என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விடுமுறைதினத்தையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்
    X

    உற்சாகமாக பரிசல் சவாரி செய்யும் சுற்றுலா பயணிகளை படத்தில் காணலாம்.

    விடுமுறைதினத்தையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

    • தொங்கு பாலத்தில் நின்று அருவி களில் தண்ணீர் விழுவதை யும் பார்த்து ரசித்தனர்.
    • மீன் சமையலை ருசித்து சாப்பிட்டு விடு முறை நாளை கழித்தனர்.

    ஒகேனக்கல்,

    கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் கே.ஆர்.எஸ், கபினி அணை களுக்கு நீர்வரத்து அதி கரித்தது. இதனால் கடந்த சில தினங்களாக அந்த அணை களில் இருந்து 17 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விட்டு இருந்தது. இதனால் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் லுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

    தற்போது கர்நாடகா காவிரி நீர்பிடிப்பு பகுதி களில் பெய்த மழையின் அளவு குறைந்துள்ளது. இதனால் அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து சரிந்து காணப்பட்டது. இதனால் நேற்று மாலை 7 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி 5 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்துள்ளது. ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவி களில் தண்ணீர் ஆர்ப்ப ரித்து கொட்டியது.

    இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஒகேனக்கல் சுற்றுலா தளத் திற்கு காலை முதலே சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. அவ்வாறு வரும் சுற்று லா பயணிகள் தொங்கு பாலத்தில் நின்று அருவி களில் தண்ணீர் விழுவதை யும் பார்த்து ரசித்தனர்.

    பரிசல் இயக்க அனுமதி வழங்கியதால் சுற்றுலா பயணிகள் பரிசலில் உற்சா கமாக பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை கண்டு ரசித்தனர். மேலும் அவர்கள் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, சினி அருவி ஆகிய அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் இங்கு பிர சித்தி பெற்ற மீன் சமையலை ருசித்து சாப்பிட்டு விடு முறை நாளை கழித்தனர். இந்த நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால் தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டு லுவில் மத்திய நீர்வ ளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    Next Story
    ×