search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி, கிருஷ்ணகிரியில் சாரல் மழை
    X

    தருமபுரி, கிருஷ்ணகிரியில் சாரல் மழை

    • நேற்று இரவு 9 மணிக்கு மேல் தருமபுரி மாவட்டத்தில் திடீர் மழை பொழிய துவங்கியது.
    • கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது.

    தருமபுரி,

    வட தமிழக கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ் நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடு துறை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய 13 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

    இதனால் நேற்று காலை முதல் கடும் வெப்பம் நிலவிய நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு மேல் தருமபுரி மாவட்டத்தில் திடீர் மழை பொழிய துவங்கியது. இரவு முழுவதும் சாரல் மழை பெய்துள்ளது. இதனால் கடும் குளிர் நிலவியது. முதியவர்கள் வீட்டில் தூங்க முடியாமல் அவதிப் பட்டனர். இந்த மழையால் சாலையில் ஆங்காங்கே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    தருமபுரி, காரிமங்கலம், அரூர், பாப்பி ரெட்டிப்பட்டி, பென்னாகரம், இருமத்தூர், பாலக்கோடு உள்பட மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது.இதே போல் கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது.

    தருமபுரியில் 25 மில்லி மீட்டர் மழையும், பாலக் கோடு 22.4 மில்லி மீட்டர், பென்னாகரம் 9 மில்லி மீட்டர், ஒகேனக்கல் 5 மில்லி மீட்டர், அரூர் 5 மில்லி மீட்டர், என மாவட்டத்தில் மொத்தம் 66.4 மில்லி மீட்டரும் சராசரி 7.38 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையால் பொது மக்களும், விவசாயி களும் மகிழ்ச்சி அடைந்துள் ளனர்.

    Next Story
    ×