என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 470 மனுக்கள் வரப்பெற்றன.
    • கோரிக்கை மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அதற்கான தீர்வினை விரைந்து காண வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு கலெக்டர் சாந்தி உத்தரவிட்டார்.

    தருமபுரி, 

    தருமபுரி கலெக்டர் அலு வலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சாந்தி தலைமையில் நடை பெற்றது.

    கூட்டத்தில் பொது மக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம், பட்டா வேண்டுதல், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலை வாய்ப்பு, இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் ஓய்வூதிய தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 470 மனுக்கள் வரப்பெற்றன.

    பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமெனவும், பொதுமக்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அதற்கான தீர்வினை விரைந்து காண வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு கலெக்டர் சாந்தி உத்தரவிட்டார்.

    கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) நசீர்இக்பால், வட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ராஜசேகரன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பி.எஸ்.கண்ணன், உதவிதிட்ட அலுவலர் (வீடுகள்) தமிழரசன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் விரைந்து செயல் படுத்த தேவையான நிதியை தமிழக அரசு ஒதுக்கி விரைந்து தொழிற் சாலைகள் அமைத்து இளை ஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்க வேண்டும்.
    • தருமபுரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி செயல்படும் பகுதிகளில் போதை பொருட்கள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளன.

    தருமபுரி,

    தருமபுரி மேற்கு மாவட்ட பாட்டாளி இளைஞர் சங்க பொதுக்குழு கூட்டம் ஒட்டப்பட்டியில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு தருமபுரி சட்டமன்ற உறுப்பினரும், பாட்டாளி மக்கள் கட்சியின் தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளருமான

    எஸ்.பி. வெங்கடேஷ்வரன் கலந்து கொண்டு கூட்டத்தின் நோக்கம் குறித்து சிறப்புரையாற்றினார்.

    இந்த கூட்டத்தில் இளைஞர் சங்க ஒன்றிய தலைவர்கள், செயலாளர்கள், பாட்டாளி மக்கள் கட்சியின் ஒன்றிய தலைவர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் விரைந்து செயல்படுத்த தேவையான நிதியை தமிழக அரசு ஒதுக்கி விரைந்து தொழிற் சாலைகள் அமைத்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்க வேண்டும்.

    தருமபுரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி செயல்படும் பகுதிகளில் போதை பொருட்கள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளன. மாணவர்கள், இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமை யாகும் சூழ்நிலை உள்ளதால் போதை பொருட்களை தடுக்கின்ற வகையில் உடனடியாக மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    காவிரி ஆறு தருமபுரி மாவட்டத்தின் வழியாக தான் முதலில் நுழைகிறது. காவிரி உபரிநீரை தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து ஏரி, குளங்களும் நிரப்புகின்ற வகையில் காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்தி வேலைத்தேடி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் சென்று பல லட்சம் இளைஞர்கள் கூலித் தொழில் செய்வதை தடுக்கின்ற வகையிலும், தருமபுரி மாவட்ட விவசாய பெருமக்கள் விவசாய தொழிலை மேம் படுத்துக் கின்ற வகையிலும் இத் திட்டத்தை உடனடியாக செயல் படுத்த வேண்டும்.

    தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் பாட்டாளி இளைஞர் சங்கத்தை மேம்படுத்து கின்ற வகையில், இளைஞர்களை ஒருங்கி ணைத்து கிராம கூட்டங்கள் நடத்த வேண்டும் என தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    • நேற்று இரவு 9 மணிக்கு மேல் தருமபுரி மாவட்டத்தில் திடீர் மழை பொழிய துவங்கியது.
    • கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது.

