என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீரியம்பட்டி கிராமத்தில் நிலத்தகராறில் விவசாயியை தாக்கிய 5 பேர் கைது-2 பேர் தலைமறைவு
    X

    சீரியம்பட்டி கிராமத்தில் நிலத்தகராறில் விவசாயியை தாக்கிய 5 பேர் கைது-2 பேர் தலைமறைவு

    • நிலம் சம்மந்தமாக தகராறு ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
    • தட்டி கேட்ட வெங்கடேசனை , ஆத்திர மடைந்த உறவினர்கள் 7 பேரும் தாக்கினர்.

    மாரண்டஅள்ளி,

    தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே சீரியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 58), விவசாயி.இவருக்கும் இவரது மாமியார் குப்பம்மாளின் வாரிசுகளான குப்பன், மாதம்மாள் மற்றும் ஜெயராணி ஆகியோருக்கும் நிலம் சம்மந்தமாக தகராறு ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

    இந்நிலையில் வெங்க டேசனுக்கு தெரியாமல் அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பவருக்கு நிலத்தை விற்க விலை பேசி ஒப்பந்தம் செய்து, டிராக்டர் மூலம் நிலத்தை உழுதுள்ளனர். இதனை தட்டி கேட்ட வெங்கடேசனை , ஆத்திர மடைந்த உறவினர்கள் 7 பேரும் தாக்கினர்.

    இது குறித்து வெங்க டேசன் மாரண்டஅள்ளி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குப்பம்மாள், மாதம்மாள், மாதேஷ், ஜெயராணி, மாதேஷ், ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவான செல்வம், ரவி ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×