என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாகலஹள்ளி ஊராட்சியில் கான்கிரீட் சாலை அமைக்க பூமி பூஜை
- ரூ.6.30 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
- வன்னியர் சங்க கொடியினை பெரியசாமி ஏற்றி வைத்தார்.
தொப்பூர்,
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் பாகலஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட விநாயகபுரம் பகுதியில் நல்லம்பள்ளி மத்திய ஒன்றிய பா.ம.க சார்பில் பா.ம.க கொடியினை தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் ஏற்றி வைத்தார். வன்னியர் சங்க கொடியினை பெரியசாமி ஏற்றி வைத்தார்.
அதனை தொடர்ந்து விநாயகபுரம் பகுதியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.6.30 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டில் பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி, ஊராட்சி மன்ற தலைவர் முருகன், மாவட்ட துணை தலைவர் முத்துவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயகுமார், பொருளாளர் உத்திரகுமாரி, பசுமை தாயகம் சுப்பிரமணி, ராஜேந்திரன், வார்டு உறுப்பினர், பெரியண்ணன், கிளை தலைவர் மணி, கிளை பொருளாளர் முனிராஜ் மற்றும் பா.ம.க நிர்வாகிகள் பிரேம்குமார், வெற்றிவேல் மற்றும் பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.