    தருமபுரி,

    வட தமிழக கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ் நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடு துறை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய 13 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

    இதனால் நேற்று காலை முதல் கடும் வெப்பம் நிலவிய நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு மேல் தருமபுரி மாவட்டத்தில் திடீர் மழை பொழிய துவங்கியது. இரவு முழுவதும் சாரல் மழை பெய்துள்ளது. இதனால் கடும் குளிர் நிலவியது. முதியவர்கள் வீட்டில் தூங்க முடியாமல் அவதிப் பட்டனர். இந்த மழையால் சாலையில் ஆங்காங்கே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    தருமபுரி, காரிமங்கலம், அரூர், பாப்பி ரெட்டிப்பட்டி, பென்னாகரம், இருமத்தூர், பாலக்கோடு உள்பட மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது.இதே போல் கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது.

    தருமபுரியில் 25 மில்லி மீட்டர் மழையும், பாலக் கோடு 22.4 மில்லி மீட்டர், பென்னாகரம் 9 மில்லி மீட்டர், ஒகேனக்கல் 5 மில்லி மீட்டர், அரூர் 5 மில்லி மீட்டர், என மாவட்டத்தில் மொத்தம் 66.4 மில்லி மீட்டரும் சராசரி 7.38 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையால் பொது மக்களும், விவசாயி களும் மகிழ்ச்சி அடைந்துள் ளனர்.

    • நாளை தேசிய விளையாட்டு தின போட்டிகள் நடைபெற உள்ளது
    • தருமபுரியில் உள்ள மாவட்ட விளை யாட்டு அரங்கில் தேசிய விளையாட்டு தின போட்டிகள் நாளை நடைபெற உள்ளது.

    தருமபுரி,

    தருமபுரியில் தேசிய விளையாட்டு தின போட்டிகள் நாளை நடக்கிறது. இது குறித்து தருமபுரி மாவட்ட விளையாட்டு இளைஞர் நலன் அலுவலர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    தமிழகம் முழுவதும் தேசிய விளையாட்டு தினத்தையொட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) தேசிய விளையாட்டு தின போட்டிகள் நடைபெற உள்ளது.

    அதன்படி தருமபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் தேசிய விளையாட்டு தின போட்டி கள் நாளை நடைபெற உள்ளது.

    19 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவி களுக்கு கைப்பந்து மற்றும் 100 மீட்டர் தடகள போட்டிகளும், 25 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கூடைப் பந்து மற்றும் 100 மீட்டர் தடகள போட்டிகளும், 45 வயதிற்குட் பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு 1கி.மீ நடைபோட்டிகளும் நடைபெறும்.

    19 வயதிற்குட் பட்டவர்கள் பிரிவில் 01.01.2005-க்கு பின்னர் பிறந்தவர்களும், 25 வயதிற்குட்பட்ட வர்கள் பிரிவில் 01.01.1999-க்கு பின்னர் பிறந்தவர்களும், 45 வயதிற்குட்பட்டவர்கள் பிரிவில் 01.01.1979-க்கு பின்னர் பிறந்தவர்களும் கலந்து கொள்ளலாம்.

    போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் நாளை காலை 8 மணிக்கு உரிய ஆவணங்களுடன் தருமபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • தி.மு.க பூத்கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் காரிமங்கலம் கட்சி அலுவலகத்தில் நடந்தது.
    • கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் வக்கீல் மணி வரவேற்று பேசினார்

      காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பேரூர், கிழக்கு மத்திய, மேற்கு ஒன்றிய தி.மு.க பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் காரிமங்கலம் கட்சி அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் வக்கீல் மணி வரவேற்று பேசினார். கூட்டத் திற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் தலைமை வகித்தார்.

    நகர செயலாளர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் கோபால் அடிலம் அன்பழகன், தலைமை செயற்குழு உறுப்பினர்
     பி.சி.ஆர். மனோகரன் உட்பட பலர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பழனி யப்பன் பங்கேற்று பூத் கமிட்டி நிர்வாகிகளின் பணி கள், செயல்பாடுகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் அணி கண்ண பெருமாள், மாவட்ட இளைஞர் அணி ஹரி பிரசாத், மாவட்ட மாணவ ரணி துணை அமைப்பாளர் பிரபு, ஒன்றிய துணை செயலா ளர்கள் சண்முகம், தங்கதுரை, நகர துணை செயலாளர் ரமேஷ், மாவட்ட பிரதி நிதிகள் முத்து செல்வம், ரமேஷ் மற்றும் மாவட்ட நகர ஒன்றிய அணிகளின் அமைப்பாளர்கள் நிர்வாகிகள் வாக்குச்சாவடி முகவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • போலீசார் சுற்றி வளைத்து அவர்களை பிடித்து விசாரித்தனர்.
    • 52 சீட்டுகள் கொண்ட சீட்டு கட்டு ஒன்றையும், 200 ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

