என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரியில் விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரம்
    X

    விற்பனைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள்.

    தருமபுரியில் விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரம்

    • அழகிய வர்ணம் தீட்டும் பணியில் தொழி லாளர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.
    • ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்கப்படும்.

    தருமபுரி,

    விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் 18-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொது மக்கள் விநாயகர் சிலை களை பொது இடத்தில் வைத்து வழிபாடு நடத்தி நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். சுமார் 5 அடி முதல் 10 அடி வரை விதவிதமான விநாயகர் சிலைகள் வழி பாட்டுக்கு வைக்கப்படும். இதைத்தொடர்ந்து விநாயகர் சிலை தயாரிப்பு பணி பல்வேறு இடங்களில் தீவிரமாக நடந்து வருகிறது.

    இதில் தருமபுரி மாவட்டத்தில் பழைய தருமபுரி, சவூளூர் உள்ளிட்ட பகுதிகளில், வடமாநில தொழிலாளர்கள் தங்கி, விநாயகர் சிலை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வரு கின்றனர். இங்கு விநாயகர், கல்வெட்டு விநாயகர், ராஜ விநாயகர், தர்பார் விநாய கர், செண்டு வாகன விநாய கர், மூல வாகன விநாயகர், ஆதியோகி சிவன் விநாயகர், லட்சுமி விநாயகர், நந்தி விநாயகர், உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலை சுமார் 10 அடி உயரம் வரை வித வித மாக உருவாக்கப்படுகிறது. பெரும்பாலான சிலை களை வடிவமைக்கும் பணி கள் முடிந்து உள்ளன. அதில் அழகிய வர்ணம் தீட்டும் பணியில் தொழி லாளர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். இவை பார்வைக்காக தருமபுரி-பாலக்கோடு செல்லும் சாலை அருகே வைக்கப்பட்டுள்ளன.

    இது குறித்து விநாயகர் சிலை தயாரிப்பில் ஈடு பட்டுள்ள ராஜஸ்தான் மாநி லத்தை சேர்ந்த அர்ஜுன் என்பவர் கூறும்போது, விநாயகர் சிலைகளை, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாதவாறு எளிதில் தண்ணீரில் கரையக்கூடிய வகையில் தயாரித்து வருகிறோம். இதற்காக சாக்பீஸ் மாவு, தேங்காய் நார், பேப்பர்கூழ், ஆகியவை பயன்படுத்தப்படு கிறது. 2 அடி முதல் 10 அடி வரை விநாயகர் சிலைகள் பல மாடல்களில் தயாரிக்கப் பட்டு வருகின்றன.

    இவை ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்கப்படும். இன்னும் சில நாட்களில் சிலைகளில் வர்ணம் பூசும் வேலைகள் முடிந்து விற்பனைக்கு தயாராகி விடும். தற்போது 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலை கள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன. சிலைகள் வாங்க பல கிராமங்களில் இருந்து முன்கூட்டியே அட்வான்ஸ் கொடுத்து புக்கிங் செய்து உள்ளனர். மேலும் கிருஷ்ணகிரி, ஓசூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட பகுதி களில் இருந்து ஏராளமான ஆர்டர்கள் வந்துள்ளன.

    கடந்த ஆண்டுக்கு முன்பு கொரோனா வைரஸ் நோய் தாக்குதலால் தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டு குடும்பம் நடத்துவதற்கு வழியின்றி தவித்து வந்தோம். தற்போது கட்டுப்பாடுகள் இன்றி சகஜ நிலையில் உள்ளதால் இந்த வருடம் விநாயகர் சிலை விற்பனை அமோகமாக இருக்கும் என தெரிவித்தார்.

    Next Story
    ×