என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாரண்ட அள்ளி பஸ் நிலையத்தில் நடைபெறும் கட்டுமான பணிகளை கலெக்டர் சாந்தி ஆய்வு செய்த காட்சி.
மாரண்டஅள்ளி பஸ் நிலையத்தில் கட்டுமான பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
- 6 புதிய கடைகள் கட்ட தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி நிதி ஒதுக்கீடு செய்தார்.
- கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்களிடம் வலியுறுத்தினார் .
மாரண்டஅள்ளி,
தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி பஸ் நிலையத்தில் 2022-23 க்கான இயக்கம் மற்றும் பாராமரிப்பு திட்டத்தின் கீழ் ரூ.47 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் பேருந்து நிலையத்தில் 6 புதிய கடைகள் கட்ட தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி நிதி ஒதுக்கீடு செய்தார்.
அதனை தொடர்ந்து பணிகள் நடைப்பெற்று வந்த நிலையில் பேருந்து நிலைய கடைகளின் கட்டுமான பணிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி நேரடியாக ஆய்வு செய்து, கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்களிடம் வலியுறுத்தினார் .
மேலும் மாரண்டஅள்ளி பேரூராட்சிக்கு சென்ற கலெக்டர் கலைஞர் மகளிர் உரிமை திட்ட தொகை விண்ணப்பங்கள் குறித்து கேட்டறிந்து விண்ண ப்பங்கள் மீதான கள ஆய்வு பணியினை விரைவாக முடித்திட பேரூராட்சி பணி யாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வில் பேரூராட்சி செயல் அலுவலர் ஆயிஷா, இளநிலை பொறியாளர் முருகன், இளநிலை உதவியாளர் சம்பத், தங்கராஜ் கவுன்சிலர் வெங்கடேசன், பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.






