என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆற்றை கடந்து செல்லும் மூலப்பள்ளத்து கொட்டாடய் பகுதி பொதுமக்களை படத்தில் காணலாம்.
அடிப்படை வசதி இல்லாமல் அவதி: ஊர் எல்லை பகுதியில் சிக்கி தவிக்கும் மூலப்பள்ளத்து கொட்டாய் கிராம மக்கள்
- கிராமத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றால் ஆற்றில் குறுக்கே கயிறுகளை கட்டி அபாய–கரமாக நிலையில் கடக்க வேண்டிய சூழல் உள்ளது.
- 2 தாலுகாவிற்கும் இடையில் எல்ைல பகுதி–யில் சிக்கிக்கொண்டு எந்த ஒரு அடிப்படை வசதிகளும் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட எர்ரபையன–அள்ளி அருகே மூலப்பள்ளத்து கொட்டாய் கிராமம் அமைந்துள்ளது.
இங்கு சுமார் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலனோர் கூலித் தொழில் செய்து பிழைத்து வருகின்றனர். இவர்கள் வேலைக்கு செல்லவும் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கும் அவர்கள் கிராமத்தில் அருகே உள்ள ஆற்றை கடந்து செல்ல வேண்டி உள்ளது.
மழை காலங்களில் இந்த ஆற்றில் அளவு கடந்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். அப்போது அப்பகுதி பொதுமக்கள் ஆற்றை கடக்க முடியாமல் தவித்து வரும் நிலையும் பல ஆண்டுகளாகவே நீடித்து வருகிறது. மற்ற மாதங்களில் வறட்சியே நிலவி வருகிறது.
இருப்பினும் மழை பெய்யும் மூன்று மாதங்கள் இவர்கள் கிராமத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றால் ஆற்றில் குறுக்கே கயிறுகளை கட்டி அபாய–கரமாக நிலையில் கடக்க வேண்டிய சூழல் உள்ளது.
மேலும் ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என பலமுறை மாவட்ட நிர்வா–கத்திற்கு மனு அளித்துள்–ளனர். இருப்பினும் இவர்கள் எர்ரபையன–அள்ளி ஊராட்சியை சேர்ந்த வருவாய் கிராமத்–திற்கு உட்பட்டவர்கள் இவர்களுக்கான வாக்கு–உரிமை மற்றும் ரேசன் பொருட்கள் உள்ளிட்டவை பெறுவதற்கு மஞ்சநாயக்கன அள்ளி ஊராட்சியை நம்பி உள்ளனர்.
அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி மன்ற நிர்வாகத்–திடம் ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட கோரிக்கை விடுத்தால், அதற்கு, அவர் ஓட்டு போட மட்டும் எங்கள் ஊருக்கு வாருங்கள் உங்களுக்கு அடிப்படை வசதி வேண்டுமென்றால் உங்கள் ஊர் தலைவரிடம் பெற்றுக் கொள்ளுங்கள் என அலட்சியமாக பதில ளிப்பதாக அப்பகுதி கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது இவர்கள் வசிக்கும் பகுதி நல்லம்பள்ளி தாலுகாவிற்கும், வாக்க–ளிக்கும் பகுதி பென்னாகரம் தாலுகா–விற்கும் உட்பட்டு உள்ள–தால் 2 தாலுகாவிற்கும் இடையில் எல்ைல பகுதி–யில் சிக்கிக்கொண்டு எந்த ஒரு அடிப்படை வசதிகளும் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
இது நாள் வரை அரசின் மூலம் சாலை வசதி, குடிநீர் வசதி, பாலம் உள்ளிட்ட எந்தவொரு அடிப்படை வசதிகளும் இவர்களுக்கு கிடைக்கவில்லை. 2 தாலு–காவையும் விட்டு விட்டு மாவட்ட நிர்வாகத்–திற்கு சென்றாலும் இவர்க–ளுக்கான தீர்வு இதனால் வரை கிடைக்கப் பெற வில்லை. ஓட்டு கேட்கும் போது மட்டும் ஆற்றை கடந்து வந்து கேட்கின்றனர். பாலம் கட்ட சொன்னால் திரும்பி கூட பார்ப்பதில்லை என வேதனையுடன் அப்ப–குதி மக்கள் தெரிவிக்–கின்றனர்.
எனவே, மழைக்–காலத்துக்கு முன்பாகவே தங்கள் பகுதியில் பிரதான கோரிக்கையாக உள்ள ஆற்றின் குறுக்கே ஒரு பாலம் கட்டி கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.






