என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாலக்கோட்டில் வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா பேட்டியளித்த காட்சி.
பருப்பு விலையை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும்- வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் பேட்டி
- பருப்பு விலை உயரக்கூடிய சூழலை மத்திய மாநில அரசுகள் கட்டுப் படுத்த வேண்டும்.
- விவசாய பொருட்களை சாமானியர்கள், வியாபாரி கள் இல்லாமல் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் பதுக்கி வைத்திருக்கிறார்கள்.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
கிருஷ்ணகிரியில் நடந்த வெடி விபத்து காரணமாக பெரும்பாலான பட்டாசு வியாபாரிகளின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது பட்டாசு வியாபாரிகளி டையை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
வணிகர் சங்க பிரதிநிதி கள் விவசாய சங்க பிரதிநிதி கள் துறை சார்ந்த அதிகாரி கள் உள்ளிட்டவர்களை குழு அமைத்து நெறிமுறை ப்படுத்தினால் விலைவாசி உயர்வை ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும்.
வரும் நாட்களில் வெங்காயம் விலை பெரும் அளவில் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பருப்பு விலை உயரக்கூடிய சூழலை மத்திய மாநில அரசுகள் கட்டுப் படுத்த வேண்டும். விலை வாசி உயர்வு ஏற்பட்டால் மக்கள் கடுமை யாக பாதிக்கப் படுவார்கள்.
விவசாய பொருட்களை சாமானியர்கள், வியாபாரி கள் இல்லாமல் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் பதுக்கி வைத்திருக்கிறார்கள். அவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால் சாமானியர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படு–கிறது. நெடுஞ்சாலை பகுதியில் சுங்க கட்டணம் பெரிய அளவில் வசூலிக்கப்படுகிறது. இதனை விரைவில் மத்திய அரசு குறைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






