search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பருவமழை பொய்த்ததால் காய்ந்து வாடும் நிலக்கடலை
    X

    மழையின்றி காய்ந்து வாடி கிடக்கும் நிலக்கடலை செடியை படத்தில் காணலாம்.

    பருவமழை பொய்த்ததால் காய்ந்து வாடும் நிலக்கடலை

    • நிலக்கடலை செடிகள் தற்பொழுது மழையின்றி காய்ந்து வருகிறது.
    • நிலக்கடலை பயிரிட்டு பாதிப்புக்கு உள்ளாகியுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளான இண்டூர், தொப்பூர், மானியதஹள்ளி, ஏலகிரி, அதியமான் கோட்டை, நார்த்தம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இந்த ஆண்டு வைகாசி பட்டத்தில் மழை குறைந்ததால் நிலக்கடலை சாகுபடி ஆயிரம் ஏக்கருக்கும் குறைவான பரப்பளவில் மட்டுமே பயிரிடப்பட்டுள்ளது.

    இதனால் கடந்த ஆண்டுகளை விட நல்லம்பள்ளி வட்டாரத்தில் பெருமளவில் நிலக்கடலை மானாவரி சாகுபடி ஆனது குறைந்துள்ளது. அதனையும் தாண்டி ஒரு சில விவசாயிகள் பயிரிட்டனர்.

    தற்பொழுது ஆடி மாதத்தில் நல்லம்பள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பருவமழையானது முழுவதும் கைவிட்டதன் காரணமாக, ஆங்காங்கே மானாவாரியாக பயிரிட ப்பட்ட நிலக்கடலை செடிகள் தற்பொழுது மழையின்றி காய்ந்து வருகிறது.

    மேலும் போதிய மழை இன்மையின் காரணமாக எதிர்பார்த்த அளவு சாகு படியும் கிடைக்காது என்பது விவசாயிகள் இடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதனால் நிலக்கடலை பயிரிட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக் கப்படும் சூழல் ஏற்பட் டுள்ளது. இதனால் தமிழக அரசு ஆய்வு மேற்கொண்டு நிலக்கடலை பயிரிட்டு பாதிப்புக்கு உள்ளாகியுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×