என் மலர்
தர்மபுரி
- நீண்ட நாட்களாக வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார்.
- மருத்து வமனையில் சின்னசாமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரி ழந்ததாக தெரிவித்தனர்.
பென்னாகரம்,
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள நல்லாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி (வயது 29), டிரைவர். இவருக்கு நீண்ட நாட்க ளாக குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் நீண்ட நாட்களாக வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று திடீரென ஏற்பட்ட வயிற்று வலியின் காரணமாக நல்லாம்பட்டியில் இருந்து சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது மருத்து வமனையில் சின்னசாமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரி ழந்ததாக தெரிவித்தனர்.
இது குறித்து பென்னாகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நிலம் சம்மந்தமாக தகராறு ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
- தட்டி கேட்ட வெங்கடேசனை , ஆத்திர மடைந்த உறவினர்கள் 7 பேரும் தாக்கினர்.
மாரண்டஅள்ளி,
தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே சீரியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 58), விவசாயி.இவருக்கும் இவரது மாமியார் குப்பம்மாளின் வாரிசுகளான குப்பன், மாதம்மாள் மற்றும் ஜெயராணி ஆகியோருக்கும் நிலம் சம்மந்தமாக தகராறு ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் வெங்க டேசனுக்கு தெரியாமல் அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பவருக்கு நிலத்தை விற்க விலை பேசி ஒப்பந்தம் செய்து, டிராக்டர் மூலம் நிலத்தை உழுதுள்ளனர். இதனை தட்டி கேட்ட வெங்கடேசனை , ஆத்திர மடைந்த உறவினர்கள் 7 பேரும் தாக்கினர்.
இது குறித்து வெங்க டேசன் மாரண்டஅள்ளி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குப்பம்மாள், மாதம்மாள், மாதேஷ், ஜெயராணி, மாதேஷ், ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவான செல்வம், ரவி ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.
- இருளர் இன மக்கள் மாவட்ட கலெக்டரிடம் அப்பகுதிக்கு தேவையான அடிப்படை வசதி மற்றும் பட்டா வேண்டி மனுக்களை கொடுத்தனர்.
- தண்டே குப்பம் கிராம அரசு தொடக்கப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் கும்மனூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட எல்லப்பன் பாறை பகுதியில் பழங்குடியினர் நலத்துறை நிதியின் கீழ் ஊரக வளர்ச்சித்துறை மூலமாக இருளர் இன மக்களுக்காக கட்டப்பட்டு வரும் வீடுகளை மாவட்ட கலெக்டர் சாந்தி கள ஆய்வு செய்தார்.
அப்போது அங்கு வசித்து வரும் இருளர் இன மக்கள் மாவட்ட கலெக்டரிடம் அப்பகுதிக்கு தேவையான அடிப்படை வசதி மற்றும் பட்டா வேண்டி மனுக்களை கொடுத்தனர்.மாவட்ட கலெக்டரும் தகுதியான மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பாலக்கோடு வட்டம் தண்டே குப்பம் கிராம அரசு தொடக்கப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார். அப்போது அப்பள்ளியில் படிக்கும் அனைவரும் இருளர் இன மாணவர்கள் எனவும், அனைவருடனும் காலை சிற்றுண்டி, அவர்க ளுக்கு பள்ளியில் உள்ள வசதிகள், ஆசிரியர் சொல்லி கொடுக்கும் பாடங் கள் தொடர்பாகவும், மேலும் வகுப்பறை சுவரில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துக்கள் தொடர் பாகவும் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
- 6 புதிய கடைகள் கட்ட தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி நிதி ஒதுக்கீடு செய்தார்.
- கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்களிடம் வலியுறுத்தினார் .
மாரண்டஅள்ளி,
தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி பஸ் நிலையத்தில் 2022-23 க்கான இயக்கம் மற்றும் பாராமரிப்பு திட்டத்தின் கீழ் ரூ.47 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் பேருந்து நிலையத்தில் 6 புதிய கடைகள் கட்ட தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி நிதி ஒதுக்கீடு செய்தார்.
அதனை தொடர்ந்து பணிகள் நடைப்பெற்று வந்த நிலையில் பேருந்து நிலைய கடைகளின் கட்டுமான பணிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி நேரடியாக ஆய்வு செய்து, கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்களிடம் வலியுறுத்தினார் .
மேலும் மாரண்டஅள்ளி பேரூராட்சிக்கு சென்ற கலெக்டர் கலைஞர் மகளிர் உரிமை திட்ட தொகை விண்ணப்பங்கள் குறித்து கேட்டறிந்து விண்ண ப்பங்கள் மீதான கள ஆய்வு பணியினை விரைவாக முடித்திட பேரூராட்சி பணி யாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வில் பேரூராட்சி செயல் அலுவலர் ஆயிஷா, இளநிலை பொறியாளர் முருகன், இளநிலை உதவியாளர் சம்பத், தங்கராஜ் கவுன்சிலர் வெங்கடேசன், பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
- அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கூழ் ஊற்றப்பட்டது.
- மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யபட்டு அம்மனுக்கு ஆடு பலியிடபட்டது.
தருமபுரி,
தருமபுரி நகர பகுதியில் அமைந்துள்ள வட்டார வளர்ச்சி நகர், உழவர் சந்தை எதிரில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 25-ந் தேதி வெள்ளிக்கிழமை கணபதி ஹோமத்துடன் கொடியேற்றுதல், மற்றும் பக்தர்களுக்கு கங்கனம் கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த 27-ந் தேதி முனியப்பனுக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி , சக்தி கரகம் அழைத்தல், பூ மிதித்தல் மற்றும் அம்மன் திருவீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வான வேடிக்கையுடன் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து முக்கிய நிகழ்வாக இன்று புரோக்கர் ஆபீஸ் மூன்று ரோடு சந்திப்பில் இருந்து கிருஷ்ணகிரி மெயின் ரோடு வழியாக பெண்கள் ஊர்வலமாக கூழ் குடம் எடுத்து கொண்டு முத்துமாரியம்மன் கோவிலை வந்தடைந்தனர்.
அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கூழ் ஊற்றப்பட்டது. மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யபட்டு அம்மனுக்கு ஆடு பலியிடபட்டது. இந்நிகழ்ச்சியில் நகரில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
- போலீசார் லாரி, வேன் மற்றும் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
- பறிமுதல் செய்யப்பட்ட 10 டன் ரேஷன் அரிசியை தருமபுரியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் போலீசார் ஒப்படைத்தனர்.
பாலக்கோடு,
குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை இயக்குநர் வன்னியப்பெருமாள் உத்தரவுப்படி ரேசன் அரிசி கடத்தலை தடுக்கும் பொருட்டு கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜிக்கு, கிடைத்த ரகசிய தகவலின்பேரில் எஸ்.பி தனிப்படை, காவல் துணைக் கண்காணிப்பாளரின் சிறப்பு காவல்படை மற்றும் தருமபுரி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் இணைந்து பாலக்கோடு அருகே வெள்ளிச்சந்தை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 180 மூட்டைகளில் 9 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இந்த லாரியை தொடர்ந்து வந்த வேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் 1 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் லாரி, வேன் மற்றும் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து லாரி மற்றும் வேனில் வந்த 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் தண்டுகாரனஅள்ளியை சேர்ந்த டிரைவர் சம்பத் (வயது 28), சொன்னம்பட்டியை சேர்ந்த மற்றொரு டிரைவர் கோகுல் (20), கிளீனர் அசோக்குமார் (21) என்பதும், தருமபுரியில் இருந்து கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள், 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட 10 டன் ரேஷன் அரிசியை தருமபுரியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் போலீசார் ஒப்படைத்தனர். இந்த ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக காரிமங்கலத்தை சேர்ந்த முருகானந்தம், கிருஷ்ணகிரி மாவட்டம் சந்தனூரைச் சேர்ந்த கைலாசம் ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
- 2.5 கிலோ மீட்டர் தூரம் புதிய தார்சாலை அமைக்க 1.47 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
- தொடக்க பணிகளை பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி கடந்த மாதம் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் உள்ள 8 வார்டுகளுக்கு உட்பட்ட முத்துகவுண்டர் தெரு, ரேஷன்கடை தெரு, தீர்த்தகிரி நகர், இடுகாட்டுக்கு செல்லும் பாதை, எச்.பி.கேஸ் ஏஜென்சி தெரு, கோட்டை தெரு, கோபால்செட்டி தெரு , கணம் பள்ளிதெரு, மணியகாரன் கொட்டாய், உள்ளிட்ட பகுதிகளில் நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2.5 கிலோ மீட்டர் தூரம் புதிய தார்சாலை அமைக்க 1.47 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனையடுத்து தொடக்க பணிகளை பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி கடந்த மாதம் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.இப்பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்த நிலையில் கோபால் செட்டி தெருவில் நடைபெற்று வரும் சாலை பணிகளை பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது சாலை தரமானதாகவும், விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது உதவி பொறியாளர் பழனி உடன் இருந்தார்.
- பருத்தி குவிண்டால் ரூ.6,296 முதல் ரூ.7,296 வரையும், கொட்டு பருத்தி ரூ.4,219 முதல் 5,426 வரையும் ஏலம் போனது.
- இந்த ஏலத்தில் ரூ.20 லட்சத்திற்கு பருத்தி விற்பனையானது.
அரூர்,
தருமபுரி மாவட்டம், அரூர் கச்சேரி மேட்டில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இதில் அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் 800 மூட்டை பருத்தியை விற்ப னைக்கு கொண்டு வந்தனர்.
பருத்தி குவிண்டால் ரூ.6,296 முதல் ரூ.7,296 வரையும், கொட்டு பருத்தி ரூ.4,219 முதல் 5,426 வரையும் ஏலம் போனது. இந்த ஏலத்தில் ரூ.20 லட்சத்திற்கு பருத்தி விற்பனையானது.
- பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் பணிக்குழு தலைவர் ஆடிட்டர் கல்யாணசுந்தரம் தொடங்கி வைத்தார்.
