதியோகி சிவன் விநாயகர், லட்சுமி விநாயகர், நந்தி விநாயகர், உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலை சுமார் 10 அடி உயரம் வரை வித வித மாக உருவாக்கப்படுகிறது. பெரும்பாலான சிலை களை வடிவமைக்கும் பணி கள் முடிந்து உள்ளன. அதில் அழகிய வர்ணம் தீட்டும் பணியில் தொழி லாளர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். இவை பார்வைக்காக தருமபுரி-பாலக்கோடு செல்லும் சாலை அருகே வைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து விநாயகர் சிலை தயாரிப்பில் ஈடு பட்டுள்ள ராஜஸ்தான் மாநி லத்தை சேர்ந்த அர்ஜுன் என்பவர் கூறும்போது, விநாயகர் சிலைகளை, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாதவாறு எளிதில் தண்ணீரில் கரையக்கூடிய வகையில் தயாரித்து வருகிறோம். இதற்காக சாக்பீஸ் மாவு, தேங்காய் நார், பேப்பர்கூழ், ஆகியவை பயன்படுத்தப்படு கிறது. 2 அடி முதல் 10 அடி வரை விநாயகர் சிலைகள் பல மாடல்களில் தயாரிக்கப் பட்டு வருகின்றன.
இவை ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்கப்படும். இன்னும் சில நாட்களில் சிலைகளில் வர்ணம் பூசும் வேலைகள் முடிந்து விற்பனைக்கு தயாராகி விடும். தற்போது 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலை கள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன. சிலைகள் வாங்க பல கிராமங்களில் இருந்து முன்கூட்டியே அட்வான்ஸ் கொடுத்து புக்கிங் செய்து உள்ளனர். மேலும் கிருஷ்ணகிரி, ஓசூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட பகுதி களில் இருந்து ஏராளமான ஆர்டர்கள் வந்துள்ளன.
கடந்த ஆண்டுக்கு முன்பு கொரோனா வைரஸ் நோய் தாக்குதலால் தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டு குடும்பம் நடத்துவதற்கு வழியின்றி தவித்து வந்தோம். தற்போது கட்டுப்பாடுகள் இன்றி சகஜ நிலையில் உள்ளதால் இந்த வருடம் விநாயகர் சிலை விற்பனை அமோகமாக இருக்கும் என தெரிவித்தார்.
- தொங்கு பாலத்தில் நின்று அருவி களில் தண்ணீர் விழுவதை யும் பார்த்து ரசித்தனர்.
- மீன் சமையலை ருசித்து சாப்பிட்டு விடு முறை நாளை கழித்தனர்.
ஒகேனக்கல்,
கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் கே.ஆர்.எஸ், கபினி அணை களுக்கு நீர்வரத்து அதி கரித்தது. இதனால் கடந்த சில தினங்களாக அந்த அணை களில் இருந்து 17 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விட்டு இருந்தது. இதனால் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் லுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
தற்போது கர்நாடகா காவிரி நீர்பிடிப்பு பகுதி களில் பெய்த மழையின் அளவு குறைந்துள்ளது. இதனால் அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து சரிந்து காணப்பட்டது. இதனால் நேற்று மாலை 7 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி 5 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்துள்ளது. ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவி களில் தண்ணீர் ஆர்ப்ப ரித்து கொட்டியது.
இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஒகேனக்கல் சுற்றுலா தளத் திற்கு காலை முதலே சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. அவ்வாறு வரும் சுற்று லா பயணிகள் தொங்கு பாலத்தில் நின்று அருவி களில் தண்ணீர் விழுவதை யும் பார்த்து ரசித்தனர்.
பரிசல் இயக்க அனுமதி வழங்கியதால் சுற்றுலா பயணிகள் பரிசலில் உற்சா கமாக பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை கண்டு ரசித்தனர். மேலும் அவர்கள் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, சினி அருவி ஆகிய அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் இங்கு பிர சித்தி பெற்ற மீன் சமையலை ருசித்து சாப்பிட்டு விடு முறை நாளை கழித்தனர். இந்த நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால் தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டு லுவில் மத்திய நீர்வ ளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.






