என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வயிற்று வலியால்  டிரைவர் சாவு
    X

    வயிற்று வலியால் டிரைவர் சாவு

    • நீண்ட நாட்களாக வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார்.
    • மருத்து வமனையில் சின்னசாமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரி ழந்ததாக தெரிவித்தனர்.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள நல்லாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி (வயது 29), டிரைவர். இவருக்கு நீண்ட நாட்க ளாக குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் நீண்ட நாட்களாக வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று திடீரென ஏற்பட்ட வயிற்று வலியின் காரணமாக நல்லாம்பட்டியில் இருந்து சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது மருத்து வமனையில் சின்னசாமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரி ழந்ததாக தெரிவித்தனர்.

    இது குறித்து பென்னாகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×