என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து  6 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
    X

    பரிசலில் பயணம் செய்யும் சுற்றுலா பயணிகளை படத்தில் காணலாம்.

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 6 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

    • நேற்று இரவு காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்துள்ளது.
    • சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து பார்த்தனர்.

    ஒகேனக்கல்,

    கர்நாடகா மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்தது. இதனால் அங்குள்ள கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. அந்த இரு அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு சற்று குறைக்கப்பட்டுள்ளது.

    தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று மாலை 5 ஆயிரம் கன அடியாக குறைந்து வந்தது. நேற்று இரவு காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்துள்ளது.

    இதனால் இன்றுகாலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து 6 ஆயிரம் கனஅடி யாக தண்ணீர் அதிகரித்து வந்தது.

    மெயின் அருவி, சினி பால்ஸ், ஐவர்பாணி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து பார்த்தனர்.

    மேலும்அவர்கள் தொங்கு பாலத்தில் நின்ற வாறு அருவிகளில் விழும் தண்ணீரை பார்த்து ரசித்த னர். இளைஞர்கள் மசாஜ் செய்து அருவி மற்றும் ஆற்றில் குளித்து மகிழ்ந்த னர். பின்னர் மீன்சாப்பாடு வாங்கி சாப்பிட்டு சென்ற னர்.

    கர்நாடகா- தமிழக எல்லை யான பிலி குண்டு லுவில் மத்திய நீர்வளத் துறை அதி காரிகள் தொடர்ந்து காவிரி ஆற்றில் வரும் நீரினை அளவீடு செய்து கண் காணித்து வரு கின்றனர்.

    Next Story
    ×