கிணற்றில் தவறி விழுந்த கூலித்தொழிலாளி சாவு

மது குடிக்கும் பழக்கம் இருப்பதால், அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வருவார்.வீட்டின் அருகே உள்ள சொந்தமான கிணற்றில் தவறி விழுந்தார்.
கிணற்றில் தவறி விழுந்த கூலித்தொழிலாளி சாவு
Published on

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள கே.ஜெட்டிஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி. இவரது மகன் ராமன் (வயது29). கூலித்தொழிலாளியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதால், அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வருவார்.

இந்த நிலையில் நேற்று மது குடித்துவிட்டு ராமன் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த அவர், வண்டியை நிறுத்திவிட்டு தள்ளாடியபடி நடந்து சென்றார்.

அப்போது அவர் வீட்டின் அருகே உள்ள அவருக்கு சொந்தமான கிணற்றில் தவறி விழுந்தார். இதில் நீரில் மூழ்கி ராமன் பரிதாபமாக உயிரிழந்தார். வீட்டிற்கு வண்டியில் வந்த மகனை காணவில்லை என்று பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடிபார்த்தபோது, கிணற்றில் அவர் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அப்போது அவர்கள் ராமனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இந்த சம்பவம் குறித்து பழனி பாப்பாரப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பாலக்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் ராமனின் உடலை கிணற்றில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com