என் மலர்
உள்ளூர் செய்திகள்

தருமபுரி போலீசார் குறைதீர்க்கும் முகாமில் 102 மனுக்கள் மீது உடனடி தீர்வு
- போலீஸ் அதிகாரிகள் நடத்திய இந்த விசாரணையில் 102 மனுக்கள் மீதும் உடனடி தீர்வு காணப்பட்டது.
- முகாமில் கொடுக்கப்பட்ட அனைத்து மனுக்களுக்கும் ஒரே நாளில் தீர்வு காணப் பட்டது குறிப்பிடத்தக்கது.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட போலீஸ் துறை சார்பில் வாரந்தோறும் புதன்கிழமை தருமபுரியில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு அலுவலக வளா கத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது.
அதன்படி நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் முன்னிலை வகித்தார்.
இந்த முகாமில் மாவட்டம் முழுவதும் 33 போலீஸ் நிலையங்களில் இருந்து தனித்தனியாக புகார் மனுதாரர்களை நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
நிலத்தகராறு, சொத்து தகராறு, அடிதடி தகராறு, பொது வழி பிரச்சினை, குடும்பத் தகராறு, ஊர் தகராறு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி கொடுக்கப்பட்ட மொத்தம் 102 புகார் மனுக்களும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு அறிவுறுத்தலின் பேரில் போலீஸ் அதிகாரி கள் மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் ஆகியோரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீஸ் அதிகாரிகள் நடத்திய இந்த விசாரணையில் 102 மனுக்கள் மீதும் உடனடி தீர்வு காணப்பட்டது.
முகாமில் கொடுக்கப்பட்ட அனைத்து மனுக்களுக்கும் ஒரே நாளில் தீர்வு காணப் பட்டது குறிப்பிடத்தக்கது.
வாரந்தோறும் நடை பெற்று வரும் இந்த சிறப்பு குறை தீர்க்கும் முகாம்களில் பெரும்பாலான மனுக்கள் குடும்ப பிரச்சினை மற்றும் பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக புகார் மனுக்கள் அதிகம் வருவது குறிப்பிடத்தக்கது.
முகாமில் தருமபுரி டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரங்க சாமி, சரவணன், செந்தில் குமார் உள்ளிட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீஸ் துறை அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






