என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறுமி உள்பட 3 பெண்கள் மாயம்
- கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சண்முகபிரியா வீட்டைவிட்டு வெளியே சென்றார்.
- தூங்க சென்றவர் மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது மாணவியை காணவில்லை.
தருமபுரி,
தருமபுரி கீழ்கண்ணியான்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் முக்கால்நாய்க்க ன்பட்டியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த சிறுமி திடீரென்று மாயமானார்.
இது குறித்து அவரது தந்தை மதிகோண்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் மாயமான சிறுமியை தேடிவருகின்றனர்.
இதே போன்று பாப்பி ரெட்டிப்பட்டி ஆவராங்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகள் சண்முகபிரியா (20). இவர் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எட், முதலாமாண்டு படித்து வருகிறார். கடந்த 22-ந் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சண்முகபிரியா வீட்டைவிட்டு வெளியே சென்றார். மாலை அவர் வீடு திரும்பி வரவில்லை. இது குறித்து மாணிக்கம் பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சண்முக பிரியாவை தேடிவருகின்றனர்.
இதேபோன்று தருமபுரி மாவட்டம் பெரும்பாலை பகுதியைச் சேர்ந்தவர் 17வயது சிறுமி. இவர் தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. படித்து வந்தார். கடந்த 23-ந் தேதி வீட்டில் தூங்க சென்றவர் மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது மாணவியை காணவில்லை.
இது குறித்து அவரது தந்தை பெரும்பாலை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.