    ஏரியூர்,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஏரியூர் அருகே உள்ள சாம்பள்ளி கிராமத்தில் போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது காட்டுக் கொட்டாய் சுடுகாடு பின்புறம் அமர்ந்து சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது தெரியவந்தது.

    உடனே அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் சிடும்பட்டி பகுதியை சேர்ந்த சின்ன கண்ணு (60), நல்லதம்பி (70) மற்றும் சாம்பள்ளி காலனியை சேர்ந்த ரஜினி (40) ஆகிய 3 பேர் என்பது தெரியவந்தது.

    இது தொடர்பாக ஏரியூர் போலீசார் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 52 சீட்டுகள் கொண்ட சீட்டு கட்டு ஒன்றையும், 200 ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

    • இரவு நேரங் களில் சாலையில் போதிய வெளிச்சம் இல்லாததால் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் விபத்து ஏற்படும் அபாயம் ஏற் பட்டுள்ளது.
    • சாலை பகுதியில் உள்ள குழிகளை சீரமைக்க வேண்டும்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே வாழைத்தோட்டம் -மண்டு நெடுஞ் சாலையில் ஆங்–காங்கேய பள்ளங்கள் ஏற்பட்டு அடிக்கடி விபத்து–கள் நடக்கிறது.

    இந்த நெடுஞ் சாலையில் வாழைத் தோட்டம், பெல்ரம்பட்டி, சீங்காடு, அமானி மல்லாபுரம், மாரண்ட ஹள்ளி, தேன் கனிக் கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதி களுக்கு இந்த வழியாக பேருந்துகள் மற்றும் கனரக வானங்கள் இயக்கப் பட்டு வருகிறது.

    இந்த சாலையில் முனியப்பன் கோவில், மண்டு, வாழைத் தோட்டம் நெடுஞ்சாலை வரை சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு அடிக்கடி இருசக்கர வாகனம் விபத்து ஏற்பட்டு வருகிறது.

    மேலும் இரவு நேரங் களில் சாலையில் போதிய வெளிச்சம் இல்லாததால் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் விபத்து ஏற்படும் அபாயம் ஏற் பட்டுள்ளது.

    எனவே மாவட்ட நிர்வாகம் துரித நட வடிக்கை மேற்கொண்டு நெடுஞ் சாலை பகுதியில் உள்ள குழிகளை சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • கிராமத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றால் ஆற்றில் குறுக்கே கயிறுகளை கட்டி அபாய–கரமாக நிலையில் கடக்க வேண்டிய சூழல் உள்ளது.
    • 2 தாலுகாவிற்கும் இடையில் எல்ைல பகுதி–யில் சிக்கிக்கொண்டு எந்த ஒரு அடிப்படை வசதிகளும் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட எர்ரபையன–அள்ளி அருகே மூலப்பள்ளத்து கொட்டாய் கிராமம் அமைந்துள்ளது.

    இங்கு சுமார் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலனோர் கூலித் தொழில் செய்து பிழைத்து வருகின்றனர். இவர்கள் வேலைக்கு செல்லவும் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கும் அவர்கள் கிராமத்தில் அருகே உள்ள ஆற்றை கடந்து செல்ல வேண்டி உள்ளது.

    மழை காலங்களில் இந்த ஆற்றில் அளவு கடந்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். அப்போது அப்பகுதி பொதுமக்கள் ஆற்றை கடக்க முடியாமல் தவித்து வரும் நிலையும் பல ஆண்டுகளாகவே நீடித்து வருகிறது. மற்ற மாதங்களில் வறட்சியே நிலவி வருகிறது.

