என் மலர்
உள்ளூர் செய்திகள்

வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்ட போது எடுத்த படம்.
கைப்பந்து போட்டியில் கடத்தூர் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
- சூப்பர் சீனியர் பிரிவுக்கான வாலிபால் இறுதி போட்டி கோபி நாதம்பட்டி கூட்ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது.
- வட்டார அளவிலான போட்டியில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.
கடத்தூர்,
தருமபுரி மாவட்டம், பாப்பி ரெட்டிப்பட்டி சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வருகிறது.
இதில் சூப்பர் சீனியர் பிரிவுக்கான வாலிபால் இறுதி போட்டி கோபி நாதம்பட்டி கூட்ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது.
இதில் கடத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அணியும், ராமியம் பட்டி பள்ளி அணியும் விளை யாடினர்.
இதில் கடத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வட்டார அளவிலான போட்டியில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.
Next Story






