என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடமாநில  தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை
    X

    வடமாநில தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை

    • ராம்பர்வேஸ்–குமாருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
    • இரவு திடீ ரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ராயக்கோட்டை, ஆக.27-

    பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம்பர்வேஸ்–குமார் (வயது21). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்–டையை அடுத்த தொட்டி நாயக்கன்அள்ளி கிராமத்தில் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் ராம்பர்வேஸ்–குமாருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவரது மனைவியை பீகாரில் மாநிலத்திலேயே விட்டுவிட்டு ராம்பர்வேஸ்–குமார் மட்டும் தொட்டி நாயக்கனஅள்ளிக்கு வந்தார்.

    இந்த நிலையில் அவர் அடிக்கடி தனது செல்–போனில் பேசி குடும்பத்–தினருடன் வந்ததாக தெரிகிறது. அப்போது ராம்பர்வேஸ்–குமாருக்கு, அவரது குடும்–பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட–தாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த காணப்பட்ட அவர் நேற்று இரவு திடீ ரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த ராயக்கோட்டை போலீசார் உடனே சமபவ இடத்திற்கு வந்து ராம்பர்வேஸ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரி–சோதனைக்காக ராயக்–கோட்டை அரசு ஆஸ்பத்–திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசா–ரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×