கல்லூரி மாணவி கடத்தல்

மாணவி நேற்று கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டைவிட்டு சென்றார். ஆனால், மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்ப வில்லை.போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவி கவுசல்யாவை தேடி வருகின்றனர்.
கல்லூரி மாணவி கடத்தல்
Published on

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் ஏரியூரை அடுத்த ஒட்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 19 வயது மாணவி. இவர் தனியார் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் மாணவி நேற்று கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டைவிட்டு சென்றார். ஆனால், மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்ப வில்லை. இதனால் பதறிப்போன மாணவியின் தாய் அவரை உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடிபார்த்தார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இதுகுறித்து மாணவியின் உறவினர் ஏரியூர் போலீஸ் நிலையத்தில் மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த அய்யண்ணன் மகன் சக்திவேல் (28) என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவி கவுசல்யாவை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com