- பின்னர் அவரும், கட்சியி னரோடு இணைந்து ரத்த தானம் செய்தார்.
தொப்பூர்,
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாசின் திருமண நாளை முன்னிட்டு, பா.ம.க தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் சார்பில், தருமபுரி கலெக்டர் அலுவ லகம் எதிரே உள்ள, தனியார் ரத்த வங்கியில், ரத்ததான முகாம் நடைபெற்றது.
முன்னதாக இந்த ரத்த தான முகாமை, பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் பணிக்குழு தலைவர் ஆடிட்டர் கல்யாணசுந்தரம் தொடங்கி வைத்தார். பின்னர் அவரும், கட்சியி னரோடு இணைந்து ரத்த தானம் செய்தார்.
தொடர்ந்து முகாமில் ரத்த தானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கவுர விக்கப்பட்டது. இதில் பா.ம.க நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கியதோடு மட்டுமல்லாமல், மற்றவர்களும் இன்னுயிர் காக்க ரத்த தானம் வழங்க வேண்டிய அவசியம் குறித்தும் தெரிவித்தனர்.
- அரூர் பேருந்து நிலையத்தில் உள்ள வர்ணீஸ்வரர் ஆலயத்திலும் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
- இதில் ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அரூர்,
தருமபுரி மாவட்டம் அரூர் கடைவீதியில் வாணீஸ்வரி ஸ்ரீவாணீஸ்வரர் கோவில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நந்திக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், பழங்கள், பூக்கள், உள்ளிட்டவற்றை கொண்டு அர்ச்சனைகளும் சிறப்பு அபிஷேகமும் செய்யப்பட்டது. இதில் ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை வாணீஸ்வரர் வழிப்பாடு சங்க உறுப்பினர்கள், தர்ம கர்த்தா முடிமன்னன், அர்ச்ச கர்கள் நாகராஜ், ரகு ஆகி யோர் செய்திருந்தனர். இதே போல் அரூர் பேருந்து நிலையத்தில் உள்ள வர்ணீஸ்வரர் ஆலயத்திலும் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
- மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உதவி மேலாளர் பதவி உயர்வில் உள்ள 3:1 நடைமுறையை ரத்து செய்திட வேண்டும்.
- கடந்த ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில்ஏற்று கொண்டவாறு கல்வி கட்டிடங்களை அரசு நிர்ண யிக்கும் அளவில் அனு மதிக்க வேண்டும்.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்பு ஊழியர்கள் தர்ணா போராட்டம் செய்தனர்.
இதில் கடந்த காலங்களில் வழங்கப்பட்டதை போல மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு 20 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும்.
கடந்த ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் ஏற்று கொண்டவாறு கல்வி கட்டிடங்களை அரசு நிர்ண யிக்கும் அளவில் அனுமதிக்க வேண்டும்.
மாநில தலைமை கூட்டுறவு வங்கி மற்றும் 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றை இணைத்து தமிழ்நாடு கூட்டுறவு வங்கி என உருவாக்கிட வேண்டும்.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அரசு தலைமைச் செயலாளர் வெளியிட்ட ஆணைப்படி கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு முதுநிலை பட்டியலை வெளியிட வேண்டும்.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உதவி மேலாளர் பதவி உயர்வில் உள்ள 3:1 நடைமுறையை ரத்து செய்திட வேண்டும் போன்ற 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட மத் திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
இந்த தர்ணா போராட்டத்தில் மாவட்ட தோழமை சங்கத் தலைவர்கள் அறிவழகன், மாநில துணைத்தலைவர் கரோலின் ராஜ், மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் வடிவேல், பொருளாளர் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
- அரசு மதுபானக்கடை அமைக்கப்பட்டால், மாணவர்கள் பாதிக் கப்படுவார்கள்.
- பள்ளி மாணவிகள் கேலி, கிண்டலுக்கு உள்ளாக்கப்ப டுவார்கள்.
தருமபுரி,
அரசு மதுபானக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காரியப்பன அள்ளி கிராம மக்கள் தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி யிடம் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறியிருப் பதாவது:-
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் காரியப்பன அள்ளி கிராமத்தில் அரசு மதுபானக்கடை அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதியதாக மதுபானக்கடை திறக்க உள்ள இடம் அரசு உயர் நிலைப்பள்ளிக்கும், அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கும், இடை யில் உள்ளது.
இங்கு அரசு மதுபானக்கடை அமைக்கப்பட் டால், மாணவர்கள் பாதிக் கப்படுவார்கள். மேலும் பள்ளி மாணவிகள் கேலி, கிண்டலுக்கு உள்ளாக்கப்ப டுவார்கள். பெண்களுக்கும், பொது மக்களுக்கும் மது பான கடையால் பாதிப்பு ஏற்படும்.
எனவே டாஸ்மாக் நிர்வாகம் எங்கள் பகுதியில் மதுபானக்கடை அமைக்கும் முடிவை கைவிடவேண்டும் என மனுவில் குறிப்பிட் டுள்ளனர்.