    இருப்பினும் மழை பெய்யும் மூன்று மாதங்கள் இவர்கள் கிராமத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றால் ஆற்றில் குறுக்கே கயிறுகளை கட்டி அபாய–கரமாக நிலையில் கடக்க வேண்டிய சூழல் உள்ளது.

    மேலும் ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என பலமுறை மாவட்ட நிர்வா–கத்திற்கு மனு அளித்துள்–ளனர். இருப்பினும் இவர்கள் எர்ரபையன–அள்ளி ஊராட்சியை சேர்ந்த வருவாய் கிராமத்–திற்கு உட்பட்டவர்கள் இவர்களுக்கான வாக்கு–உரிமை மற்றும் ரேசன் பொருட்கள் உள்ளிட்டவை பெறுவதற்கு மஞ்சநாயக்கன அள்ளி ஊராட்சியை நம்பி உள்ளனர்.

    அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி மன்ற நிர்வாகத்–திடம் ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட கோரிக்கை விடுத்தால், அதற்கு, அவர் ஓட்டு போட மட்டும் எங்கள் ஊருக்கு வாருங்கள் உங்களுக்கு அடிப்படை வசதி வேண்டுமென்றால் உங்கள் ஊர் தலைவரிடம் பெற்றுக் கொள்ளுங்கள் என அலட்சியமாக பதில ளிப்பதாக அப்பகுதி கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

    தற்போது இவர்கள் வசிக்கும் பகுதி நல்லம்பள்ளி தாலுகாவிற்கும், வாக்க–ளிக்கும் பகுதி பென்னாகரம் தாலுகா–விற்கும் உட்பட்டு உள்ள–தால் 2 தாலுகாவிற்கும் இடையில் எல்ைல பகுதி–யில் சிக்கிக்கொண்டு எந்த ஒரு அடிப்படை வசதிகளும் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

    இது நாள் வரை அரசின் மூலம் சாலை வசதி, குடிநீர் வசதி, பாலம் உள்ளிட்ட எந்தவொரு அடிப்படை வசதிகளும் இவர்களுக்கு கிடைக்கவில்லை. 2 தாலு–காவையும் விட்டு விட்டு மாவட்ட நிர்வாகத்–திற்கு சென்றாலும் இவர்க–ளுக்கான தீர்வு இதனால் வரை கிடைக்கப் பெற வில்லை. ஓட்டு கேட்கும் போது மட்டும் ஆற்றை கடந்து வந்து கேட்கின்றனர். பாலம் கட்ட சொன்னால் திரும்பி கூட பார்ப்பதில்லை என வேதனையுடன் அப்ப–குதி மக்கள் தெரிவிக்–கின்றனர்.

    எனவே, மழைக்–காலத்துக்கு முன்பாகவே தங்கள் பகுதியில் பிரதான கோரிக்கையாக உள்ள ஆற்றின் குறுக்கே ஒரு பாலம் கட்டி கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • விளை பொருட்களை சந்தைப்படுத்து வதற்காக வும் இந்த தார் சாலையை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.
    • அப்பகுதி யில் வசிக்கும் இரு வருக்கிடையே வழித்தடம் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் சாமி செட்டிப்பட்டி ஊராட்சியில் உச்சி மரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் இருந்து பொன் நகர் பகுதிக்கு ஒரு கிலோ மீட்டர் தார் சாலை அமைந்துள்ளது.

    இப்பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் அதனை சுற்றி விவசாய நிலங்கள் அமைந்துள்ளது. இப்பகுதி பொது மக்களுக்கான பிரதான போக்கு வரத்துக் காகவும் காய்கறிகள் மற்றும் விளை பொருட்களை சந்தைப்படுத்து வதற்காக வும் இந்த தார் சாலையை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் அப்பகுதி யில் வசிக்கும் இரு வருக்கிடையே வழித்தடம் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்படுத்தி வந்த தார் சாலையை இரண்டு இடங்க ளில் கற்கள் மற்றும் மரங் களை வைத்து தடுப்புகளை ஏற்படுத்தி வாகனங்கள் பொதுமக்கள் செல்லாத வாறு தடையை ஏற்படுத்தி உள்ளனர்.

