என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறுமி உள்பட 2 பெண்கள் மாயம்
- பிளஸ்-2 வரை படித்து விட்டு தேர்வில் தேர்ச்சியடை யாததால் மறுதேர்வு எழுதி விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள மோது குலஅள்ளி கிராமம் உள்ள அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் 19 வயது மாணவி. இவர் பிளஸ்-2 வரை படித்து விட்டு தேர்வில் தேர்ச்சியடை யாததால் மறுதேர்வு எழுதி விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று மாணவி பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வெளியே சென்றார். ஆனால், அவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதுகுறித்து மாணவியின் தாய் பாலக்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
இதேபோன்று அதே பகுதியைச் சேர்ந்த 17வயது சிறுமி. 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். சம்பவத் தன்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து சிறுமியின் தாய், பாலக்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வருகின்றனர்.






