என் மலர்
உள்ளூர் செய்திகள்

தருமபுரி தி.மு.க. சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்
- வருகிற 24-ந் தேதி காலை 10 மணிக்கு நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆய்வுக் கூட்டம் நடக்கிறது.
- வருகிற 26 -ந் தேதி ஏரியூர் ஒன்றிய தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆய்வுக் கூட்டம் ராம நாகம்மாள் மண்டபத்தில் நடக்கிறது.
தருமபுரி,
தருமபுரி தி.மு.க கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஒன்றிய நகர பேரூர் வாக்குச்சாவடி முகவர்கள் ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் அந்தந்த பகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். நாளை (23-ந் தேதி) காலை 10 மணிக்கு தருமபுரி நகர தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆய்வு கூட்டம் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடக்கிறது.
மதியம் 12 மணிக்கு அதியமான் கோட்டை நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய தி.மு.க. அலுவல கத்திலும், பிற்பகல் 2 மணிக்கு நல்லம்பள்ளி மத்திய ஒன்றிய தி.மு.க. அலுவலகத்திலும், முகவர்கள் ஆய்வு கூட்டம் நடக்கிறது.
வருகிற 24-ந் தேதி காலை 10 மணிக்கு நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆய்வுக் கூட்டம் நடக்கிறது.
இண்டூரில் மதியம் 12 மணிக்கும் தருமபுரி மேற்கு ஒன்றிய தி.மு.க. முகவர்கள் கூட்டம் மாவட்ட தி.மு.க. அலுவலகத்திலும், பிற்பகல் 2 மணிக்கு பாலக்கோடு கிழக்கு ஒன்றிய தி.மு.க. முகவர்கள் ஆய்வுக் கூட்டம் சோமன அள்ளியிலும் நடக்கிறது.
வருகிற 26 -ந் தேதி ஏரியூர் ஒன்றிய தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆய்வுக் கூட்டம் ராம நாகம்மாள் மண்டபத்திலும், மதியம் 12 மணிக்கு பென்னாகரம் தெற்கு பென்னாகரம் பேரூர் தி.மு.க. முகவர்கள் ஆய்வு கூட்டம் சமுதாய கூட்டத்திலும் நடக்கிறது. அன்றைய தினம் பென்னாகரம் வடக்கு பாப்பாரப்பட்டி பேரூர் தி.மு.க முகவர்கள் ஆய்வு கூட்டம் செங்குந்தர் மண்டபத்திலும் நடக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