    இதனால் இன்று காலை முதல் அவ்வழியாக எந்த ஒரு வாகனங்களும், பொது மக்களும் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

    • நேற்று இரவு காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்துள்ளது.
    • சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து பார்த்தனர்.

    ஒகேனக்கல்,

    கர்நாடகா மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்தது. இதனால் அங்குள்ள கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. அந்த இரு அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு சற்று குறைக்கப்பட்டுள்ளது.

    தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று மாலை 5 ஆயிரம் கன அடியாக குறைந்து வந்தது. நேற்று இரவு காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்துள்ளது.

    இதனால் இன்றுகாலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து 6 ஆயிரம் கனஅடி யாக தண்ணீர் அதிகரித்து வந்தது.

    மெயின் அருவி, சினி பால்ஸ், ஐவர்பாணி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து பார்த்தனர்.

    மேலும்அவர்கள் தொங்கு பாலத்தில் நின்ற வாறு அருவிகளில் விழும் தண்ணீரை பார்த்து ரசித்த னர். இளைஞர்கள் மசாஜ் செய்து அருவி மற்றும் ஆற்றில் குளித்து மகிழ்ந்த னர். பின்னர் மீன்சாப்பாடு வாங்கி சாப்பிட்டு சென்ற னர்.

    கர்நாடகா- தமிழக எல்லை யான பிலி குண்டு லுவில் மத்திய நீர்வளத் துறை அதி காரிகள் தொடர்ந்து காவிரி ஆற்றில் வரும் நீரினை அளவீடு செய்து கண் காணித்து வரு கின்றனர்.

    • 18-ந் தேதி தனது மனைவி–யுடன் மாமனார் வீட்டிற்கு கோபாலகிருஷ்ணன் சென்றார்.
    • வீட்டிற்கு திரும்பி சென்ற போது ஆலமரத்துப்பட்டி என்ற இடத்தில் வண்டி திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி கீழே விழுந்தது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் நாகாளம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் கோபால–கிருஷ்ணன் (வயது23).

    கட்டிட மேஸ்திரி

    கட்டிட மேஸ்திரியான இவருக்கும், நாகதாசம்–பட்டியைச் சேர்ந்த ஜோதி என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி தனது மனைவி–யுடன் மாமனார் வீட்டிற்கு கோபாலகிருஷ்ணன் சென்றார். அப்போது அவர் மாமனார் வீட்டில் இருந்து பாப்பாரப்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    வண்டியை உறவினர் பழனி என்பவர் ஓட்டி சென்றார். பின்னால் கோபாலகிருஷ்ணன் அமர்ந்து இருந்தார்.

    அவர்கள் மீண்டும் வீட்டிற்கு திரும்பி சென்ற போது ஆலமரத்துப்பட்டி என்ற இடத்தில் வண்டி திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி கீழே விழுந்தது. இதில் கோபால கிருஷ்ணனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனே அவரை அக்கம்–பக்கத்தினர் மீட்டு சிகிச்–சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ–மனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கோபால–கிருஷ்ணன் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து பாப்பாரப்–பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணமான 3 மாதங்களில் புதுமாப்–பிள்ளை விபத்தில் இறந்த சம்பவம் உறவினர்களி–டையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி–யுள்ளது.

    • பின்னால் வந்த இருசக்கர வாகனம் முருகேசன் மீது மோதியது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை மேற்கொண்டு வருகின்ற னர்.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே பருவ தன அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட காட்டுநாயக்கன அள்ளி பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது50). கட்டிட மேஸ்திரியான இவர் தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்காக பருவதன அள்ளி பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த இருசக்கர வாகனம் முருகேசன் மீது மோதியது.

    இந்த விபத்தில் பலத்த காயமடைந்த முருகேசனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பென்னா கரம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து பென்னா கரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை மேற்கொண்டு வருகின்ற னர்.

    ×